Monday, April 09, 2007

மறுபடியும் கிறுக்கா?
பேசாமல் இருந்து இருப்பேன்.
இந்த செல்லிதான்  ....இவங்க வேற 
என்னை மீண்டும் கூப்பிட்டாங்க.
அவங்களுக்கு சந்தேகம் நிஜமாவே நான் வியர்டூதானா.
இல்லை சும்மாக்காட்டியும் நானும் நானும்னு சொன்னேனா?
அப்படினு உங்க பேரைப் போட்டுட்டேன்.
எழுதிடுங்கனு ஒரு வார்த்தை சொல்லிட்டாங்க.
நமக்கென்ன,
கிறுக்கா எழுதறது கஷ்டமே இல்லை.
உண்மையைச் சொல்றதில என்ன வம்பு?
இல்லை.
எதைச் சொல்ல எதைவிட?
எப்பவும் இருக்கிற கிறுக்குத்தனத்தைவிட பசிக் கிறுக்கு
அதிகம்.
பசி வந்தால் இருபது முப்பதும் பறந்து போய் விடும்.
கண்டது ,காணாதது எல்லாம் சாப்பிடத் தோணும்.
முக்கால்வாசி சாப்பிடமுடியாததாக இருக்கும்.
இதற்காகவே பசங்க உஷாரா
கொஞ்சம் ரஸ்க், தண்ணீர் பாட்டில் எல்லாம் எடுத்து
வைத்துக் கொண்டுதான் வெளில கூட்டிப் போறது.
அதுவும் ஸ்விஸ்ல சாகலேட் கடைப் பக்கம்
போகிறபோது சின்னவன் தான் போட்டு இருக்கிற தொப்பிய என்தலைமேல போட்டே கூட்டிப் போவான்.:-)
கொஞ்ச தொலவு நடந்தப்புறம் தெரியும்
ஏன் அப்படிப் பண்ணினான் என்று
தாகமும் தாங்காம சுகர்ஃப்ரீ ட்ரின்க்னு எதையோ அவசரத்துக்குக் குடிச்சுட்டு,
அன்னி ராத்திரி எல்லாரையும்
பதைக்க வச்ச பெருமையும் எனக்கு உண்டு.
திகிலரசினு என்னை மருமகள் இருவரும் பார்க்க இதே காரணம்.
பெரிய மகனோட போகும் போது
ஒரு பாட்சாவும் பலிக்காது.
சாப்பிடு, அப்போதான் வெளில போகமுடியும்னு
கறாரா சொல்லிடுவான்.
அவன் ஊரிலேயோ பானிப்பூரி
(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்)
ஃபலாபல் நல்லாவே இருக்கும்.
அதுவும் ,கராமா,டெய்ரா சைடு போயிட்டாக் கேக்கவே வேண்டாம்.
மாமியாரை நாலு இடம் கூட்டிப் போகணூம்
என்கிற ஆசையில் என் மருமகள்
தங்கம் விற்கும் கோல்ட்சூக் பக்கம்
போகும்போது எனக்கு கண்ணில் பட்டது
என்னவோ மிளகாய்பஜ்ஜி
ஸ்டால்தான்.
விளைவு கனடியன் ஹஸ்பிடலில்
8 மணி நேர ஸ்டே.
இனிமே எல்லாரும் படு உஷாராயிடுவாங்க.
சொல்லாம விட்டது, வாசலில் நன்கொடை கேட்டுவரும்
நபர்களுக்குக் கர்ணி வேஷம் போடுவது.
நான் பணம் கொடுத்துப் படிக்காத மாணவன்,
திருப்பதி போகாத(என்னைவிட) வயசான அம்மா
திருமணம் நடத்தாத இன்னும் அதே இடத்தில் பூ விற்கும் பூக்காரி,
சூறைத்தேங்காய் உடைக்க எப்போதுமே 50ரூபாய் என்னிடம் வாங்கிவிடும் பிள்ளையார் கோவில் பையன்,
இன்னும் என் லூசுத்தனத்தால்
பிழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நம்ம வீட்டுமாங்காய் அறுக்க வருபவனிடமே ஏன்ப்பா இங்கே கொஞ்சம் 30 மாங்காய்
வச்சுட்டுப் போறீயானு கேக்கிற அப்பிராணிப்பா:-)
இது போதும் இப்போதைக்கு.
அப்புறம் எனக்கு இத்தனை நாளா
கிடைச்ச கிறுக்கு அதிலேயும் அசட்டுக் கிறுக்கு
என்கிற பெருமையோடு நிறுத்திக்கலாம்:-)
.


13 comments:

இலவசக்கொத்தனார் said...

இந்த அசடும் அழகுதான் போங்க!

துளசி கோபால் said...

//சின்னவன் தான் போட்டு இருக்கிற தொப்பிய
என்தலைமேல போட்டே கூட்டிப் போவான்.:-)//

ஹா ஹா ஹா ஹா

கிறுக்கே நீ வாழ்க. நின் கிறுக்கும் வாழ்க!!!

வல்லிசிம்ஹன் said...

அழகு. ஆனாலும் அசடு. அதுதானே
சொல்ல வரீங்க.
கிறுக்குனு சொல்லக் கூட ரெண்டு பதிவு வேண்டி இருக்கு பாருங்க கொத்ஸ்.

வல்லிசிம்ஹன் said...

தன்யளானேன் தங்கச்சி.
சீஸ் ஃபாக்டரிக்குள்ள கூட்டிப் போகவே இல்லை:-0)
நன்றி,ன்றி,றி.

ambi said...

//சின்னவன் தான் போட்டு இருக்கிற தொப்பிய என்தலைமேல போட்டே கூட்டிப் போவான்//

ஹா ஹா ஹா ஹா. :)

//கிறுக்கே நீ வாழ்க. நின் கிறுக்கும் வாழ்க!!! //
@thulasi teacher, ஹிஹி, உண்மைய உரக்க சொன்னதுக்கு சபாஷ்!. :p

மதுரையம்பதி said...

ஆஹா! எத்தனை பேர் வந்து கேட்டாலும், இல்லை எனாது அசட்டுத்தனங்களை வாரீ வழங்குகிறீர்களே, நீங்கள் கர்ணிதான்..

திருவிளையாடல்கள் சூப்பர்தான் போங்க.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அம்பி.
கிறுக்குத்தனம் ரொம்ப முக்கியம். நல்ல விஷயங்கள் மட்டும் காதில விழும்.

உங்க கல்யாணத்துக்கு வந்து இருந்தா முதல் பந்திக்கு நாந்தான் உட்கார்ந்து இருப்பேன்:-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
இதுவும் ஒரு விபரீத போக்கு.
எல்லோரும் போர்ட் மாட்டினாப்போல நம்ம வீட்டுக்கு வரதைப் பார்த்துத் தான்
சந்தேகமே வந்தது.
இப்போ தேறிட்டேன்.

ambi said...

//உங்க கல்யாணத்துக்கு வந்து இருந்தா முதல் பந்திக்கு நாந்தான் உட்கார்ந்து இருப்பேன்//

அடடா! அதுக்கென்ன, நீங்க ஊருக்கு வந்தவுடனே ஒரு விருந்து வச்சுட்டா போச்சு. :)

கீதா சாம்பசிவம் said...

mmmmm, Valli, Ambi will give you feast not in his house. Instead he will ask you to come to TRC's house. Isn't it Ambi? :P

கீதா சாம்பசிவம் said...

everybody is weird in one way or other.

வல்லிசிம்ஹன் said...

அதே அதே. கீதா.

வல்லிசிம்ஹன் said...

நல்லதாப் போச்சு கீதா.
அவரையும் சேர்த்துப் பார்த்தால்
இன்னும் சந்தோஷம்:-)