About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Friday, December 08, 2006

தாத்தா பாட்டி எக்ஸ்பிரஸ்உங்களுக்குத் தெரியுமா சென்னையிலிருந்து நாள் தோறும்,
மாதங்கள் தோறும் இரவு புறப்படும்
விமானங்கள் பாட்டி,தாத்தாக்களைச் சுமந்து கொண்டு அமெரிக்காவோ,
இங்கிலாந்தோ,ஆஸ்திரேலியாவொ
போகின்றன.
அவைகளுக்கு கிராண்ட் பேரண்ட்ஸ்
எக்ஸ்பிரஸ் என்றும் பெயர்.

எதற்கு அந்தப் பெயர் வைத்தார்கள் என்பது
ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை.

இதுவரை விமானமே ஏறியிருக்க மாட்டார்கள்.
ஆனால் ஒரு பெண்ணொ இல்லை மகனோ

தங்கள் குழந்தைச் செல்வங்களை எதிபார்க்கிறார்கள்
என்றால் முதல் டெலிபோன் இரண்டு சைட் அம்மா அப்பாவுக்குத்தான்.

அப்போது ஆரம்பிக்கும் இந்தப் பயணத்தின்
விறுவிறுப்பு.
அமெரிகன் தூதரக வாசல், நேர்காணல்,அத்ற்கான படபடப்பு,
டிடி சரியா இருக்கா,
பாஸ்போர்ட்?

சரியாப் பார்க்கிறபடி உடை உடுத்தி இருக்கோமா/
அவன்(தூதரக அதிகாரிகள்)
ஏதாவது இடக்கு மடக்கா கேப்பானோ.
அதற்குள்
ஏற்கனவே போய் வந்தவர்கள் சொல்லும் புத்திமதிகள் பயமுறுத்தல்கள்
... ''உண்மையைப் பேசினா விட்டு விடுவான்''

எதுக்கும் பேரன் பிறப்பதற்கு உதவிக்குப்
போறேன்னு சொல்லாதீங்க.''

விஸிட் விசானு சொல்லிடுங்க.'

சில சமயம் கொடுக்க மாட்டான்.
எதுக்கும்ம்...'' இப்படித் தொடரும்.
ஒரு வழியா அங்கே விசா கௌவுண்டரில்
இரண்டே இரண்டு கேள்விகளுக்கு' வழிந்துவிட்டு'

அட இத்தனை சுலபமா விசா கிடைச்சுடுத்தே
என்று அதிசயப் பட்டால்
ஓ, உங்களுக்கு வயசு அறுபதுக்குப் பக்கம்

இல்லையா, அதான் மல்டிபிள் எண்ட்ரி கொடுத்திட்டான்
என்று சைட்ல காமெண்ட் கேக்கும்.

இதுக்கா இத்தனைப் பதட்டம் என்று
யோசிக்கும்போதுதான் புரியும்
நாம் சாதாரண இந்தியப் பிரஜைகள்
அவங்க ஊருக்கு ,அவங்க டூரிஸத்துக்கு
இன்னும் கொஞ்சமா இருந்தாலும்

பணம் சேர்க்கப் போறொம்னு மண்டையில் உறையும்படி
அறியாமை என்னும் பெரிய ஆமை
சொல்லும்.
அவசரம் அவசரமாக வாங்கிச் சேர்த்த பொருட்களுடன்,

நாம் மெதுவாக நாட்களைக் கடந்து

கிளம்பும் நேரமும் வந்துவிடும்.

அந்தப்பக்கம் பிள்ளையார், இந்தப் பக்கம் ஆஞ்சனேயர்னு எல்லா சாமிகள் கிட்டயும் சொல்லிட்டுக் கிளம்பி

நம்ம ஆகிருதிக்கும், முட்டு வலிக்கும் பொருந்தாத
எகானமி சீட்டில் அமர்ந்து,
பக்கத்தில் இருக்கிற வெள்ளைக்காரன் மேல் படாமல்

சுருக்கிக் கொண்டு,தூங்கும் நேரம் பார்த்து எழுப்பும்
விமானப் பணிப்பெண் கொடுக்கும் மசாலா மிகுந்த'' ஆசிய
சைவ உணவை''க் கடித்து,
நாசூக்காக வாய் துடைத்து
மறுபடியும் அந்தப் பெண் வந்து சாப்பாட்டுத் தட்டை
விலக்கும் வரை மோட்டு(விமான) வளையைப் பார்த்து

சாமி, கடவுளே எல்லாம் சரியா இருக்கணும்னு
வேண்டிக் கொண்டு இறங்கி,

கஷ்(ஸ்)டம் கடந்து,
அப்பாடா என்று நிமிரும்போது
பாட்டீ...
என்னும் குரல் காதில் விழும். முன்னைக்கு இப்போது
மிகவும் வளர்ந்துவிட்ட பேராண்டியைப்
பார்க்கும்போது அத்தனை களைப்பும்
எங்கேயோ போகும்.

சீக்கிரமே மற்ற இருவரையும் இன்னும்
ரெண்டு பெற்றுக் கொள்ளச் சொல்ல வேண்டும்
என்ற எண்ணத்தோடு ...
பயணம் தொடரும்.