Blog Archive

Tuesday, May 10, 2016

அனுபவம் பலவிதம்..அமெரிக்கா

   இன்று  படம் பார்க்க நினைத்தது  பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால்.

பாத்திரங்களைத் தேய்க்கும்
 டிஷ்வாஷர் இல்லாமல்  கைகளால் தேய்க்கும் பணியும் பிடித்துவிட்டது.
 
நம் ஊர் எவ்வளவோ  தேவலை. உடனே வராவிட்டாலும் அடுத்த நாளாவது வருவார்கள்.
இங்கே  வேலை தெரிந்தவர்கள் குறைந்துவிட்டார்களா. இல்லை அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் குறைந்து இருக்கிறதா தெரியவில்லை.
மே ஒன்றாம் தேதி உழைப்பை நிறுத்தின இயந்திரம் இன்று வரை
பழுது பார்க்கப் படாமல் இருக்கிறது.

இத்தனைக்கும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட  மெஷின்.
வாரண்டி  நாட்கள் கூட முடியவில்லை.
நாளை வருவதாக அந்தக் கம்பெனி சொல்லி இருக்கிறது.

அதுவரை பெண் கைகள் ஓயும் வரை தேய்த்து விடுகிறாள்.
மீதியை  நான் செய்கிறேன்.
சாப்பிடாமல் இருக்க முடியுமா.
பாத்திரங்கள் தான் உபயோகிக்காமல் என்ன வேலை தான் நடக்கும்.

அவள் மும்முரத்தில்  அவள் அப்பாவைத்தான் பார்க்கிறேன்.
 நாளைப் பொழுதாவது  பணி செய்பவர் வரட்டும்.
இதுவும் ஒரு அனுபவம் தான்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

4 comments:

கோமதி அரசு said...

நாளை பணி செய்பவர் வரட்டும் கஷ்டம் நீங்கட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

விரைவில் சரியாகட்டும்.....

ஸ்ரீராம். said...

அங்கெல்லாம் இன்னும் கடமையாக வந்து விடுவார்கள் என்றுதான் நானும் நம்பி இருந்தேன். மதுரைத் தமிழனின் பதில்களையும் முக நூலில் படித்தேன். சீக்கிரம் சரியாகட்டும் ; தொல்லை நீங்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

இன்று வந்து விட்டார்கள்.
சரியும் செய்துவிட்டார்கள். மின் ஓட்டத்தில் ஏதோ பிரச்சினையாம்.
பாவம் மகளுக்கு இரட்டை வேலையாகிவிட்டது.
நன்றி ஸ்ரீராம். உபகரணங்கள் உதவியும் உபத்திரவமும் தான்.