About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, January 18, 2015

எனக்கு வயசாகாவில்லை

92  வயது  பாட்டி
இவங்களுக்கு அத்தனை வயசாகவில்லை .என்னை மாதிரிச்  சின்ன வயசுதான்                                           

இந்த ஊரில் பொதுவாக ஐரோப்பாவில் நிறைய கிழவிகள் கண்ணில் தென் படுகிறார்கள். கடைகள்,தெருக்கள்,சிக்னல் ஜங்க்ஷன்கள் இவற்றில் பின்னால் ஒரு தள்ளு வண்டியில் ஷாப்பிங் செய்த பொருட்களோடு மெல்ல நகர்வார்கள். பாதி முதுகு வளைந்த நிலையிலும் அலுப்பு அவர்கள் முகத்தில் தென் படாது.
நான் என் அவ்விதம் இல்லை என்பதற்கு இன்னும் விடை தேடிக் கொண்டிருக்கிறேன்.  நாங்கள் இருப்பது இரண்டாம் மாடியில்.  பளுதூக்கி கிடையாது. இந்தக் குளிருக்கு  தோள்  மேல்  சுமக்கும் மேலங்கியின் கணம் தோளை  அழுத்துகிறது. சுழன்றடிக்கும் காற்றுக்கு தலையில் ராபின் ஹுட் குல்லா. அதற்குக் கீழே  தெரியும் போட்டு  பலபேர் கவனத்தை இழுக்கிறது. .இப்பொழுது போட்டு வைக்காமலேயே போகப் பழகிக் கொண்டுவிட்டேன்.
துணையோடு நடந்த நாட்களிலும்  அவர் முன்னே செல்ல பத்தடி பின்தான் வருவேன். இப்போது அதுவும் இல்லாமல் நடக்கக் கற்க வேண்டும் .
மருமகளோ மகனோ குழந்தையோ செல்லும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தனியே சென்று வாருங்கள் அம்மா. அப்பத்தான் தைரியம் வரும் என்று மருமகள் நிறையச் சொல்லிப் பார்க்கிறார்.  செய்வேன். ஏனோ 70 வயது மதுரைப் பாட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டு சாலைகளைக் கடந்த நினைவு வருகிறது. பாட்டிக்குக் சர்க்கரை   நோய இருந்ததால் சட்டென்று தள்ளாடுவார்.  ஆண்டா  கெட்டியாப் பாட்டியைப் பிடிச்சுக்கோ என்று  சொல்வது இன்னும் காதில் விழுகிறது
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

16 comments:

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, நான் தான் இந்தப் பதிவை எழுதிட்டேனோனு ஒரு நிமிஷம் யோசிச்சேன். :)))) எனக்கும் வயசாகலை! :)

ஸ்ரீராம். said...

உடலுக்கு வயதானாலும் மனதுக்கு வயதாகாமல் பார்த்துக் கொண்டால் போதும்!

சொல்கிறேனே தவிர, உங்கள் வயதில் நாங்கள் எப்படி இருப்போமோ...! சொல்வது எளிது!

கோமதி அரசு said...

அங்கெல்லாம் வயதானவர்கள் கடைகளில் வேலைப் பார்க்கிறார்கள்.
அவர்கள் நடக்க முடியாவிட்டால் மால்களில் பாட்டரியால் இயங்கும் வீல்சேர்கள் உள்ளன வீல்சேர்களில் போய் கடைகளில் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு கார் பார்க் செய்ய வசதி உள்ளது.

வயதானாலும் மனதையரியம் அவர்களை இயங்க வைக்கிறது.

அவர்களிடம் நாம கற்றுக் கொள்ள வேண்டியது சுயமாய் இயங்க.


புதுகைத் தென்றல் said...

நம்ம நாட்டுல வயசானா இப்படித்தான் இருக்கணூம், அப்படித்தான் செய்யணும்னு சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டதாலேயோ இல்லாட்டி அந்த மாதிரி நடந்து கொண்டவர்களையே பார்த்து வளர்ந்ததாலோ கூட இருக்கலாம்ல வல்லிம்மா.

எல்லாம் ஜகஜகமாகிடும்.

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் வயதாகாமல் இருந்தால் போதும் அம்மா...

yathavan nambi said...

முதுமை விடும் மூச்சினை நாச்சியார் சுகம் தரும் வகையில் பதிவாக்கி சென்றுள்ளார்!
மனதில் உறுதி வேண்டும் - பாரதியார்.
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

ராமலக்ஷ்மி said...

உண்மைதான். மனத் தைரியமே வழிநடத்துகிறது அந்த வயதான பெண்மணிகளை.

Durai A said...

இளமையில் சுதந்திரம் முக்கிய காரணம் ?

புதுகைத் தென்றல் said...

என் மனசுல பட்டதை பதிவாக்கிருக்கேன் வல்லிம்மா. படிச்சு கருத்து சொல்லுங்க.

http://pudugaithendral.blogspot.in/2015/01/blog-post_20.html

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, எனக்குக் கூட தோன்றியது.
கீதாதானே வலையுலக பேபி என்று]]]]]]]]]]]]]]]]]

வல்லிசிம்ஹன் said...

நன்றாக இருப்பீர்கள் ஸ்ரீராம் எழுதுபவர்களுக்கு வயதாவதே இல்லை. உங்களுக்கு தெரியாதா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கோமதி. நல்ல உரம் உள்ள உடலும் உள்ளமும் திடமாகவே இருக்கிறார்கள். நம் சூழ்நிலையும் அவர்கள் சூழ்நிலையும் வேறல்லவா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி யாதவன் நம்பி. உறுதியும் உரமும் வர அந்தக் கிருஷ்ணனையே நம்பி

வல்லிசிம்ஹன் said...

உண்மையே ராமலக்ஷ்மி. அவர்கள் ஊர்.அவர்கள் தேசம். நம்மூரில் எனக்கு பிரச்சினை கிடையாது. நம் ஊர் சாலைகளில் இவர்கள் நடப்பார்களா என்பதும் சந்தேகம்தான்.(************

வல்லிசிம்ஹன் said...

To Duraiஇளமையில் சுதந்திரம் உடலில் உண்டு. அப்போது மனத்தைக் கட்டுப் படுத்த வயதான முதியோர் வீட்டில் இருந்தார்கள் அவர்களை விட்டு வெ ளியே கிளம்புவது பிரம்மப் பிரயத்தனம். கிடைத்த நொடியில் ஓடிவிடுவேன். இங்கே ஊரும் புதிது. இவர்கள் பேசும் ஆங்கிலமும் ,நாம் சொல்வதை அவர்கள் புரிந்து கொள்வதும் வேடிக்கை. மனத்தயக்கத்தை உதறி வெளியே வரவேண்டியதுதான் துரை .

வல்லிசிம்ஹன் said...

Read it Kalama. you have given an encouraging article. thank you.