About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, November 04, 2013

செட்டி நாட்டின் உபசாரம்,உதார குணம்

Add caption

Adhirasam

 பார்த்தாலே வாயூறும்   பல்காரங்கள் .! எனக்கு வீடு  தேடி வந்தன.
அதிசயம் என்ன என்றால் முற்றும் தொடர்பே இல்லாத
ஒரு பெண்ணிடமிருந்து.
யார்?
நான் மாதமொருமுறை மருந்து வாங்கும் லக்ஷ்மி மெடிகல்ஸின் முதலாளி அம்மா.

அங்கே போகும்போது அரட்டை அடிப்பது வழக்கம். அப்பொழுது தொலைக்காட்சியில் பார்த்த செட்டிநாடு  பலகாரங்களைப் பற்றியும் அவை ஒருமாதம் வரை கெடாமல் இருக்கும் என்கிறதையும் அவர்களிடம் சொல்லும்போது சிரித்தார்கள்.
எங்க ஆச்சி காரைக்குடியிலிருந்து செய்து அனுப்பிவிட்டார்கள்
என்றார்.அப்ப நீங்க செட்டிநாடா?
ஆமாம் பரிபூர்ணமா:)
ஓ.கொடுத்துவைத்தவர்தான்.
அம்மா கையால் பட்சணம் என்றால் அமிர்தம் என்று சொல்லியபடி
மருந்துகளை வாங்கிக் கொண்டு  ஹாப்பி தீபாவளி வாழ்த்துகள் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

வந்த பத்து நிமிடங்களில் தொலைபேசி அவர்களிடமிருந்து.
அம்மா  தீபாவளியன்று  எங்க வீட்டுச் சாப்பாடு உங்களுக்கு வரப் போகிறது என்று!!
என்னம்மா?
நீங்க சொன்னதிலிருந்து உங்களுக்கு ஏற பலகாரம் அனுப்ப ஆசை.
தயவு செய்து ஏற்றுக் கொள்ளணும். அம்மா.''
என்றதும் எனக்குத் தலைகால் புரியவில்லை. என்ன  ஒருஅதிசயம்.
இப்படிக்கூட யாராவது இருப்பார்களா என்று அடுத்த நாளுக்குக் காத்திருந்தேன்.
தொலைபேசி அழைப்புகளுக்கிடையே 
வாசலில்  அழைப்பு. அம்மா கொடுத்தனுப்பினாங்க
என்று ஒரு பெரிய பை. அதில் அழகாக டப்பர்வேரில்
பார்சல் செய்த குழிப்பணியாரம்,பால்பணியாரம், கார சீயன்,இனிப்பு சீயன்,
அதிரசம்,
தேன்குழல்.!!!
சாமி.!!!!!

சிறிது நேரம்  கழித்துதான்  அவர்களுக்குப் ஃபோன் செய்தேன். அவர்களுக்குக் கொடுத்துவிட்டதில் சந்தோஷமாம். !

எனக்குப் பேச்செ எழவில்லை.

எவ்வளவோ வேண்டாத செய்திகள்     காதில் விழுகின்றன.
இது போல நல்ல நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. கண்ணில் படத்தான்
தெரிவதில்லை.

இத்தனைக்கும் அந்தப் பெண்ணுக்கு என் பெண் வயதுதான் இருக்கும்.

வாடிக்கையாளர்,விற்பனையாளருக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்தது இந்நிகழ்ச்சி. மறக்க முடியாதது
நன்றி ப்ரவீணா.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

27 comments:

துளசி கோபால் said...

நியூஸி விலாசத்தை அந்த பெண்ணுக்குக் கொடுத்துருக்கலாமேப்பா!

நல்லா இருக்கணும் அந்த முதலாளியம்மா.

கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது!
எல்லாம் பெருமாள் க்ருபை

ராஜி said...

நல்ல விசயத்தை பகிர்ந்து இருக்கீங்க. மனிதபேயம், பாசம், அன்பு இதெக்கெல்லாம் இதுப்போன்ற ஆட்களால் மவுசு இன்னும் குறையலைன்னு புரியுது.

வெங்கட் நாகராஜ் said...

பார்க்கும்போதே நாவில் நீர்.....

நல்ல மனிதர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்....

அந்த நல்ல மனம் வாழ்க!

அமைதிச்சாரல் said...

//வாடிக்கையாளர்,விற்பனையாளருக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்தது இந்நிகழ்ச்சி. மறக்க முடியாதது//

எங்களாலும்தான்..

பலகாரம் அருமை.

sury Siva said...

லக்ஷ்மி மெடிகல்ஸ் விலாசத்தை உடனே அனுப்பவும்.

அதிரசம் அதிகபட்சம் ஐந்து நாட்கள் வைத்துக்கொள்ளலாம்.

அதில் இருக்கும் நெய் மூன்றாவது நாளைக்கு பிறகு வயிற்றை
ஒரு தினுசா பண்ணிவிடும்.

இருந்தாலும், சுடச்சுட சாப்பிடுவது சுகமோ சுகம்.

உங்க வீட்டு பக்கத்திலே லக்ஷ்மி மெடிகல்ஸ் அப்படின்னு ஒரு கடையா ?

ரங்காச்சாரி பக்கமா ?

மீனாக்ஷி பாட்டி.

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த முதலாளியம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

முதைலிரண்டு படத்திலும் இருக்கும் பண்டம் 'சைட் டிஷ்' சரியாக அமையா விட்டால் சுவைக்காது!

கடைசிப் படம் கவர்ந்திழுக்கிறது. லக்ஷ்மி மெடிக்கல்சா? வர்றேன்! வர்றேன்!

இராஜராஜேஸ்வரி said...

வாடிக்கையாளர்,விற்பனையாளருக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்தது இந்நிகழ்ச்சி. மறக்க முடியாதது

மகேந்திரன் said...

நல்லமனம் வாழ்க
நாடுபோற்ற வாழ்க...

ராமலக்ஷ்மி said...

அன்பும் நட்பும் தழைக்கட்டும். பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.

கோமதி அரசு said...

நீங்கள் சொல்வது சரி எங்களுக்கும் மூன்று தலைமுறை தொடர்ந்து வரும் செட்டிநாட்டு குடும்ப நண்பர்கள் உண்டு. நல்லது, கெட்டதில் கலந்து கொள்ளும் அன்பு நெஞ்சங்கள்.
நட்பு வாழ்க.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் இல்ல!!துளசி. அடுத்த தடவை செய்துடலாம்.இங்கயே கடை வந்திருக்காம். வாங்கிடலாம்பா.கிடைக்கும் நமக்கு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜி மா.
அவங்க லட்சக்கணக்கில வியாபாரம் செய்கிறவங்க. நான் மாதம் ஒரு முறை அங்கே செல்பவள். என் மேல் இவ்வளவு அன்பு வைப்பதுதான் எனக்கு மிகவும் சந்தோஷம்.ஆச்சரியம்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் வெங்கட்.

எதிர்பாராமல் இவ்விதம் வேலைகள் நடக்கும்போது உலகில் நன்மைகள் இன்னும் பிழைத்திருக்கின்றன என்கிற விஷயம் புரிகிறது.

வல்லிசிம்ஹன் said...

எண்ணெயே இல்லாத தேன்குழல்
சாரல். அவர்கள் செய்யும்பண்டங்கள் தொலைக்காட்சியில் பார்த்ததால் தான் இந்த டாபிக் பேச்சுக்கு வந்தது . அதுவரை அவர்கள் எந்த ஊர் விஷயம் எல்லாம் தெரியாது.
அந்தப் பண்டங்கள் சாப்பிட்டு எனக்கு
உபாதை ஒன்றும் வரவில்லை என்பதுதான் பெரிய விஷயம்!!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான்.
அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி மறக்க முடியவில்லை. நன்றாகவளமுடன் வாழ்ட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க ஸ்ரீராம்.
லக்ஷ்மி மெடிக்கல்ஸ் ராயப் பேட்டா ஹைரோடில் இருக்கிறது:)

செட்டிநாட்டுப் பண்டங்கள் விற்கும் கடை ஆலிவர் ரோடு இசபெல்லா ஹாஸ்பிட்டல் அருகில் ஒரு அபார்ட் மெண்டில் விற்கிறார்களாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுப்பு சார்,
இந்த லக்ஷ்மி மெடிக்கல்ஸ்
தண்ணீர்த்துறை அனுமார் கோவிலுக்கு எதிர்.சாரியில் இருக்கிறது.
செட்டிநாட்டுப் பண்டம் கிடைக்கும் இடம் விலாசம் சரியாகத் தெரியவில்லை. தெரிந்ததும் பகிர்கிறேன்,.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மகேந்திரன்.வாழ்கவளமுடன்.

மாதேவி said...

இனிப்பான செய்தி. அன்புள்ளம்கொண்ட உள்ளம் வாழ்க!

தக்குடு said...

நல்லதையே பேசி நல்லதையே நினைத்து நல்லதையே ஆசிர்வாதம் பண்ணும் வல்லிம்மாவுக்கு நல்லதே நடக்கும்! :)

வல்லிசிம்ஹன் said...

வாங்க மாதேவி. தீபாவளி நல்லபடியாக நடந்ததா.

எதிர்பாராத கரிசனத்தில் மனம் நெகிழ்ந்தது.நல்ல மனம் வாழ்க.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அத்வைதாவோட அப்பா வந்திருக்கிறாரா.:)

நன்றி தக்குடு.

Geetha Sambasivam said...

இந்தப் பலகாரங்கள் எல்லாம் பத்து வருடம் முன்னர் வரை பக்கத்து வீட்டிலிருந்து எங்களுக்கும் தீபாவளி சமயம் வரும். கூடவே பஜ்ஜி வகைகள், உளுந்து வடை, உளுந்து வடையிலேயே இனிப்புச் சேர்த்ததுனு எல்லாமும் வரும். :))))) அவங்க தான் அப்புறமா வீட்டைவித்துட்டுப் போயிட்டாங்க. அங்கே தான் எங்க தெருவிலேயே முதன் முதலாகக் குடியிருப்பு வளாகம் வந்தது. :)))

Geetha Sambasivam said...

எனக்குத் தெரிஞ்சு சுத்தமான நெய்யிலே செய்யும் அதிரசம் நாளாக நாளாக மிருதுவாகச் சாப்பிடச் சுவையாக இருக்கும் என்றே அறிந்திருக்கிறேன். மூணு நாளைக்கெல்லாம் கெட்டுப் போவது என்றால் நெய் சுத்தமானதாக இருக்காது. அல்லது எண்ணெய் காரணமாக இருக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா.
நெய்யில் அதிரசம் செய்தால் கெடுவதில்லை. வாசனையும் ருசியும் தூக்கலாகவே இருக்கும்.
இவர்கள் செய்தனுப்பிய பால் குழுக்கட்டை சர்க்கரை அதிகம் சேராமல் நன்றாகவே இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

இங்க பக்கத்துவீடு எதிர்த்தவீடு எல்லாம் பக்ஷண எக்ஸேஞ்ச் கிடையாது கீதா. எல்லாம் அவரவர் வீட்டுக்குள் தான்:)