About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Wednesday, April 03, 2013

அனஸ்டேசியா தொடருகிறாள்.

Kopenhagen  palace

புதிய இளவரசியைக் காண க் கூடும் கூட்டம்
எத்தனை அழகு என் பேத்தி!
பாட்டியை எதிர்நோக்கும் அன்னா
உனது வாழ்க்கையைத் தேர்ந்தெடு
பாட்டியும் பேத்தியும் இணைகிறார்கள்

 பாரீசில்    உள்ள  முக்கியஸ்தர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறான்

போனீன்.  அவர்கள் சொல்லும்  அபிப்பிராயத்தை வைத்துதான்  லண்டன் பாங்க்    இளவரசிக்கு  உண்டான  பணத்தைக் கொடுப்பதை உறுதி செய்யும்.

இதன் நடுவில் மறந்த நினைவுகளுக்கும்  மீதி நினைவுகளுக்கும் நடுவில் திண்டாடுகிறாள்  ஆன்யா.

ஒரு புறம்  போனீன்  செயல்கள் அவளைத் துன்புறுத்தினாலும் அவன் மேல் ஒரு ஈர்ப்பும் வருகிறது.

இருவரும்   ரஷ்யாவின்  ட்சார் வம்சப் பாட்டி  டோவேஜர்(ஹெலன் ஹேய்ஸ்)
யைச் சந்தித்தால்தான்   பிரச்சினை முடிவுக்கு வரும்
என்று    கோபென்ஹேகனுக்குப் புறப்படுகிறார்கள்.

பாங்க் கணக்கை மூட மூன்று நாட்களே இருப்பதாகச் சொல்கிறது.

கோபன்ஹேகன் சென்றதும்   தனக்குப் பரிச்சயமான  ஒரு  தோழியை
அணுகுகிறான். அவள் தான் பாட்டியின்  உற்ற துணை.

அவள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துதருவதாகச் சொல்லி

ஒரு    ஆப்ரா நிகழ்ச்சிக்கு வரும்படியும் அங்கே எதிரெதிர் பெட்டிகளில் பாட்டியும் பேத்தியும் ஒருவரைஒருவர் தூரத்திலிருந்து பார்க்கலாம் என்றும்

யோசனை சொல்கிறாள்.

அந்தப் பெரிய    இடத்தில்    அந்த ஊர் இளவரசன்  பால் என்பவரையும் சந்திக்கிறாள்  ஆன்யா.

சிறுவயதில்  அவனைக் கண்ட நினைவு வருகிறது.
அவனும் இவள் அழகை ரசிக்கிறாளே  தவிர

இவள்தான் இளவரசியா எனும் சந்தேகத்தை விடவில்லை.

இசை நிகழ்ச்சியில்   பாட்டி பேத்தியைப் பார்த்துச் சிறிதே  சலனம் அடைகிறாள்.

ஜெனரல்போனீன் ,  ஹர் ஹைனஸ்  டோவேஜர்  எம்ப்ரஸ்  மரியா   ஃப்பியோட்ரோவ்னா(பாட்டிம்மா)  வைச் சந்தித்துத்  தான் அழைத்து வந்திருக்கும்  பெண்ணைப் பார்க்க  பேட்டி க்  கேட்கிறான்.

இதைப் போல  நிறைய   அனஸ்டேஷியாக்களைப் பார்த்தாச்சு.
என் மனம் வதைப் படுகிறேன். நான் இவளைப்  பார்க்க

முடியாது   என்று சொல்லிவிடுகிறார்.
நடுவில் ஒரு நாள்   இளவரசன் பால்  உடன் ஒரு   சந்திப்பு. அதில் அதில்கமாக  ஷாம்பெயின் அருந்தி விடுகிறாள்.  ஆன்யா.. பாலின் நெருக்கத்தைத் தடுக்க முற்படுகிறாள்


  போனீன்  மனதில்  பொறாமை தோன்றுகிறது. இவள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு மனைவியாகும் தகுதி இவளுக்கு இருக்கிறது என்று   நினைக்கிறான்.
குடித்தது போதும்,விடுதிக்குக் கிளம்பு என்று அவளை இழுக்காத குறையாக

அழைத்துச் செல்கிறான்.
அங்கு அவளின்''நீ ஏன் என்னைக் காதலிக்க  மறுக்கிறாய்''? புலம்பல்களைக் கேட்டபடி அமைதி காக்கிறான்.

அடுத்த நாள் காலையில் ஒரு  எதிர்பாராத விசிட்டர்.
ஆமாம் மஹராணி மரியாவெ  வந்துவிடுகிறார்.

பாட்டியைச் சந்திக்கும் ஆன்யாவின் மனதில் பாசமும் அழுகையும் மகிழ்ச்சியும் போட்டியிடுகிறன்றன.

பாட்டியோ இவள் சொல்லும் நிகழ்ச்சிகளை   நம்ப மறுக்கிறாள்.
ஆன்யாவுக்கோ
பாட்டி நம்ப மறுக்கும் துக்கம்   இருமலாக வெளிவருகிறது.

திகைப்படையும் மஹாராணி மரியா'' உனக்கு உடம்பு சரியில்லயா?"ஏன் இருமுகிறாய் என்று கேட்க,
ஆன்யா தான்  அதீதமாக   அச்சப்படும்போது இந்த இருமல் வந்துவிடுவதாகவும் எந்த மருத்துவரும் இதைக் குணப்படுத்த முடியவில்லை

என்றும் பதிலளிக்கிறாள்.
இதைக் கேட்ட  பாட்டியின் மனம் பழைய  நினைவுகளில் ஊசலாடுகிறது.
சிறுமியாக இருக்கும்போதும் இதே போல் ஆன்யா  பயம் வரும்போது இருமியபடி தன்னை வந்து கட்டிக் கொள்வது நினைவுக்கு வர,

பேத்தியை இறுக அணைக்கிறாள்.

அடுத்த நாளிளவரசியின் இருத்தலைப் பற்றிய பிரகடனம். கூடவே இளவரசர் பாலுக்கும் ஆன்யாவுக்கும்    மணநாள் நிச்சயம் செய்யும் தினமாக அறிவிக்கப் படுகிறது.
இடையில் போனீன்  தான் கிளம்புவதாகப்   பாட்டியிடம் சொல்கிறான்.

துருவித் துருவிக் கேள்வி கேட்பவளிடம்  எனக்கு ஆன்யாவின் பணம் வேண்டாம்.  என்று மட்டும் சொல்கிறான்.
அவன் மனநிலையை உணர்ந்த மஹராணி  அவனை அந்த அறையிலேயே
காத்திருக்கச் சொல்கிறாள்.சர்வ அலங்காரங்களுடன் பாட்டியைப் பார்க்க வரும்

ஆன்யா உணர்ச்சியில் தடுமாறுகிறாள்.
தான் போனீனைக் காதலிப்பதையும்    குறிப்பால் உணர்த்துகிறாள்.


பாட்டிக்குப் பேத்தியைப் பிரியும் துன்பம்  வந்தாலும்  அவளிடம் சொல்கிறாள்.
என்  இறந்தகாலம் இனிதானது. வருங்காலத்தைப்   பற்றி நான் யோசிக்கவில்லை..
உன்னுடைய நிகழ்காலத்தை இழந்துவிடாதே.

உனக்காக அவன்  காத்திருக்கிறான் அவனுடன் செல் என்று உத்தரவிடுகிறாள்.
பாட்டியைப் பிரிய மனமில்லாமல்  பிரிகிறாள் இளவரசி அனஸ்டேசியா.

அங்கு வந்த இளவரசன் பாலின் கைகளைப் பிடித்துக் கொண்டு படிகளில் இறங்குகிறாள்  மஹாராணி.
அவள் சொல்லும்   ஒரே   வார்த்தை  ''இந்த நாடகம் முடிந்தது''
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்