About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Saturday, December 08, 2012

சர்க்கரை யும் கோலா போன்ற பானங்களும்
இந்த    தாகம் தீர்க்கும்(என்று)  நாம் நினைக்கும் பானங்கள் ஒரு சர்க்கரை  நோயாளியின் 

பேச்சையே    இழக்கும்   அளவுக்கு    இழுத்துவிட்டது என்றால் நம்ப  முடியுமா.
இது   கொஞ்ச நாட்களாக  எல்லோரையும் டயபடீஸை நோக்கி அழைக்கும்

வகையில் செயல் பட   ஆரம்பித்திருக்கின்றன.
மேலை நாகரீகம் கொஞ்சம் கீழை நாடுகளூக்குப் பரவி அமீரகத்தில்  குழந்தைகளை  பலூனாக ஊதவைத்து
ஆப்பிரிக்க நாடுகளிலும் பழகி வருகின்றதாம்.

எங்கள்    பக்கத்து வீட்டு அம்மா   போக்குவரத்து    இலாகாவில் வேலை செய்பவர். கணவனை  இழந்தவர். சர்க்கரை வியாதி எப்படியோ அவரை ஆட்கொண்டுவிட்டது.
இத்தனைக்கும் நிறைய நடப்பவர். தினம் மூன்று பஸ் தடங்களில் பிரயாணம் செய்பவர்.

அவரது  வைத்தியர்    இந்த மாதிரி  சாஃப்ட்  ட்ரின்க்ஸ்  பருகக் கூடாது என்று   அறிவுறுத்த  மறந்துவிட்டார்,.

விளைவு தாகம் எடுக்கு மதிய வேளைகளில் நான் பெயர் சொல்ல விரும்பாத ஒரு பானத்தை  வாங்கி வைத்துக் கொண்டு

பாதி ஒரு நாளும் மீதி மறுநாளும் குடித்து    வந்திருக்கிறார்..
முதலில் ஒன்றும் தெரியவில்லை.

திடீரென்று   ஒரு ஞாயிற்ற்றுக் கிழமை  என்னை வந்து அழைத்தார்.
வீட்டில் அண்ணா,அவர் மனைவி ,அவர்கள் குழந்தைகள்  எல்லோரும்
வெளியே போயிருக்கும் போது இவருக்கு  வயிறு சரியில்லாமல் போய்விட்டது. எனது தொலைபேசி எண்ணும்  மறந்து போக.,
 கஷ்டப்பட்டு இங்கே வந்துவிட்டார்.

கைகாலெல்லாம் வெட வெடக்கறது என்ன பண்ணனும்னு தெரியலை. குளிருகிறது என்ற வண்ணம் நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.

உடனே   கொஞ்சம் சூடான பாலைக் கொடுத்து ச் சாப்பிடச் சொன்னேன்.
சுகர்  பரிசோதனை செய்யட்டுமா  என்று கேட்டேன். இது ஷுகர் பிரச்சினை
இல்லை ஜுரம் வந்திருக்கு என்கிறார்.

எதுக்கும்  நான் பாத்துடறேன். அண்ணா  மன்னிக்கும் ஃபோன் செய்யலாம் என்று சமாதானப் படுத்தி, க்ளூகோஸ் மீட்டரில் ரத்தம் எடுத்துப் பார்த்தால் 250 ஐ எட்டிக் கொண்டிருக்கிறது.

இது அவ்வளாவாகப் பயம் கொடுக்கவில்லை. அவர் உடல் இந்த நிலைமையைச் சமாளிக்க முடியாது போலத் தோன்றியது.
அவரிடம் உண்மையான எண்ணைச் சொல்லாமல் நீங்கள் வேணுமானால் சாய்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள் . இல்லாவிட்டால் பக்கத்தில மீனாட்சி மெடிக்கல்ஸுக்குப் போகலாம் என்று சொல்லிக் ஒண்டே அவருடைய பதிலை எதிர்பார்த்தேன். வாயை திறந்து திறந்து மூடுகிறார்.
வார்த்தை வரவில்லை.
எனக்குப் பதைப்பாகப் போய்விட்டது.

உடனே  மீனாட்சிக்கு தொலைபேசினோம். இவர் விவரத்தைச் சொன்னதும் டியூட்டியிலிருந்த  டாக்டர் (இந்த அம்மாவைக் கவனிப்பவர்)
உடனே வந்தார்.

ஏதோ   ஊசி போட்டார். நான் நிலைக்  கொள்ளாமல் அடுத்தவீட்டைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.

நல்லவேளையாகக் கொஞ்சநேரத்தில் அண்ணனும் மற்றவர்களும் வந்தார்கள்.

உடனே ஆம்புலன்ஸ் வரவழைத்து  எமெர்ஜென்சிக்கு அழைத்துச் சென்று

சலைன்   ட்ரிப்ஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
அடுத்த நாள் பேசும் நிலைக்கு வந்தார்.

பிறகுதான் இந்த   குளிர்பான விஷயம் தெரியவந்தது.
வைத்தியருக்கோ சொல்ல முடியாத கோபம். ஜூஸ்,இளநீர்,
இதெல்லாம் சாப்பிட வேண்டாம்னு சொன்னேனே. கேட்காமல் இந்த லிம்காவைச் சாப்பிட்டு இருக்கிறார்களே.

என்ன சொல்வது என்றார்.
அறியாமைதான்.   பசிதாகத்தின் போது பாவம் அந்த அம்மா இப்படி
சாப்பிட்டு இருக்கிறார்.கூடவே  மாரி பிஸ்கட்ஸ்.
அது தன்ஸ்வரூபத்தை த் திடீரென்று காட்டிவிட்டது.
பாவம் அந்த அம்மாவுக்குக் குழந்தைகளும் இல்லை. ஜீவனம் நல்லபடியாக் இருக்கவேணுமே  என்று   தன் கணவரின்
வேலையை ஏற்றுப் போய் வந்து கொண்டிருக்கிறார்..
இப்போது   இன்னும் இரண்டு நாளில் மீண்டும் வேலைக்குப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.

வீட்டினர்  வாலண்டரி ரிடயர்மெண்ட் வாங்கச் சொல்கிறார்கள்.
பார்க்கலாம். கடவுள் துணை இருக்கட்டும்.

சர்க்கரை எப்போது ம் கட்டுக்குள் இருக்கவேண்டும்.
இவரைக் குற்றம் சொல்லமாட்டேன். இனி உணர்ந்து செயல்படுவார்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa