About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, September 03, 2012

மழை வந்ததும் துளிர்த்த செடிகளும் மலர்களூம்

மழை என் மேல்  விழவில்லை.வரணம் மாறினாலும் மணம் மாறாத மலர் நான்
வெற்றிலைப்பூவா. மழைத்துளிக்காக நாக்கை நீட்டும்  மலரா.
இது எங்கள் காலம்
நான் தொட்டால் சிணுங்கிதான். மழை எனக்கு வீரம் தந்தது.
வானம் பார்த்தவள் தான். மழையில் ஆடைநனைந்ததால் உலரக் காத்திருக்கிறேன்
எங்கள் சகோதரிகள் ஐந்தாறு பேர் பூமித்தாயிடம் போய்விட்டார்கள் அவர்களைப் பார்க்கத்தான் கீழே குனிந்தோம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

23 comments:

Geetha Sambasivam said...

அழகான மழைக்கவிதைக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

மலர்களைப் போல வர்ணனைகளும் அழகு!

புலவர் சா இராமாநுசம் said...கவிதை பேசும் படங்களும் அதன்கீழ்
வந்துள்ள கருத்துக்களும் அருமை!

ஸ்ரீராம். said...

மழை வந்ததும் துளைத்தவா, துளிர்த்தவா?
படங்கள் பிரமாதம். குறிப்பாக வெற்றிலைக் கொடி!
மழை... தெருவெங்கும் போக்குவரத்து நெரிசல்! நேற்றும் இன்றும்!

அமைதிச்சாரல் said...

ஆஹா.. கவித.. கவித.

கலக்குறீங்க கவிதாயினியே :-))

அந்த ஆரஞ்சுப்பூக்களைப் பார்த்தால் மாதுளம்பூக்கள் ஞாபகம் வருது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாப்படங்களும் அழகு ....

மழை வந்ததும்
துளிர்த்துள்ளவை போலவே !

Indhira Santhanam said...

படங்களும் அதன்பின் உங்கள் கருத்துக்களும் அருமை அம்மா.

அப்பாதுரை said...

எங்கே மழை? எப்போ மழை?
படக்குறிப்புகள் சுவாரசியம்.

வெங்கட் நாகராஜ் said...

மழையால் படத்திற்குச் சிறப்பா...
இல்லை உங்கள் வார்த்தைகளால் சிறப்பா...

இரண்டுமே போட்டி போடுகின்றனவே.

வாழ்த்துகள் வல்லிம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

படமும் கருத்தும் அழகு அம்மா.... நன்றி...

வல்லிசிம்ஹன் said...

கவிதையா.ம்ம்.நீங்க சொன்னா சரி கீதா:)
தான்க்ஸ்.

வல்லிசிம்ஹன் said...

மலர்கள் மழைநீரோடு இருக்கும் போது எடுக்க முடியவில்லை ராமலக்ஷ்மி.
பூக்களைப் பார்த்தால் மனதில் தானே வார்த்தைகள் அலங்காரம் செய்து கொள்கின்றன!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஐயா.
வருகைக்கு நன்றி.
என் எழுத்தையும் அங்கிகரிக்கும் உங்கள் பெருந்தன்மைக்கு வணக்கம் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

மழையைப் பற்றிச் சொன்னதும் நேற்று மழை வரவில்லை ஸ்ரீராம்.

கண்ணாடி இன்னும் கைக்கு வரவில்லை. எ.பி நிறைய வந்துவிடுகிறது.:(
அந்த வார்த்தை துளிர்த்ததுதான்.
துளைத்து வருவது காளான் இல்லையா:)

வல்லிசிம்ஹன் said...

மாதுளம் அறிந்தவர்க்கு மாதுளம்பூக்களே தெரிகின்றன. இல்லையா சாரல்.நீங்கள் வந்து போன சுவட்டில் மலர்கள் பதிவில் நனைந்துவிட்டன.:)

வல்லிசிம்ஹன் said...

இன்னோரு அதிசயம் திரு விஜிகே.
இப்போது சாலை மரங்களில் பல பறவைகளும் வருகின்றன.
எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் மரத்தில் கிளிகளும் மரங்கொத்திகளும் சட்டென்று அமர்ந்து சட்டென்று பறப்பது கண்கொள்ளாக் காட்சி.
வருகைக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் இந்திரா.
அம்மா எழுதினால் அது கவிதைன்னு
குழந்தைகள் நினைப்பது மகிழ்ச்ச்சியே:)

வல்லிசிம்ஹன் said...

இங்கதான் மழை இங்கதான் மழை. உங்களூரில் கூட நல்ல மழையாமே. போன வாரம்.இனிப் பூக்கள் நிறைய பூக்கும் ஆனால் ஃபால் வந்துடும் இல்ல துரை? மனசு லேசானால் எழுத்து சிறக்கிறதும்மா.அவ்வளவுதான்.

வல்லிசிம்ஹன் said...

மழைதான் சிறப்பு. மாதம் மும்மாரி பெய்ய வேண்டிய நிலத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு தடவையாவது வருகிறதே. சந்தோஷம்தான். டில்லியில் கூட மழை என்று மருமகள் சொன்னார்.நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

பாட்டுக்களைக் கொடுத்தே மகிழ்ச்சியில் ஆழ்த்தும் உங்கள் சேவை மகத்தானது தனபாலன். நன்றி மா.

ஸாதிகா said...

வல்லிம்மா,படங்களும் பகிர்வும் அபாரம்.இனி மழையைப்பார்த்தால் உங்களது இந்தப்பதிவு ஞாபகத்திற்கு வந்துவிடும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸாதிகா,
இறையருளால் தரும ம்கு சென்னையில் இந்த வாரக் கடைசியிலும் மழை இருக்காம்.
அப்போது நானும் உங்களை நினைத்துக் கொள்வேன். நன்றி கண்ணா.

மாதேவி said...

மழை வந்ததும் துளிர்த்த மலர்கள் இன்புற்று இருப்பதை எமக்கு அளித்து எம்மையும் மகிழ்வுறச் செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

இங்கும் மழை இரண்டு மூன்று நாட்களாக பொழிந்து தள்ளுகின்றது.