About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, September 29, 2010

பேசலாம் கேட்கலாம்...4

பேத்தியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டேன்.

எனக்கு இந்தப் பையன் தன் சிநேகிதர்களைப் பார்த்து விட்டு அவர்களுடன்


போய்விட்டால் நாமல்லவா பொறுப்பாகிவிடுவோம்

என்று கவலை.

இவர் எந்த முரட்டுத் தனமான நடத்தையையும் அனுமதிக்க

மாட்டார் என்ற ஆறுதலும்

என்னைக் காத்திருக்க வைத்தன.

இரண்டு மணிநேரம் ஆச்சு. காணவில்லை

ஃப்லோமியும் குழந்தை ஈவாவும் வந்தார்கள் .அவர்களுக்கு

வாசலில் நிற்கும் செக்யூரிடி சொல்லி இருக்கிறான்.

கெவின் இவருடன் போனதை.

'மம் வில் கால் மி நௌ வாட் டூ ஐ சே' என்று

தவித்தாள்.

அவளுக்கு ஒரு சாய் போட்டுக் கொடுத்துவிட்டு,

எஜமானரை செல் நம்பரில் கூப்பிட்டேன்.நான் இங்க பர்ஜுமான் செந்தருக்கு வந்திருக்கேன்மா.

கெவினுக்கு அனிமல்ஸ் ரொம்பப் பிடிக்குமாம். அதனால் ''ஜரால்ட் டர்ரல்''

புஸ்தகம் வாங்கிக் கொடுத்து இருக்கேன்.

இதோ டாக்சி பிடித்து வந்துடறோம்.

என்றதும் ஃபிலோமி அமைதியானாள்.

நான் அவளை மெதுவாக விசாரித்தேன்.

;;ஏன் கெவினைத் தனியாக விடுகிறாய்''

உன்னை நம்பித் தானே விட்டுப் போயிருக்கிறார்கள்''

என்றதும் ஒரே கோபம் வந்துவிட்டது அவளுக்கு.தன்னை விட உறுதியும் பலமும் கொண்ட ஒரு பையனை

எப்படி அடக்குவது. அவன் நான் சொல்வதை லட்சியமே

செய்வதில்லை. நான் அவனுடைய உண்வுக்கு மட்டும் தான்

பொறுப்பு. மற்றபடி அவனைப் பற்றி என்னால் கவலைப்

பட முடியாது என்று பொரிந்தாள்.

பத்து நிமிடங்களில் சிங்கமும் கெவினும் வரவும் , ஃபிலோமியின்

போன் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

பட் படவென்று பேசிய பிலோமியின் மொழி

எங்களுக்குப் புரியவில்லை. அவசரமாகக் கெவினையும்,ஈவாவையும்

அழைத்துச் சென்றுவிட்டாள்.

அடுத்த வந்த நாட்களில் சாண்ட்ராவையோ அவள் குடும்பத்தையோ பார்க்கவில்லை.


கீழே சூப்பர்மார்க்கெட்டில் சாண்ட்ராவைப் பார்த்த மருமகள்

பேசியபோது,
கெவின் மட்டும் இல்லாமல் தன்கணவனும் தானும் சைக்காலஜி கவுன்சிலிங்கிற்குப் போவதாகச் சொல்லி  இருக்கிறாள்.இது எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அடுத்த வாரம் நாங்கள் கிளம்ப வேண்டும் என்ற நிலையில்
கெவினையும் ஈவாவையும் மேல் தளத்தில்
விளையாட்டுக் கூடத்தில் சந்தித்தேன்.
தங்கைக்குத் துணையாகச் சின்ன ஸ்விம்மிங் பூலில்
நீந்திக் கொண்டிருந்தான்.அங்கிருக்கும் நாற்காலி ஒன்றில் உட்கார்ந்து கொண்டு
அவர்களைக் கவனித்தேன். மற்ற குழந்தைகளோடு சண்டை போடவில்லை.

''ஹை க்ரான்மா, ஹை மானி பேபி'' என்று எங்கள் இருவரையும்
உற்சாகமாக வரவேற்றான்.
ஃப்லோமி எங்கப்பா,? தனியா வந்திருக்கீங்களே; என்றதும்,
ஓ,அவள் விடுமுறையில் போயிருக்கிறாள்.

எங்கள் அம்மாவும் ஒரு மாசம் லீவு எடுத்திருக்காங்க.
அதனால் தான் நான் ஈவா வோடு வந்தேன்.
யாராவது இவளைக் கவனிக்கணும் ,இல்லாவிட்டால்
யார் வீட்டிலயாவது உட்கார்ந்து கொண்டு வீட்டுக்கே வரமாட்டாள்'
என்று சிரித்தான்.

அந்த மாலை வேளை வெய்யிலில் பிரகாசமாக இருந்த அவன் முகத்தைப் பார்த்ததும் மனசு பூரித்தது.
அப்பா ஊரில் இருக்கிறாராப்பா?
அப்பா இனிமேல் பைலட் வேலையில் இல்ல க்ராண்ட்மா.
ஹி இஸ் வித் த க்ரௌண்ட் ஸ்டாஃப்.
ஹி கம்ஸ் ஹோம் எவ்ரிடே'' என்று
சொல்லும்போதே அவன் மகிழ்ச்சி அந்த இடம் பூராவும் பரவுவது போலத் தோன்றியது எனக்கு.

இப்படிக் கூட மாற்றம் நிகழுமா என்று அதிசயமாக இருந்தது.

கண்ணால் காணாத அந்த மனநல வைத்தியருக்கு
நன்றி சொல்லிக் கொண்டேன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

10 comments:

துளசி கோபால் said...

ஹேப்பி எண்டிங்.

மனசுக்கு நிம்மதியா இருக்கு.

அழகாத் தொடரைக் கொண்டு போயிருக்கீங்க வல்லி.


இனிய பாராட்டுகள்.

திவா said...

நல்ல நெரேஷன். நல்ல தொண்டு. வாழ்த்துக்கள் அக்கா!

கெக்கே பிக்குணி said...

முதல்ல இப்படி பயபுள்ளைய ரிலாக்ஸ் பண்ண வச்சதுக்கு சிங்கத்துக்கு தாங்க்ஸு சொன்னீங்களா? :-))

அழகாச் சொன்னீங்க‌, அதுக்கு உங்களுக்கு தாங்க்ஸ். //கெவின் மட்டும் இல்லாமல் தன்கணவனும் தானும் சைக்காலஜி கவுன்சிலிங்கிற்குப் போவதாகச் சொல்லி இருக்கிறாள்.// இதைப் படிச்சதும் இனிய அதிர்ச்சி.

//அவன் மகிழ்ச்சி அந்த இடம் பூராவும் பரவுவது போலத் தோன்றியது எனக்கு// //எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
// உங்க நல்ல மனசுக்கும் ஒரு நமஸ்காரம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி.
யாருக்குத்தான் குழந்தைகள் கஷ்டப்பட்டால் யாருக்குப் பிடிக்கிறது. உண்மையில் அந்தப் பிள்ளை தப்பாகவே நடந்தாலும் கேட்டு விசாரிக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். அது நடந்துவிட்டது. எல்லாக் குழந்தைகளும் நல்லா இருக்கணும் பா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன். யாரையும் தப்பு மட்டும் சொல்லி வீட்டுவிடக் கூடாது. அவர்கள் பக்க நியாயத்தையும் கேட்கணும் இல்லையா. நாங்கள் அங்க இருக்கும்போதே நல்லது நடந்தது நிம்மதி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கெ.பி. நமக்குத் தெரிந்து நடந்தது இது. இந்த மாதிரி எத்தனை குடும்பங்களோ. பெற்றோர் பாடும் சிரமம்தான்.எத்தனைக்குன்னு அவஸ்தைப் படுவார்கள். அந்தப் பையனுக்கும் யாராவது தன் கிட்ட பையாஸ்டா நடந்துக்காம சாதாரணமா நடந்துகொண்டது மகிழ்ச்சி கொடுத்ததுன்னு நினைக்கிறேன். நன்றிப்பா.சிங்கத்துக் கிட்ட சொல்கிறேன்.:)

Sumathi said...

குழந்தைகளையும் புரிந்து நடந்து கொண்டால் பிரச்சனை ஏதும் இல்லை என புரிகிறது வல்லிம்மா, இனிய முடிவு நன்றாக உள்ளது வல்லிம்மா:))))

வல்லிசிம்ஹன் said...

நன்றி சுமதி.
இது தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சி. எல்லோரும் இப்படி இருப்பதில்லை என்பது தெரிந்தது. சொல்லப் போனால் பிள்ளைகளப் படிக்கவைப்பதிலேயெ முழுகவனம் செலுத்தும் பெற்றோரையும் நான் பார்த்திருக்கிறேன். இது ஒரு எக்சப்ஷன்:(

ஹுஸைனம்மா said...

நல்ல முடிவு ஏற்பட்டது மகிழ்ச்சி.

எனக்கென்னவோ, இந்த பெரியவர்களின் “My time" என்ற கான்செப்ட் ரொம்பப் பிடிக்கவில்லை. ஒரு சில சம்யங்களில் ஓகே. ஆனால், அதை ரெகுலராகப் பின்பற்றுவது சரியல்ல என்பது என் கருத்து.

வல்லிசிம்ஹன் said...

சரியான சொல்லைச் சொல்லிவிட்டீர்கள். இந்தச் சொல்லைத்தான் அது அடிக்கடி சொல்லும்.
அந்த சாண்ட்ரா. அவர்களுடைய இஷ்டம் என்று ஒன்று இருக்கும் போது அவ்வப்போது அந்தக் குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ளாததுதான் தவறு.