About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, October 15, 2008

சினிமா சினிமா தொடர் விளையாடலாமா!!

எனக்கும் சினிமாக்கும் உள்ள பந்தம் ஒரு உணர்ச்சியானது. அதனால் நான் இந்த சினிமா சம்பந்தமான தொடர் கேள்விகள் அதே போலத்தான் இருக்கும்.

ஸ்ரீதர் நாராயணன், கொத்ஸைக்கூப்பிட, கொத்ஸ் மத்தவங்களை வலையில் இழுத்துப் போட்டு இருக்காரு.அதில நானும் ஒண்ணு.


பதினோரு கேள்விகள். எல்லாவற்றுக்கும் தெரிந்த வரையில் பதில் எழுதறேன்.:)எதில ஆரம்பிச்சாலும் கணேசன் இல்லாம முடியுமா.
என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத்தோணும்னே நிறையப் பாடிட்டாங்க:)

மத்தவங்களைச் சிரிக்க ,அழ வச்சிட்டுத் தானும் அழுது போய்ச் சேர்ந்துட்டாங்க.


காந்தக் கண், வாளிப்பான உடல்வாகு, நடிப்பு,அழகு போதுமே!!

கேள்விகளுக்கு வருகிறேன்.
சினிமாவே துணை!!!!
------------------------------------------------
------------------------------------------------------

1,1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஒரு நாலு ,அஞ்சு வயசு இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூரில்.. பக்கத்துவீட்டு அம்மாவுக்கு இரவுக் காட்சிக்குப் போக ரொம்பப் பிடிக்கும். என்னைத் துணைக்கு அழைத்துக்கொண்டு (இடுப்பில உட்கார்த்திக்கிட்டுத் தான்)
பராசக்தி படம் பார்க்க அழைத்துப் போனாங்க.
அங்க போய் படத்தில் ஸ்ரீரஞ்சனி அழும் காட்சிகளில் நானும் அழவே திருப்பி அழைச்சுக் கிட்டு வந்துட்டாங்க.:)
அடுத்து தேவதாஸ்.
அதில் இன்னும் அழுகை.
ஆனால் அவங்க வீட்டு ஊஞ்சலிலேயே உட்கார்ந்து உலகே மாயம்னு இருமல் எஃபெக்டோட நான் பாடினதும் ,எங்க அம்மா என் முதுகில நாலு வச்சது ஞாபகத்தில இருக்கு.(அவங்க வீட்டுத் தாத்தா படுத்த படுக்கையா இருந்தாரு:)
முற்றுப்புள்ளி சினிமாவுக்கு:))


2,2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அரங்கில தமிழ்ப் படம் பார்க்கிற அளவுக்கு எங்க சிங்கத்துக்குப் பொறுமை கிடையாது.
தம்பி அழைத்துப் போன படம் இதயத்தை திருடாதே:)
ஒரு நாலு நாளுக்கு அந்தப் பாடல்களைப் பாடின நினைவு இருக்கு:)

3,கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சென்னையில் கடைசியாக டிவியில் ,கே டிவி மதியக் காட்சிகளில் வரும் பழைய சினிமாக்கள்.
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி''
மிகவும் பிடித்த மென்மையான இசை, அந்த நாட்களுக்கே உரிய
ஸ்லாப்ஸ்டிக் வசனங்கள்.
பத்மினி ராகினி நாட்டியம். அப்புறம் ''பெண்''
ஜாலி லைஃப், ஜாலி லைப்'' சந்திரபாபு பாடி வீணை பாலச்சந்தர் ஆடிய பாட்டு என்று நினைக்கிறேன்.....
4,மிகவும் தாக்கிய தமிழ் சினிமா??
மகாநதி,மனம் பதைத்தாலும்,கமல் பழி வாங்கும்,சண்டை போடும் இடங்களைக் கண்மூடாமல் பார்த்துவிட்டுச் சோகப்பட வைத்த படம். கமல் மாமியாரா வர பெண்மணி எவ்வளவு வருஷங்களாக திரையுலகில் இருக்காங்க. gutsy lady!!!

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
இருவர் படம்.
ஒரு வினோத அனுபவம். மிகவும் தாக்கம்னு சொல்ல முடியாது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
தாக்கமெல்லாம் சொல்ல மாட்டேன்.
ஆளைவிடுங்கப்பா. நமக்கு அதிர்ச்சியே ஆகாது:)
பாலுமஹேந்திரா படத்தில வருகிற போட்டோக்ராஃபி
ரொம்பப் பிடிக்கும்.

6,. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ஓ,வாசிக்காம என்ன. அதான் குமுதத்தில கிசு கிசுன்னு ஆரம்பிச்சு இப்ப எல்லாப் பத்திரிகைகளிலும் வருதே. !!!
அதைத்தவிர பேசும்படம்னு ஒரு பத்திரிகை, என் சினேகிதி பள்ளிக்குக் கொண்டு வருவாள். அதை மதியம் உணவு இடைவேளையில் பிரித்துப் படித்து சூடாக விவாதிப்போம்:))
ரொம்ப சாரிப்பா. நமக்கு அவ்வளவுதான் சினிமா தெரியும்.


7,தமிழ்ச்சினிமா இசை?
மிகவும் பிடிப்பது பழைய பாடல்களும், எப்பவுமே காதுக்கு இனிமையா இருக்கிற,
இளங்காற்று வீசுதே, விழிகளின் அருகினில் வானம்,சுட்டும் விழிச் சுடரே,
இப்படீ.........


8,தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
பார்ப்பது உண்டு.
தாக்கம் என்றால்
டாக்டர் ஷிவாகோ, மெக்கென்னாஸ் கோல்ட்,லவ்ஸ்டோரி,
ஜாக்கிச்சான் படங்கள்,மிஸ்ஸிப்பி பர்னிங் ...ஆங்கிலத்தில்.
ஏதாவது ஒரு விஷயத்தில் மெய்மறக்க வைத்துவிடும் இந்தப் படங்கள்.
அண்மையில் பார்த்த ''கங்ஃபூ பாண்ட்டா''வும் பிடித்தது:)
இந்தியில் வீடியோ எடுத்துப் பார்த்தபடம்
காபூல் எக்ஸ்ப்ரஸ்,
டோர்(DOR)
இரண்டுமே எனக்குத் தெரியாத,தெரிய வராத பல விஷயங்களை படம் பிடித்துக் காட்டின.


9,தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடித் தொடர்பா!!!!!!!
கமல்ஹாசனை நேரில் சந்தித்தது, நான் வேலையில்(ஒரு ஐந்து வருடம்)
பப்ளிஷர்ஸ் கம்பெனி(டைம்லைஃப்)க்காக ஒரு சர்வே....குழந்தைகள் புத்தகங்களைப் பற்றி.
அவருக்கும் ரசிக்கவில்லை.எங்களுக்கும் ரசிக்கவில்லை. ''மைக்கேல் மதன காம்ராஜ்'' படப்பிடிப்பில் இருந்தார்.
அவரது அலுவலகத்தில் பல பந்தாக்களோடு,நானும் என் தோழியும்
பார்க்கப் போன போது,ஒரு பத்துநிமிடத்தில், நாங்கள் படபடக்க , அவர் புத்தகங்களை நிதானமாகப் புரட்டிவிட்டுப் புருவத்தை உயர்த்தவும்,
செல்லுபடியாகாதுன்னு( அந்தப்புத்தகங்கள் விற்பனையாகாது அவரிடம்) வெளியில் வந்துவிட்டு
அப்புறமா பெண்ணிடம் பீற்றிக் கொண்ட அனுபவம்:)
மற்றபடி சினிமா பார்த்தால் அந்தத் தொழிலாளர்களுக்கு வரும்படி என்று மட்டும் தெரியும்.அவ்வளவுதான்.

10,தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்லாவே இருக்கும். அதுவும் புதுசு புதுசா (வாளமீன் பாட்டு வந்த படம்)
வேறு மாதிரிப் படங்கள் வந்தால் முன்னேறாமல் என்ன.


11,அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
செய்திகள் வரவில்லை என்றால் ஒன்றும் பாதிப்பு இல்லை.பாட்டுக் கேட்கலாம் இல்லையா:)
தமிழர்களுக்குக்..... கொஞ்சம் வித்ட்ராவல் சிம்ப்டத்தில கஷ்டப்படுவாங்க.
எனக்கு ஒன்றும் ஆகாது.
தியேட்டருக்குப் போகும் பழக்கம் விட்டுவிட்டது.அதீதமான டெசிபல் அளவு தாங்க முடியாத்தால்.
மற்றபடி இன்னும் கொஞ்சம் அலுப்பாக இருக்கும் தொலைக்காட்சி பார்க்க முடியாததால் .

கொத்ஸுக்கு ரொம்ப நன்றி. இன்னும் ஐந்து பேரை அழைக்கணும்னு வேற சொல்லி இருக்கு.
நான் அழைக்க நினைப்பவர்கள்.
(தனி மடல் அனுப்பறேன்பா)
ஆயில்யன்....எழுதிட்டீங்களா?
சதங்கா.......... நல்லா எழுதிடுவீங்க
ராமலக்ஷ்மி....கவிதையே பாடிடுவாங்க
நானானி, கதை சொல்ல இவங்கள விட்டா யாரு!!
ராதாஸ்ரீராம் ப்ளீஸ் கொஞ்சம் உங்க அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்க.
ஆங்கிலம் கலந்த வார்த்தைகளோடு பதிந்திருக்கிறேன்.
பயிற்சி தமிழ்சினிமா பற்றித்தானே.:)))

38 comments:

வல்லிசிம்ஹன் said...

தேர்வுகளில் எல்லாம் பதில்களை ரிவைஸ் செய்து வழக்கம். இங்கே செய்யவில்லை:)
அதனால் பிழை ஏதும் இருந்தால் இந்த ''அன் எடிட்டட் '' பதில்களைப் பொறுத்தருள்க.

ambi said...

//உலகே மாயம்னு இருமல் எஃபெக்டோட நான் பாடினதும் ,எங்க அம்மா என் முதுகில நாலு வச்சது ஞாபகத்தில இருக்கு//

இந்த லொள்ளூ எல்லாம் அப்பவே ஆரம்பிச்சாசா? :)

me the first..? :p

கீதா சாம்பசிவம் said...

நல்லா இருக்கு வல்லி, உங்க அனுபவம் எல்லாமே!

சந்தனமுல்லை said...

நான் உங்கள் சினிமா பதிவு படிக்கவேண்டுமென்றிருந்தேன்!! எதிர்பார்த்த மாதிரியே சுவாரசியமாய் இருக்கிறது..:-)

அந்த இருமல் பாட்டு..:-)))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அம்பி அப்ப ஆரம்பிச்சு

18 வயசில கட்டாயத் தடுப்புப் போடப்பட்டது.
இப்போ கொஞ்சம் துளிர் விட்டுடுத்துன்னு நினைக்கிறேன்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா உங்களை அழைக்கணும்ம்னு எழுதிட்டேன். நீங்கதான் மிஸ்டீரியசா,இடது கைன்னு போடறீங்களே:(

அதனால்ல் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு விட்டு விட்டேன்.

நலமாம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சந்தனமுல்லை.
ஏதோ ஒரு முனைப்பு இந்தப் பாடல்களில் ஒரு தடவை கேட்டாலே மனசில பதிஞ்சுடும். ஐந்து வயசில இருமிகிட்டுப் பாடினா எந்த அம்மாவுக்குப் பிடிக்கும்:)

இலவசக்கொத்தனார் said...

என் பதிவில் ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போச்சு. உங்க இருமல் பாட்டுக் கேட்டப்பதான் ஞாபகம் வருது. இந்த தாக்கம் பாதிப்புன்னு எல்லாம் சொல்லறாங்களே அதுக்கு வேணா இதை வெச்சுக்கலாம்.

சின்ன வயசில் - ‘குடிமகனே’ எனத் தொடங்கும் பாட்டைக் கேட்டாலே அழ ஆரம்பிச்சுடுவேனாம். என்ன காரணம் தெரியலை. ஆனா சமீபத்தில் ஒரு முறை கேட்ட பொழுது கூட என்னமோ செஞ்சுது!!

இலவசக்கொத்தனார் said...

அப்புறம் என் வேண்டுகோளுக்கு இணங்கி உடனடியா பதிவு போட்டதுக்கு வளர நன்னி! :))

மதுரையம்பதி said...

நல்ல அனுபவங்கள் வல்லியம்மா...:)

நீங்க சந்திர பாபு படத்தை போடாம விட்டுட்டீங்களே? :))

வல்லிசிம்ஹன் said...

நன்னிகள் மனப்புர்வமாக ஏற்கப்பட்டன கொத்ஸ்.

அடப்பாவமே , வசந்த மாளிகைப் பாட்டு இல்லையோ அது.

எனக்கு இன்னிக்கும் பூமாலை நீயேன்னு எங்கயாவது கேட்டால் போதும் மனசு பாரமாயிடும்.


விஷுவல் மீடியாவின் சின்ன வயசு பாதிப்பு நம்மைவிட்டுப் போகலை:(

ஆயில்யன் said...

//உலகே மாயம்னு இருமல் எஃபெக்டோட நான் பாடினதும் ,எங்க அம்மா என் முதுகில நாலு வச்சது ஞாபகத்தில இருக்கு.(அவங்க வீட்டுத் தாத்தா படுத்த படுக்கையா இருந்தாரு:)
//

:)))

இப்படி நானும் கூட ஏடாகூடமாக பாடி அடிவாங்கிய அனுபவங்கள் உண்டு! :))

புது நெல்லு புது நாத்துல ஒரு பெண் பேர்ல வரும் பாட்டை பாடப்போய் அது ஒரு பெரிய கம்ப்ளைண்டா மாறிப்போச்சு இத்தினிக்கும் நான் ரொம்ப்ப்ப்ப் சின்ன பையன் அப்ப!

ஆயில்யன் said...

// பேசும்படம்னு ஒரு பத்திரிகை, என் சினேகிதி பள்ளிக்குக் கொண்டு வருவாள். அதை மதியம் உணவு இடைவேளையில் பிரித்துப் படித்து சூடாக விவாதிப்போம்///

எங்க மாமா வீட்ல அந்த புக்கை தொகுத்து பைண்டிங்க் பண்ணி வைச்சிருந்தாங்க அது ரொம்ப நாள் எல்லா வீடுகளுக்கும்ம் ரவுண்டிங்க் வேற போயிட்டு வந்துச்சு :)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மௌலி, சந்திரபாபு படம் விட்டுப் போச்சு.

சினிமா எப்பவுமே நல்ல அனுபவம்தான்.நல்ல சினிமாவா இருக்கிற வரை:)

வல்லிசிம்ஹன் said...

அடப் பாவமே,
ஆயில்யன் !!

எனக்கு 'சிட்டுவேஷன் சாங் மாம்'னே பேரு. இப்ப எல்லாம் ஏதாவது பாடினாக்கூட பையன் சம்திங் ராங்க் அம்மான்னு கேக்கிறான்:0)

துளசி கோபால் said...

அடடா.....கொன்னுட்டீங்கப்பா.

படங்களோட செம தூள்!!!!

நானும் 'உன்னைக் கண் தேடுதே' விக்கலோடு பாடுன ஞாபகம் வருது:-)

வல்லிசிம்ஹன் said...

பத்தீங்களா:)
துளசி, அந்தப் பாட்டை மறக்க முடியுமா. அதுவும் அப்பாவுக்கு நான் விக்கி,நிறுத்திப் பாடினால் சிரிப்பு வந்துடும். ஏன் பூனையைக் கிள்ளின மாதிரி பாடறேன்னு கேப்பார்.:)
பாடின கிளிகளா இருந்து இருக்கோம்.!!

கோபிநாத் said...

கலக்கிட்டிங்க வல்லிம்மா ;)

AMIRDHAVARSHINI AMMA said...

கலக்கிட்டீங்கம்மா

படங்கள் சூப்பர்.

பத்மினி சூப்பரோ சூப்பர்.

நானானி said...

வல்லி! கோத்துவிட்டுடீங்களே! பிடிச்ச சமாச்சாரம்தான்.
லைட்ஸ் ஆன்!கேமரா ரெடி! ஆக்ஷன்!

வரேன்..வரேன்!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோபிநாத்.
நல்லா இருந்துச்சா:)

ஒரெ பழைய படங்களா எழுதறோமேன்னு நினைத்தேன். என்னளவே நான் எழுதமுடியும்னும் தீர்மானிச்சுட்டேன்.:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வர்ஷினி அம்மா. எல்லாம் ஒரே அழகுக் கூட்டம்.
ரசித்ததற்கு நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க நானானி.

யாருப்பா டைரக்டம்மா வந்துட்டாங்க. சேரை இழுத்துப்போடு.
''அம்மா காப்பி கீப்பி,ஜூஸ் ஏதாவது வேணுமா. லைட்டிங் சரியா இருக்கா,.
ஓகேயா:)))0)

ராமலக்ஷ்மி said...

அருமையான பதில்கள். நூற்றுக்கு நூறு. அட, நான் படத்தைச் சொல்லல உங்களுக்கான மார்க்கைச் சொன்னேன் வல்லிம்மா:)!

போட்டிருக்கும் படங்களுக்கு பொர்ருத்தமாய் கேப்ஷன்ஸ் கொடுத்திருப்பதையும் ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி,
பாருப்பா.கண்டு பிடிச்சிட்டீங்களா:)

நூத்துக்கு நூறா::)
டாங்கீஸ் ஆயிரம்!!
வெகு நுட்பமான அனுமானம்:)

நானானி said...

கதை, திரைக்கதை, வசனம், கேமரா, இசை, ஹீரோயின் எல்லாமே நான்..நான்..நாந்தான். ஆக எத்தனை சேர் போடுவீங்க? எத்தனை ஜூஸ் கொடுப்பீங்க?

Radha Sriram said...

வல்லி... அழைப்புக்கு நன்றி. என்னோட சினிமா கேள்வி பதில எழுதியாச்சு...:):)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராதாம்மா. படிச்சுட்டேன்.
பிரமாதமா சொல்லிட்டீங்க. குறிப்பா தசாவதாரத்தில் சிரித்தது.
பியூட்டிஃபுல்.

தென்றல் said...

கலக்கல்!
படங்கள் அருமை!!

வல்லிசிம்ஹன் said...

Ahh. thank you thenRal.

G.Ragavan said...

கலக்கீட்டீங்க வல்லீம்மா....

நீங்க உலகே மாயம் பாடுனாப்புல.... நான் பாடுனது "பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க"

ரொம்பச் சின்ன வயசுல வந்த பாட்டு. அப்பவே பாட்டெல்லாம் ரொம்ப ரசிச்சுக் கேப்பேன். ஆனா அந்தப் பாட்டு மட்டும் எனக்கு கேட்டா சரியா வரிகள் புரியலை. பாடுறவங்க சரியாப் பாட மாட்டேங்குறாங்களேன்னு நெனைச்சிக்கிட்டே "பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிறுக்கி..."ன்னு பாடித் திட்டு வாங்குனேன். ஏன் திட்டுனாங்கன்னு அப்பப் புரியலை. ஆனா இந்த மாதிரி புரியாத சமாச்சாரங்கள் நல்லா மனசுல பதிஞ்சிரும். பின்னால புரிஞ்சி... அப்படியே நிலையா நின்னுறும்.

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

அருமை. அருமை. படங்களிலோடு, கேப்ஷன்களும் சேர்ந்து எழில் கொஞ்சுகிறது. அந்த சிவாஜி, நாகேஷ் படம் சூப்பர், ஏதோ ஒரு லைவ்லி டச் அதில் இருக்கிறது. அப்புறம் அழைப்பிற்கும் மிக்க நன்றி. யோசிச்சிட்டே இருக்கேன் ... 'நல்லா எழுதிடுவேனு சொன்னிங்கல்ல' அத !!!! :))))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நீங்க இருமிப்பாடினது பற்றி சொன்னதும் பாருங்க .. பெண் பெயர் பாடி அடிவாங்கினவங்க.. விக்கிப்பாடினவங்கள்ளாம் கூட்டுசேர வந்துட்டாங்க.. :)

சதங்கா (Sathanga) said...

பதிவு ரெடி. நேரம் இருக்கும் போது வந்து பாருங்க

http://vazhakkampol.blogspot.com/2008/10/blog-post_19.html

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராகவன்.
பாட்டு இப்படியெல்லாம் மாட்டிவிடுகிறதே :)
எந்தப்படம் என்று யோசிக்கிறேன். வரிகள் நினைவுக்கு வந்தது போல இசை வரவில்லை.
முயற்சிக்கிறேன்:)

வல்லிசிம்ஹன் said...

சதங்கா, கலாட்டா கல்யாணம் படம் பூராவூமே அப்போதைய ஹிட் பாடாகள் நிறைன்ந்திர்ருந்தது..
அதில இந்த 'அப்பப்பா நான் அப்பனல்லடா,தப்பப்பா நான் தாயுமல்லாடா'
பாட்டூ சீன் நல்லாவே இருக்கும்:)
சிவாஜி வந்தா சீன் தனிதான். கூட நாகேஷ்!!கேக்கணுமா.

வல்லிசிம்ஹன் said...

நினைவோ ஒரு பறவைன்னு பாடிக்கிட்டு இருக்கேன் இப்ப:)

கயல் முத்து, நாமெல்லாரும் எந்த வயதிலும் பாட்டுக்கு அடிமைதான்:)
அதாஅன் அது எல்லொரையும் ஒன்று சேர்க்கிறது.

வல்லிசிம்ஹன் said...

சதங்கா அழகா எளிமையாப்ப் பதிஞ்சுட்டீங்க.

அழைப்பை ஏற்றதற்கு நன்றிம்மா.