About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, June 29, 2008

துபாயைச் சுற்றி...உலாவி,வம்பு பிடித்துஇன்னொமொரு வீகெண்ட் முடிந்தது.

வெள்ளி காலை, வீட்டுக்கு வெளியே இருக்கும் வராந்தா,வழிப்பாதையில் இருந்த(நான்கு ஐந்து ஃபயர் அலார்ம் இருக்கு)


மணி விடாமல் ஒலித்தது. நான் வந்த பிறகு இவ்வாறு ஒலிப்பது இது நாலாவது தடவை. நாந்தான் அவசர அவசரமாக வெளியே வருவேன். காரிடார் நிசப்தமாக இருக்கும்.


இந்த அமைப்பு எனக்குப் புரியவில்லை. ஏன் ஒருத்தருக்கும் பயம் கிடையாதா என்று இங்கே கேட்டால், அது அலார்ம் சரியில்லைம்மா என்கிறார்கள்.
அப்புறம் தெரிந்தது,யாரோ ஒருத்தர் , வெளி ஆள் புகைபிடித்திருக்கிறார் என்று.

அப்ப உண்மையாவே ஏதாவது நெருக்கடி வந்தால்(வராம இருக்கணும் சாமி)

மெத்தனமாகவே இருந்து விடுவார்களா:(இந்த பில்டிங்கில் தமிழ்க்காரர்கள் 4 பேர் இருப்பார்கள் . மற்றவரெல்லாம் ஐரோப்பியர்கள்,மற்றும் அண்டை நாட்டவர்கள்.

பகல் இரவென்று வேலைக்குப் போய் வருபவர்கள், பூட்ஸ் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.

மத்தபடி அமைதியான இடம்தான். பக்கத்து வீட்டுகாரர் கூட ராத்திரி 11 மணிக்கு ட்ரில்லிங் செய்வதை நிறுத்தி விட்டார்:)


அவர் பைலட்டாக வேலை செய்பவர். அவருக்கு விமானம் ஓட்டும் போது விதவித உத்திகள் தோன்றுமாம்:).அப்படியே நினைவில் பதிந்து கொண்டு வருகிற வழியில் ரெண்டு கட்டை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்.


சரியாக என் தலைப் பக்கம் ,

அவங்க வீட்டுச் சுவற்றின் பக்கத்தில் 10 மணிக்கு நான் தூங்கும் நேரம்,சரியாகப் பார்த்து அந்த வண்டு செய்யும்ரீங்காரம் மாதிரி சவுண்டு ஆரம்பிக்கும்.
எனக்குக் ( கனவில்) பெருச்சாளி பக்கத்தில் உட்கார்ந்து பிராண்டுவது போல
கற்பனை தோன்றும்.

அப்புறம் கட்டிடக் காவலுக்கு இருப்பவரிடம் சொல்லி ஒரு மாதிரி அதைச் சமாளித்தோம்.
இப்படியாகத் தானே ஊரை விட்டுக் கிளம்ப இன்னும் இரண்டே வாரம் இருக்கும் இந்த சமயத்தில் திடீரென நாலாவது அபார்ட்மெண்டில் இருக்கும்
ஒரு எகிப்து நாட்டுப் பெண் வந்து கதவைத் தட்டினாள். அவளையும் அவள் குழந்தையையும் மாடியில் நீச்சல் குளத்தருகே பார்த்த ஞாபகம்.
மொழி தெரியாததால் புன்னகையோடு நிறுத்திக் கொள்வேன்.
இந்த மதிய வேளையில் என்ன பிரச்சினையோ தெரியலையே என்று எனக்கு யோசனை.
குழந்தையும் கூட இருந்தது. அவள் சொன்ன அரை குறை இந்தியின் விஷயம் இதுதான்.
அவர்கள் வீட்டில் வேலை செய்யும் குணா திடீரென்று தன் கையில்
வைத்து இருந்த பாத்திரத்தை விட்டெறிந்து விட்டாளாம்.
பெருக்கும் துடப்பத்தையும் தூக்கிப் போட்டு விட்டாளாம். கத்த வேறு செய்கிறாளாம்.
என்னவென்று விசாரிக்க எங்க மருமகளைக் கூப்பிட வந்திருக்கிறாள்.
நான் பாப்பாவைப் பார்த்துக்கிறேன் ,நீ என்னவென்று விசாரித்துவிட்டு வா,
எதுக்கும் தள்ளி நின்னே பேசும்மான்னு சொல்லி அனுப்பினேன்.
நிறைய இடங்களில் வீட்டு வேலை செய்பவள் அந்த குணா என்கிற பெண்.
நல்ல சம்பளம். நாலைந்து பெண்களோடு வில்லா எனப்படும் குடி இருப்பில் இருப்பவள்.ஆனால் கொஞ்சம் முரடு.
கறார் ஆசாமி.
மருமகள் போய்விட்டு வந்து சொன்ன கதை இதுதான்.
நாலாம் வீட்டுக்கு ப் பெற்றோர்கள் வந்திருப்பதால் வேலை அதிகரித்து விட்டது.
அதற்காகப் பணம் கூடுதலாகத் தரச் சொல்லி கேட்டிருக்கிறாள் குணா.
''சரோஜா பாத்திரம் நிக்காலோ'' அப்டீன்னு சொல்கிறதாக நினைத்துக் கொண்டு மாமியார்க்காரி இன்னும் நிறைய பாத்திரங்களை, அலமாரியில் இருந்து எடுத்துப் போட்டு இருக்கிறாள்:)
''இத்னா பஹுத் காம்!!, ஹம்
'அவுர் குச் பைசா ,800 டிர்ஹம் சாஹ்தி ஹூம்''னு அவள் சொன்னதை
அந்த அம்மா புரிந்து கொள்ளாமல் இன்னும் வேலை கொடுக்க இவளுக்குக் கோபம் வந்து கையிலிருந்ததை விட்டெறிந்ததும்.
மாமியாரும்,மாமனாரும் வெளியே வந்துவிட்டார்கள்:)
குணாவின் ஹிந்தி என் ஹிந்தியைவிட மோசம். அவள் அரபி, இந்தி கலந்து பேசுவாள்.
அவர்கள் புரிதலோ அதைவிட மோசம்.
நாளைக்குத்தான் தெரியும் குணா மறுபடி வேலைக்கு வருவாளா என்று 30ஆம் தேதியாச்சே. சம்பள நாள்.
தற்போது மெயிட்ஸ் மாநாடு லிஃப்ட் பக்கத்தில் நடக்கிறது. என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.!!


Posted by Picasa

18 comments:

இலவசக்கொத்தனார் said...

:))

துபாயில் இன்னும் எவ்வளவு நாள்?

ராமலக்ஷ்மி said...

//மத்தபடி அமைதியான இடம்தான். பக்கத்து வீட்டுகாரர் கூட ராத்திரி 11 மணிக்கு ட்ரில்லிங் செய்வதை நிறுத்தி விட்டார்:)//

எமது குடியிருப்பில் இரவு ஏழு மணிக்கு மேலேயும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் ட்ரிலிங் செய்ய கண்டிப்பாக அனுமதி கிடையாது. சத்தம் கேட்டால் அடுத்த இரண்டாம் நிமிடம் செக்யூரிடி வாசலில் நிற்பார். நல்ல சிஸ்டம்தானே.

//தற்போது மெயிட்ஸ் மாநாடு லிஃப்ட் பக்கத்தில் நடக்கிறது.//

:)! அங்கும்தானா?

cheena (சீனா) said...

ஆகா ஆகா வல்லிம்மா

துபாயிலும் இப்படித்தானா - ஃபயர் அலாரம் அடிக்கடி ஒலிக்குமா ? டிசிப்ளின் இல்லாமல் புகை பிடித்தால் இப்படித்தான். ட்ரில்லிங்க் போன்ற தொல்லைகள் அங்கும் அடுக்ககங்களில் இருக்கிறதா ? ம்ம்ம்ம் - மெயிட்ஸ் தொல்லை - அவர்கள் மாநாடு - இந்தியாவிற்கு துபாய் சளைத்ததல்ல

ஆயில்யன் said...

//தற்போது மெயிட்ஸ் மாநாடு லிஃப்ட் பக்கத்தில் நடக்கிறது. என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.!!//


:)))))

கண்டிப்பா சொல்லணும் :))

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

//பூட்ஸ் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.

மத்தபடி அமைதியான இடம்தான்.//

சாஃப்ட்டான பூட்ஸ் வாங்கிருப்பாய்ங்களோ ???? :)))))

சதங்கா (Sathanga) said...

//சரியாக என் தலைப் பக்கம் ,//

நெசமாவா ? சும்மாவா விட்டீங்க பைலட்ட :))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ். எண்ணிப் பதினைந்து நாள். பிறகு ட்ரான்சிட்ல பாசல் (ஸ்விஸ்)
5 நாட்கள். 20ஆம் தேதி மாலை சிகாகோவில் கடவுள் கிருபையில் இருப்போம்.

உங்க ஊரு வருண பகவான் படு பயங்கரத் தாண்டவம் ஆடினாராம் பத்து நாள் முன்னால.பியானோ தானே பாட ஆரம்பிச்சுட்டதாமே!!

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி, அந்தப் பைலட்டைப் பார்த்தால், எனக்குப் பேச்சே ஸ்தம்பித்துவிடும்.:)

அவசரமா கீழே போகும்போது அவரும் லிஃப்டுக்குள் வந்தாரா, ப்ளீஸ் நீங்க முதல்ல போங்கோ சார்னுட்டு வெளில வந்துட்டேன்.
இந்த ஜேம்ஸ்பாண்ட் படத்தில வருவாரே ஒரு பல்லழகன் அவரை மாதிரி இருப்பார்.
செக்யூரிடி ஒரு நேபாளி. அவரைப் பார்த்தால் ஒண்ணும் சொல்ல மாட்டார்.இங்க ரூல்ஸ் நோ யூஸ்:(

வல்லிசிம்ஹன் said...

வரணும் சீனா சார். உலகமெங்கும் அப்படித்தான்னு நினைக்கிறேன். ஃபயர் அலார்ம்..., வேலைக்கு வரும் பெண்கள் மாநாடு ... எங்க ஊரில எங்க வீட்டுக்கு வெளில சுற்றுச்சுவர் பக்கத்தில் உட்கார்ந்து எல்லா வீட்டு விஷயங்களும் அலசுவார்கள். ஒருவர் வேலை செய்யும் இடத்துக்கு அன்னியர்கள் வேலைக்கு வந்தால் அதோகதிதான்:)
மெட்ராஸ் மொழியில் பீராய்ஞ்சுருவாங்க.

இந்த ஊருப்பொண்கள் கொண்டு வந்த சாப்பாட்டைப் பிரித்து வைத்துக்கொண்டு அடுக்கடுக்காக அலசுவார்கள்:)

வல்லிசிம்ஹன் said...

சதங்கா வரணும்ம்மா.

அந்தப் பொண்ணு குணா வேற வெள்ளைக்காரங்க வீட்டில வேலைக்குச் சேர்ந்து விட்டது. அதுக்குத் தனி அறை அவங்க கொடுத்திருக்கிறார்களாம். ஒரே ஒரு குழந்தை.பெற்றொர் வேலைக்குப் போனதும் இவங்க ராஜ்ஜியம் தான்.:)

வல்லிசிம்ஹன் said...

சும்மா விடறதாவது. எங்க சிங்கம் போனாரே பக்கத்து வீட்டுக்கு.
அங்க போயி அந்த ஆளோட வுட்கட்டிங் டூல்ஸ் எல்லாம் பார்த்துட்டு மயங்கிப் போயி ரெண்டு காப்பி சாப்பிட்டுட்டு வந்துட்டார்.

குட் வொர்க்கர் மா.ஆர்டிஸ்ட்.த்சு த்சு அப்படீன்னு பாராட்டு வேற.

வல்லிசிம்ஹன் said...

ஆயில்யன்,

வாங்கப்பா உங்களுக்குப் போக வேண்டிய பின்னூட்டம் சதங்காவுக்குப் போயிட்டதுப்பா.:)

@சதங்கா,

பூட்ஸ் சத்தம் முடிஞ்சா அமைதிதானே:)

ambi said...

//எதுக்கும் தள்ளி நின்னே பேசும்மான்னு சொல்லி அனுப்பினேன்.//

ஹிஹி.

//தற்போது மெயிட்ஸ் மாநாடு லிஃப்ட் பக்கத்தில் நடக்கிறது. என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.!!//

ஆஜி பாட்டி மாதிரி உங்களுக்கும் இவ்ளோ வம்பு ஆகாது. :p

//அங்க போயி அந்த ஆளோட வுட்கட்டிங் டூல்ஸ் எல்லாம் பார்த்துட்டு மயங்கிப் போயி ரெண்டு காப்பி சாப்பிட்டுட்டு வந்துட்டார்.
//

:)))
பாத்து ரெண்டு பேரும் கூட்டணி அமைச்சுட போறாங்க. :p

வல்லிசிம்ஹன் said...

அம்பி, வம்பில்லாவிட்டால் பைத்தியம் பிடிச்சுமே இந்த ஊரில. என்ன என் மருமகள் டெலிபோனில் வம்பரட்டை நடக்கும். நான் கொஞ்சம் காரிடார் நடைப் பயிற்சியின் போதும் ,மாடியில் ஜிம்,ஸ்விம்மிங் பூலிலும் விவரம் சேர்த்துக் கொண்டு வருவேன்.:0)

பாட்டிகள் காவிரிக்கரை,தாமிரபரணி ஆத்தங்கரைன்னு துணியையும் தோய்த்து எல்லாவற்றையும் அலசுவார்கள். எனக்கு வசதி குறைச்சல் தான்:))

கண்மணி said...

எஞ்ஜாய் மாடி.....நன்றாக அனுபவியுங்கள் வல்லிம்மா..உங்க அனுபவங்கள் எங்களுக்கு அருமையான பதிவாகுமே;)

வல்லிசிம்ஹன் said...

மாடறோம் மாடறோம் கண்மணி.
சிலதைக் குறித்து வைத்துக் கொள்ள மறந்து விடுகிறது.
இல்லாவிட்டால் துபாய்யாணம் எழுதிவிடலாம்:)
நன்றிப்பா. மீண்டும் வாழ்த்துகள்.

அபி அப்பா said...

என் ஹாலில் உள்ள பிள்ளையாருக்கும் எனக்கும் அப்படி ஒரு பொருத்தம்! தினமும் எங்க ரெண்டு பேருக்கும் சண்டைதான். காலை 5.30க்கு குளித்து முடித்து ஊதுபத்தி கொளுத்தி பிள்லையாருக்கு காண்பித்துவிட்டு எத்துக்கும் இருக்கட்டும் அவங்க டேடிக்கும் காண்பிப்போமேன்னு ரெண்டுகையும் தூக்கி மேலே காண்பிச்சா சரியா அதுக்கு மேலே பயர் டிடெக்டர்.... பின்னே என்ன 5.30க்கு அலாரம் தான்!!! பிள்ளையாரும் என்னை திட்டி பார்த்து பார்த்து அலுத்துவிட்டார்!!! தினமும் இந்த கூத்து நடக்கிறது:-))))

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா, பிள்ளையாரை மட்டும் ஊதுபத்தி காட்டிட வேண்டியதுதான்:)
அவருகிட்டேயிருந்து அவங்க அப்பா வாங்கிக்கட்டும்.:)
வீட்டுக்குள்ள சாம்பிராணி போட வேணாம்னு இங்க உத்தரவு!!
ஒரு ஊதுபத்தி மட்டும் பாதி காண்பித்துவிட்டு அணைத்து விடுகிறேன்.