Blog Archive

Thursday, November 02, 2006

மாலைப் பொழுதினிலே ஒருநாள்

Posted by Picasa தெய்வத்தம்பதியருக்கு நமஸ்காரங்கள்.
எம் எஸ் அம்மா பாடலகள்
எல்லாமே அமுதம்,.
அதிலே பக்திப் பாடல்கள்
வெகு வாக எல்லோரையும் ஈர்த்தாலும்,
என்னை மிகவும் கட்டிப்போடும், சொக்க வைக்கும்
சில கானங்கள், தமிழ்ப் பாடல்கள் சில.

அவற்றில் ஒன்று இந்த மாலைப் பொழுதினிலே
பாட்டு.
குரல் குழையப் பாடுவார் தெரியும்.
மனம் அப்படியே நெகிழும்..
அதுவும் உண்மை,.
ஆனால் இந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம் ஒரு
மங்கை தன் முருகனை உண்மையாகவே பார்த்தால் எப்படியெல்லாம் உணர்ந்திருப்பாளோ,

அதை நம்ம எம் எஸ் அம்மா
அப்படியெ கண் முன்னே கொண்டு வருவதாகத்
தோன்றும்.

கல்கி அவர்களின் பாடல் என்று நினைக்கிறேன்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்..

இந்தப் பாடலைப் பதிவோட இணைக்க ஆசை.
ஆனால் அந்த முறையெலாம் கற்கவில்லை.

இதோ அம்மாவும் பாடலும்.


மாலைப் பொழுதினிலே ஒருநாள்
மலர்ப்பொழிலினிலே...
கோலக்கிளிகளுடன் குயில்கள்
கொஞ்சிடும் வேளையிலே....

மாலைக்குலவு மார்பன்
வடிவில் மாமதி போல் முகத்தான்

வேலொன்று கையிலேந்தி என்னையே
விழுங்குவான் போல் விழித்தான்.

நீலக்கடலினைப் போல்
என் நெஞ்சம் நிமிர்ந்து பொங்கிடினும் ....

நாலுபுறம் நோக்கி...நாணி நான்
யாரிங்கு வந்ததென்றேன்.

ஆலிலை மேல் துயின்று, புவனம்
அனைத்துமே அளிக்கும்...

மாலின் மருமகன் யான்,
என்னையே வேலன் முருகன் என்பார்.

சந்திரன் வெள் கு ருகும் முகத்தில்
சஞ்சலம் தோன்றுவதேன்

சொந்தம் இல்லாதவளோ
புதிதாய்த் தொடங்கிடும் உறவோ??

முந்தைபிறவிகளில் உன்னை நான்
முறையினில் மணந்தேன்...
எந்தன் உயிரல்லவோ கண்மணி
ஏனிந்த ஜாலம் என்றான்
எந்தன் உயிரல்லவோ கண்மணி
ஏனிந்த ஜாலம் என்றான்.

உள்ளம் உருகிடினும்
உவகை ஊற்றுப் பெருகிடினும்
உள்ளம்ம்ம்ம் உருகிடினும்
உவகை ஊற்றுப் பெருகிடினும்

கள்ளத்தனமாகக் கண்களில்

கனலெழ விழித்தேன்.

புள்ளி மயில் வீரன்
மோஹனப் புன்னகைதான் புரிந்தான்..

துள்ளி அருகில் வந்தான்
என் கரம் மெள்ளத் தொடவும் வந்தான்.
துள்ளி அருகில் வந்தான்
என்கரம் மெள்ளத் தொடவும் வந்தான்.

பெண்மதிப் பேதமையால்
அவன்  கைப் பற்றிடும் முன் பெயர்ந்தென்...
கண் விழித்தே எழுந்தேன்
துயரக் கடலிலெ விழுந்தேன்....

வண்ணமயில் ஏறும் பெருமான்
வஞ்சனை ஏனோ செய்தான்...
கண்கள் உறங்காவோ?
அக்குறைக் கனவைக்  கண்டிடேனோ ...........

மாலைப் பொழுதினிலே
ஒருநாள் மலர்ப் பொழிலினிலே.......

ரீங்கரிக்கும் அம்மாவின் குரலிழைந்து
பாடல் முடிவடைகிறது.
என்னதவம் செய்தோம் இறைவா
இந்தக் குரல் கேட்பதற்கே!!

14 comments:

துளசி கோபால் said...

பாட்டை நினைவுக்குக் கொண்டு வந்ததுக்கு நன்றி வல்லி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமையான பாடல்! அள்ளும் குரலில்!
அழகன் முருகனின் காதல் ரசம்!

//இந்தப் பாடலைப் பதிவோட இணைக்க ஆசை.//
வல்லியம்மா கேட்டு இல்லைன்னா எப்படி? நான் திருக்குறுங்குடிக்கு வர வேண்டாமா? :-)
இதோ இணைத்தாகி விட்டது!

http://www.musicindiaonline.com/p/x/v4I2n.G4jS.As1NMvHdW/

குமரன் (Kumaran) said...

மிக மிக அருமையான பாடல் அம்மா இது. மீண்டும் மீண்டும் பல முறை பலர் பாடி இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

துளசி,

எம் எஸ் அம்மா பாட்டு எப்போதுமே போடறதுதான்.
பழைய டேப் போட்டதும்தான்
கேக்காமல் விட்டோமேனு வருத்தம் வந்தது.

வல்லிசிம்ஹன் said...

ரவிஷங்கர்,
இதை விட நல்ல உதவி வேறு ஏது.
என்ன ஒரு bhaavam!
கண்டிப்பாகக் திருக்குறுங்குடி போய் விட்டு வாருங்கள். உங்களது அடுத்த டிரிப்பில்.
நன்றி நன்றி நன்றி.

வல்லிசிம்ஹன் said...

குமரன்,
என்ன ஒரு குரலப்பா இது.
முருகனுக்கும் குரல் கொடுக்கிறார்.
அவனை நினைத்தவளுக்கும் உருகுகிறார்.

நன்றி குமரன்.

Geetha Sambasivam said...

பாட்டு என்னோட கணினியிலே வரலை. ஏதோ errorனு வருது. பார்ப்போம். அப்புறமா வரேன்.

வல்லிசிம்ஹன் said...

கீதா, பழைய பாடலைக் கண்டுபிடித்து லின்கும் கொடுத்தார் ரவிஷன்கர்.

ரியல்ப்ளேயெரில்
கேட்க முடிகிறது.

www.musicindiaonline.com

நானும் போய்க் கேட்பேன்.
ஆனால் இந்தப் பாடலைக் கேட்டதில்லை.
பாத்துட்டு சொல்லுங்கொ.

தி. ரா. ச.(T.R.C.) said...

அருமையான பாடல் சிஷ்யனின் உதவியோடு கேட்கும்போது மிகவும் நன்றாக உள்ளது. பாடலில் சிறு திருத்தம் தேவை."_மருவில் மாமதி போல் முகத்தான்", சந்திரன் வெள்குறும் உன் முகத்தில், புதிதாய் தொடர்ந்திடும் உறவோ, கனவைக் கண்டிடேனே
இந்தப் பாடலில் முறையே செஞ்சுருட்டி, பெஹாக், சிந்துபைரவி,மோஹனம்,மாயாமாளவகௌளை, பயன்படுத்தப்பட்டுள்ளன.
நன்றி வல்லி அம்மா

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச.
வெள்குறும்' ஆ!!//

கண்டிடேனோ '' நானே திருத்தணும்னு நினைச்சேன்.

மரு இல் மாமதி!!//

இன்னும் ரசிக்க வைத்து விட்டீர்கள்.என் காது ஏற்கத் தவறி விட்டதை
நீங்கள் எழுதி விட்டீர்கள்.
குருவும் சிஷ்யனும் ரொம்ப நன்றாக இருக்க வேண்டும்.
நன்றி.

வடுவூர் குமார் said...

திருமதி MS- UNனில் பாடிய பாட்டு இருக்கா யாரிடமாவது?என்னிடம் இருக்கு வேண்டுவோர் சொல்லவும்,அனுப்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு நன்றி வடுவூர் குமார்.

Anonymous said...

எனக்கு எம் எஸ் எஸ் அம்மாவின் கச்சேரி எதுவும் நேரில் கேட்டகக் கிட்டவில்லை. வானொலியில் தான் கேட்டேன். சில தினங்களுக்கு முன் you tube ல்,'குறையொன்றுமில்லைக்' கேட்டு கண் கலங்கியது. தெய்வீகவிசை.

இப்பாடல் படித்தின்புற்றேன்.
யோகன் பாரிஸ்

வல்லிசிம்ஹன் said...

வாங்க யோஹன்.
எம்.எஸ். அம்மா குரல் என்னை எத்தனையோ தருணங்களில்

துணை இருந்து இருக்கிறது.எப்படி நன்றி செலுத்த முடியும்? இன்னும் நிறைய பேர் அவர்களைக் கேட்டு மகிழ்ந்தால் நமக்குத் திருப்திதான்.