About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, September 21, 2006

சொல்லலாமா?


வார்த்தைகளுக்கு எப்போதுமே வலிவு உண்டு. இது மிக்க நல்ல விளைவுகள் ஏற்படுத்தும் நல்ல வார்த்தைகளாக இருக்கும் வரை.

நல்ல நினைவுகள் செய்து முடிக்கும்
திறன் கொண்டவை. இதை முயற்சி செய்து பார்த்தால்
தெரியும்.
அதே போல நல்லவை அல்லாத வார்த்தைகளுக்கும்
பயன் உண்டு.

வேறு வேறு சொற்பொழிவுகள், உபன்யாசங்கள்
கேட்கும்போது,
காதில் விழுந்ததவை.:
ஐய்யொ பாவம் சொல்லக் கூடாதாம்.

//இதுவும் கடக்கும். நல்லது நடக்கும்,//

என்று நினைத்துக் கொள்வதோடு
நாம் நமக்கும், பாதிக்கப் பட்டவர்களுக்கும்
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள
வேண்டிய positive,
affirmative words இவைகள்.
முடிந்தால் நல்ல உதவிகளைச் செய்யலாம்.

நம் மனதுக்கு இந்த வழியிலேயே பயிற்சி கொடுக்க வேண்டும்.
எப்போதுமே காவல் இருக்க முடியாது மனம் ஓடும்
ஓட்டத்திற்கு..
அது என்னவோ மாற்றுப்பாதையில் செல்லத்
தான் பழக்கப் பட்டு இருக்கிறது.
ஒரே ஒரு துன்பம் நிகழ்ந்தால் போதும்,
அதை சுற்றியே வட்டமிடும்.

எதிர்காலத்திலும் நிகழப் போகும்
கடின, கஷ்டங்களை நினைத்து நினைத்து

நல்லவை நடக்கும் போதும் மகிழ்ச்சியாக இல்லாத
நிலையை எட்டிவிடும்.

நமக்குத்தான் பதப் படுத்தி வைத்து இருக்கிறார்களே.
"ரொம்ப சிரிக்காதே. நாளைக்கு அழ வேண்டி இருக்கும்''

மனம் அப்போதே தயாராகி விடும், ஓஹோ ஏதோ
நடக்கப் போகிறது.//

மனநல நிபுணர் பிருந்தா ஜயராமன்
தொலைக் காட்சியில் தோன்றும்பொது

நல்ல ,,,மனதுக்கு இனிதான
பயிற்சிகள் சொல்கிறார்.
அதே போல டாக்டர் ஷஆலினி பேசும்போது
பிரச்சினை என்று வரும்போது ஒரு கணம்

மனம் திகைத்தாலும், செயலிழக்காமல்
மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதற்கு
ஒரு வழி சொன்னார்.

சோ வாட்?
வாட் நெக்ஸ்ட்?

இந்த வார்த்தைகளை எப்போதும்
நினைவில் வைத்துக் கொண்டால்
போதும். மன அழுத்தம் வரும்போது,
சரி , இது நடந்து விட்டது.

நான் தளர்ச்சிக்கு இடம் கொடுப்பதும்,
அல்லது

இதிலிருந்து மீள வழி தேடுவதும்
என் கையில் தான் இருக்கிறது.,

என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டால் போதும்.
அதனால் என்ன.?? அடுத்தது என்ன செய்யலாம்.

இது சாத்தியமா/?
சில சமயங்களில் இதைத் தவிர வேறு வழியில்லை. எல்லோருமே சோர்ந்து விட்டால்,
என்ன ஆவது?
ஒருவராவது சமாளிக்க வேண்டுமே.

இதே போல் சந்தர்ப்பங்களில்
ஒருவர் மட்டும் சுறுசுறுப்புடன்
ஓடியாடுவதைப் பார்க்க முடியும்.

சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ உதவ
ஓடி வரும் ஆத்மாக்கள்.

ஐந்து அல்லது ஆறு நபர்கள் கொண்ட இடத்தில்,
குடும்பத்தில் ஒருவ்ுக்கு மட்டும் எப்படி
இந்த தைரியம் வருகிரது.

அதற்காக அவருக்கு உணர்ச்சிகள் குறைவு
என்றும் மதிப்பிட முடியாது.
புதுப்புது அவதாரம் தோன்றுவது
கடவுளால் மட்டும் இல்லை.
மனிதர்களாலும் தான்.

14 comments:

Sivabalan said...

// சோ வாட்?
வாட் நெக்ஸ்ட்? //

இந்த வரிகள்தான் இன்றைய வாழ்க்கை முறைக்கு சுலப வழி..

நல்ல பதிவு. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

சிவபாலன்!
ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து.
ஆமாம் இந்த வார்த்தைகள் தெரியாமலேயே நானும்
இயந்திரமாக இயங்கிய நாட்களும் உண்டு.
நன்றிப்பா.

துளசி கோபால் said...

இங்கே நம்மூரில் என்ன சொல்றாங்கன்னா,

"இட்ஸ் நாட் அ பிக் டீல்"

"இட்ஸ் நாட் த எண்ட் ஆஃப் த வொர்ல்ட்"

விழுந்தவன் எந்திரிச்சு வந்துருவான். அம்புட்டுதேன்:-)))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி. இது உலக முடிவு இல்லை.//

அப்படின்னு எழுந்திருக்க வேண்டியததுதான்.லிஃப்ட் யாராவது கொடுப்பாங்களா?
வெயிட் செய்ய முடியாது.
நாமே தான் அம்மா அப்பானு வெளில வரணும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

இப்பொழுது இருக்கும் சற்று கலக்கமான என் மனதிற்கு உங்கள் வார்த்தைக்ள் ஆறுதலாக இருக்கின்றன.நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு வள்ளி(வல்லி!),
இன்றுதான் தங்களின் இடுகைக்கு வந்து பதிவுகளைக் கண்டேன்.
நன்று! நன்று!!
//புதுப்புது அவதாரம் தோன்றுவது
கடவுளால் மட்டும் இல்லை.
மனிதர்களாலும் தான்.//

மனிதர்களின் எண்ணங்களால்தான், அம்மா.

வல்லிசிம்ஹன் said...

மனிதர்களின் எண்ணங்களால்தான், கடவுளும் தோன்றுகிறார்.
சரியான வார்த்தை.
நன்றி ஞானவெட்டியான் ஐயா..
பதிவுக்கு நீங்கள் வந்தது எனக்குப் பெருமை.
அதுவும் சத்சங்கம் வேண்டும் எப்போதும்.துளசி,நீங்கள்,தி.ரா.ச,குமரன்,ராகவன் ஜிரா. எல்லோரும் எழுதும் பதிவுகளைப் பார்க்கும்போது உற்சாகமாக இருக்கிறது. நன்மை வளரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

குந்தியின் ஞாபகம் தான் வருகிறது., தி.ரா.ச.
அவனுக்கே நல்லவர்களைச் சோதிப்பதில் ஆர்வம் அதிகம். நமக்கு சக்தி கொடுக்க வேண்டியவனும் அவன்தான்.
சரியாகிவிடும். தைரியமாக இருங்கள்.

FAIRY said...

நன்றி வள்ளி, என் மனம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் வார்த்தைகளால். Thank you very much for your optimistic thoughts.

வல்லிசிம்ஹன் said...

Fairy,
thank you for the good words.
yes,
positive thinking is not an easy job.

we have to train our mind so much.
one slip and it goes back to the muddy murky thoughts.

அனுசுயா said...

///நமக்குத்தான் பதப் படுத்தி வைத்து இருக்கிறார்களே."ரொம்ப சிரிக்காதே. நாளைக்கு அழ வேண்டி இருக்கும்''
மனம் அப்போதே தயாராகி விடும், ஓஹோ ஏதோ நடக்கப் போகிறது///

உண்மைதான் சிறு வயதிலிருந்து பழக்கப்படுத்திய விதத்தில்தானே மனித மனம் செல்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம், வாங்க அனுசூயா.

நமக்கே இப்படியென்றால் நம்மை வளர்த்தவங்களுக்கு எவ்வளவு

கட்டுப்பாடு இருந்து இருக்கும்?
கதவு பின்னால் நின்னு தான் சிரிக்கணும்.:-0)

துளசி கோபால் said...

வெளியே ரோடில் நடந்துபோகும்போது
தாவணி/புடவைத்தலைப்பை இழுத்து
தோள் போர்த்தி, தலை குனிஞ்சு நடக்கணும்.

இன்னும் மகா கொடுமை என்னன்னா,

சினிமாவுக்குப் போனால், அங்கே காமெடி சீன்ஸ் வரும்போது சத்தமாச் சிரிக்கக்கூடாது(-:

வல்லிசிம்ஹன் said...

அது மட்டுமா?
பின்னலை முன்னாலே போடக்கூடாது.
நீட்டத் திலகம் வைக்கக் கூடாது.
ஓடக் கூடாது.
இன்னும் யோசிச்சு சொல்லறேன்.
:-))