About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, April 06, 2013

புதுக்கட்டிடங்களும் பழைய கட்டிடங்களும்

பழைய வீடு ஒன்று

சென்னையைப் பிடித்திருக்கும் பேய் ,   நிலங்களை
அழித்து வீட்டாக்கியது.
இப்பொது இருக்கும் வீடுகளை அழித்து புது   எட்டடுக்கு மாளிகைகள், (நீச்சல் குளத்தோடு ஒன்று வரப் போகிறது. எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடுகள்   தாண்டி.

அடுத்தவீட்டு அம்மாவின் தூக்கம்  போய்ப் பல நாட்கள் ஆச்சு.


நாங்கள் எல்லோரும் இங்கே    வந்த போது அவர்களும் வந்தார்கள்.
நல்ல பலமான கட்டிடம்.
அவர்களுக்கு அடுத்த ப்ளாட்
  பழைய பரம்பரை வக்கீலின்

எட்டு க்ரௌண்ட்       நிலம்..
அவரதுகாலம் முடிந்து 50 வருடங்களுக்கு அவரது மகள் இருந்து வந்தார். இப்போது அவரும் மறையவே   அவரது மகன்   வரப்போக இருந்தவருக்கு  இந்த பங்களாவைப்   பராமரிப்பது சிரமம்  ஆனது. இடிக்க ஆரம்பித்து வடநாடுக் கம்பெனி ஒன்றுக்கு காண்ட்ராக்ட்   கொடுத்திருக்கிறார்.
சிங்கத்துடன்  தோழமை உண்டு.

அவர் இருப்பது டில்லியில்.


இப்போது இந்த நிலத்தில் புது ப்ரீமியம் வீடுகளைக் கட்டப் போகிறார்கள்.


மண்தோண்டும் இயந்திரம் வந்து   இரவு பகலாக வேலை செய்கிறது.

அவர்கள் இறக்கும் இரும்புத்தூண்கள் பக்கத்தில் இருக்கும் வீட்டை  ஆட்டம் காண வைக்கிறது.

காலை இல்லை இரவு இல்லை எப்பவும் வேலை.


எனக்குப் போன் செய்தார்கள்   அந்த அம்மா.
உங்களுக்குச் சத்தம் கேட்கிறதா  என்று. நான் தள்ளி இருக்கிறேனே.கொஞ்சமாகக் கேட்கிறது என்றேன்.

ஒரு நாள்  மாடி ,கீழ் எல்லாம்   ஆடுவதைக் கண்டு
அதிர்ந்துவிட்டார் .வயதானவர்.
ஆனாலும்  அந்தப் பத்துமணிக்கும்   அவர்கள் பக்கம் இருக்கும் ஜன்னலைத் திறந்து அவர்களைப் பார்த்து க்  கண்டித்தார் .
எல்லாம் வட இந்தியர்கள். தங்களுக்கு  இடப்பட்ட  கடமையைச் செய்பவர்கள்.
ஒன்றும் புரியாமல் நிறுத்தி விட்டார்கள்.
மறுநாள்   இன்னும் இரண்டு பெரியவர்களுடன்   அங்கே சென்று   கட்டிட  மேஸ்திரியிடம் விவாதித்து இருக்கிறார். அவரும் கட்டிட இஞ்சினீயருடன் பேசுவதாக

உறுதி அளித்த பிறகே  என் சிநேகிதி திரும்பி வந்தார்.

அது ஒரு சினிமாக் கம்பெனியின் படப்பிடிப்பு  நடக்கும்
இடமாக இருந்தது. சினிமா எடுப்பவரும் கேரளாவுக்கே திரும்பி விட்டாரோ என்னவோ!

நான் கேரளா ஜுவல்லரி வரலாம் என்று  வேடிக்கையாகச்  சொன்னது, இப்போடு நல்லி   துணிக்கடையாக  வர   செய்திகள் பறக்கின்றன.


எங்களுக்கு என்ன குறை சொல்லுங்கள்!!!

தானே(மும்பை)  இடிபாடு  வேறு புதிதாகப் பயமுறுத்தி இருக்கிறது.

ஏனோ ரமணா படம் நினைவுக்கு வந்தது:(
இனிமேல்    என்னவெல்லாம் வரப் போகிறதோ.
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

23 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன வேண்டுமானாலும் நடக்கும்...

நீங்கள் பயப்படாமல் இருங்கள் அம்மா...

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்...!

ராமலக்ஷ்மி said...

அருகில் வசிப்பவரின் பாடு திண்டாட்டமே:(. சத்தம் தாங்க முடியாது. அதோடு ஆட்டம் வேறு காண்பதாகச் சொல்கிறீர்கள்.

sury Siva said...


ரெசிடென்சியல் ஃப்ளாட்ஸ் கட்டறதா இருக்காங்களா ?
அந்தப்பக்கம் சற்று முன்னால் தான் வந்தேன்.
அந்தக் காட்சியை நானும் கண்டேன்.

ரெசிடென்ஸியல் ஃப்ளாட்ஸ் ஆக இருந்தால் ஒரு தகவல் சொல்லவும்.

அந்தப்பக்கம் வந்து விடலாமோ என்று இருக்கிறேன்.
சாய்ரக்ஷை ஆகிவிட்டது என்றால் கற்பகாம்பாளை காண பொடி நடையாய் போகலாம்.
இல்லையென்றாலும் அந்த வீதிலே இருக்கிற பார்க்கிலே போய் உட்காரலாம்.

சுப்பு தாத்தா.

ஸ்ரீராம். said...

இதே போன்ற தொல்லைகள் பொறுக்க முடியாமல்தான் கீதா மேடம் ஸ்ரீரங்கம் சென்றார்கள் இல்லையா? தலைவேதனை ஒருபக்கம், நம் வீட்டுக்கும் பாதிப்பு வருமோ என்ற மன வேதனை ஒரு புறம்... பாவம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சென்னையைப் பிடித்திருக்கும் பேய் , நிலங்களை அழித்து வீட்டாக்கியது.
இப்பொது இருக்கும் வீடுகளை அழித்து புது எட்டடுக்கு மாளிகைகள், (நீச்சல் குளத்தோடு ஒன்று வரப் போகிறது. எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தாண்டி.//

புதிதாக எதுவந்தாலும் ஏற்கனவே அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பாடு மிகவும் திண்டாட்டம் தான்.

பெரிய தலைவலியாகி விடும்

நன்றாகவே சொல்லியுள்ளீர்கள்.

-oOo-

[பொக்கிஷம் முதல் 5 பகுதிகளுக்குத் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்துக் கூறியிருந்தீர்கள். சந்தோஷம்.

6 வது பகுதியும் வெளியாகி விட்டது.- தங்களின் பொக்கிஷமான கருத்துக்களுக்காக் காத்திருக்கிறது. ]

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தனபாலன்.
இருக்கும் இடத்தைவிட்டு எங்கே போவது.எல்லோருக்கும் உண்டானது நமக்கும். எதையும் ஆரம்பிப்பவர்கள் சுற்றூச்சூழலை யோசித்து வேலையில் இறங்கலாம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே ராமலக்ஷ்மி.எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு பிற்காலத்தில் சுனாமி வர வாய்ப்பு இருக்கிறது என்று யோசனை.
எங்கள் காம்பவுண்டிலிருந்து இரண்டடிவிட்டு பள்ளம் தோண்டினார் ....இருபது அடிக்கு. வீடு நிலமட்டத்திலிருந்து ஆறடி உயரத்தில் இருக்கிறது.அவர்கள் சமையலறையும் எங்கள் முதல்மாடியும் சரிசமம்:)

வல்லிசிம்ஹன் said...

இங்கே வந்தேன் என்று நிதானமாகச் சொல்கிறீர்களே.
நியாயமா.இங்கே வீட்டுக்கு வந்திருந்தால்
கொஞ்சம் இருந்துவிட்டுப் போயிருக்கலாமே.ரெசிடென்ஷியல்+ஷாப்பிங் என்று சொல்லி இருக்கிறார்கள்.விசாரித்து உங்களுக்குச் சொல்கிறேன்.சுப்பு சார்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். அவர்கள் பாடு ரொம்பத் திண்டாட்டமாகப் போய்விட்டது.பாவம்.
ஏற்கனவே இரவுவேளையில் கனரக வண்டிகளின் தொந்தரவு. பஸ் போனாலே ஜன்னல்கள் அதிருகின்றன.
சுற்றி நிறுத்தப் படும் வண்டிகள்.சிரமம்தான்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபு சார்.
நேற்று வேலைகள் இருந்தது . படிக்கமுடியவில்லை.
6ஆம் பாகத்தை இன்றே படிக்கிறேன்.
வருகைக்கு மிக நன்றி.

துளசி கோபால் said...

அக்கம்பக்கம் வீட்டு வேலைகள் நடந்தால் அதுக்குப்பக்கத்தில் இருப்பவர்களுக்கு தலை இடி மட்டுமா? தூசி தும்பு அலர்ஜி இருப்பவர்கள் செத்தார்கள்ன்னு சொல்லணும்.

நாம் பெஸண்ட் நகரில் இருந்தப்ப எதிர்வீடு கட்டுதல். அங்கே இருந்த 11 மாதமும் சத்தமும் தூசியும் தும்புமாப் போச்சு.
காலி செய்யும் சமயம் வீட்டுப்பின்புறம் இருந்த ப்ரமாண்டமான செக்‌ஷனில் அடுக்கு மாடிக்குன்னு தோண்ட ஆரம்பிச்சாங்க.

தவுல் மிருதங்கமா ஆச்சு வாழ்க்கை . இதிலிருந்து தப்பிக்க சண்டிகருக்கு ஓட்டினார் சாமி.ஓடுனோம். அங்கே போனா.....

வாணலிக்குப் பயந்து நெருப்பில் குதிச்ச கதை!!!!

வல்லிசிம்ஹன் said...

ஞாபகம் இருக்கு துளசி!!
கோபாலுக்குக் காதுவலி வந்ததே இதனாலயோ என்று நான் நினைப்பேன்.

இவர்கள் வீட்டை முழுவதும் ஏசி செய்திருக்கிறார்கள். ஜன்னல்களைத் திறப்பதே இல்லை.

சீக்கிரத்தில் பயப்படுவார். தனியாக இருப்பதால் பயம் இன்னும் ஜாஸ்தி.:(
இதுவும் கடந்துபோகும்.

sury Siva said...

// தூசி தும்பு அலர்ஜி இருப்பவர்கள் செத்தார்கள்ன்னு சொல்லணும்.//

அதான் இல்லைன்னேன்.

ஒரு மாசமா இல்லை ஒண்ண்ரை மாசமா லொக்..லொக்....
லொக்..லொக்.......லொக் லொக்.லொக்.லொக் அப்படின்னு
பக்கத்து வீடு இடிக்கறதையும் மீறின்டு நான் இருமின போது,

எங்க வூட்டு டாக்டரு, மருந்து கொடுத்து,
ஏ கிழவா, உனக்கு இன்னும் நேரம் வல்லைடா, இது அல்ரஜிக் காஃப்
ஊட்டுக்காரிக்கு கோபம் வந்தா எப்படி, அப்பப்ப ச்த்தம் போடுறாள் இல்ல...
அது மாதிரி தான்...கவலைப்படாதே...
மருந்தை சாப்பிட்டு வெளிலே போனா வாயை மூடிக்கினு போ
அப்படின்னு சொல்லி போட்டாரு.

எப்ப டாக்டரு சாரு சரியாகும் அப்படின்னு கேட்டென்.
சிவராத்திரிக்கு முன்னாடி சரியாயிடும் அப்படின்னு சொன்னாரு.

நம்ப் மாட்டீங்க..
க்ரெக்டா போன சிவராத்ரி காலைலே எழுந்துகினு வழக்கமா ராஜேஸ்வரி
பதிவுக்கு போன அங்கன ஒரு சிவன் மேல பாடல்.
பாட ஆரம்பிச்சேன். அப்ப தான்...புரிஞ்சது.

இருமல் ஓடிப்போச்சே !!

நேத்திக்கு திரும்பவும் எங்க டிரினிடி டாக்டருகிட்டெ போனேன்.
போயிடுச்சு டாக்டர் போன சிவராத்ரி அன்னிக்கே என்றேன்.

அது சரி.. ரங்காச்ச்சாரி கடை அந்தக்க்டை அப்படின்னு அந்தப்பக்கம் போகாதீக..

ஏங்க...
திரும்பவும் தூசி, தும்புலே மாட்டிடுவீங்க.. என்றார்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

கோமதி அரசு said...

கட்டட வேலை முடியும் வரை உங்களுக்கு கஷ்டம் தான்.
சத்தம், தூசி, எல்லாம் கஷ்டம் தான்.
எங்கு பார்த்தாலும் கட்டுமான பணிகள் நடந்து கொண்டே இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் சுப்பு சார். ஹோலியோட இருமல் போயிடும்னு எங்கள் டாக்டர் சிவராமனும் சொன்னார். சொன்ன நேரம் நல்ல நேரம்.
ரங்காச்சாரிக்கு சேல் போது போகக் கூடாது. மாமிகள் இடித்தே தள்ளிவிடுவார்கள்.:)

வல்லிசிம்ஹன் said...

எங்கு பார்த்தாலும் செங்கல், மணல் தூசு தும்பு,தண்ணீர் லாரி. இவைகளைத் தாண்டியே நம் நடையோ,
வண்டியோ போக வேண்டும். ஒரு துளி வருத்தமோ,மன்னிப்போ அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
இதுதான் நம் நாடு கோமதி.

வடுவூர் குமார் said...

சொல்லப்போனா இந்த மாதிரி பெரிய அஸ்திவாரம் போடும்போதெல்லாம் பக்கத்தில் உள்ள வீடுகள் கட்டும் இருந்த நிலையை ரெக்கார்ட் செய்ய வேண்டும்.அந்த வீடு கட்டும் போது இங்கு விரிசல் ஏற்பட்டால் அதற்கு அவர்கள் தான் பொறுப்பு.இதெல்லாம் அரசாங்கம் கட்டுப்படுத்தனும்!!!

அமைதிச்சாரல் said...

எங்க பில்டிங்கிலும் 'ஏ' விங் கட்டினப்புறம்தான் 'பி,சி க்கான வேலைகளை ஆரம்பிச்சாங்க. ரெண்டுமே ஏழு மாடிகளைக் கொண்டவை. கட்டி முடியறவரைக்கும் தூசு, ட்ரில்லிங் மெஷின் சத்தம்ன்னு ரெண்டு வருஷம் வரைக்கும் நரக வாழ்க்கைதான். பத்தாததுக்கு அத்தனை கச்சடாக்களையும் தாண்டித்தான் தெருவுக்கே போக முடியும். இத்தனை அவஸ்தைகளையும் கண்டதால் உங்க கஷ்டத்தைப் புரிஞ்சுக்க முடியுது வல்லிம்மா.'

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார். உங்களை மாதிரி நேர்மையா யோசிக்கறவர்கள் இங்கே யாரும் இல்லை.
பக்கத்துவீட்டில் அஸ்திவாரம் போடும்போது எங்கள் வாசல் பார்த்த அறையில் ஜன்னலோரம் விரிசல் விட்டுவிட்டது.
அதுவும் புதிதாகக் கட்டப்பட்ட அறை.
அதனால் எந்த எஞ்சனீயரைக் குறை சொல்வதுனு புரியலை:( ரொம்ப நாட்கள் கழித்து உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல்.உங்க சம்பவம் இன்னும் பயமாக இருக்கே.
எத்தனையோ நபர்கள் இங்க லோன் வாங்கி வீடு கட்டறதனால பாதிவீடு முடிஞ்ச கையோட குடி வந்துவிடுகிறார்கள்.அவர்கள் வந்தபிறகு மாடிகள் கட்டப் படுகின்றன.
தெரிந்துதான் செய்வார்கள் என்றே நம்புகிறேன். நன்றி மா.

Geetha Sambasivam said...

எங்க இரு பக்கம் வீடுகள், எதிர்ப்பக்கத்து வீடுகள்னு இடிச்சுக் கட்டும்போது இதே அவதியைப் பட்டோம். இப்போ நினைச்சால் கூட மனம் கலங்கி அடி வயிறு கலக்குகிறது. எத்தனை துன்பங்கள்! :((((

Geetha Sambasivam said...

//சொல்லப்போனா இந்த மாதிரி பெரிய அஸ்திவாரம் போடும்போதெல்லாம் பக்கத்தில் உள்ள வீடுகள் கட்டும் இருந்த நிலையை ரெக்கார்ட் செய்ய வேண்டும்.அந்த வீடு கட்டும் போது இங்கு விரிசல் ஏற்பட்டால் அதற்கு அவர்கள் தான் பொறுப்பு.இதெல்லாம் அரசாங்கம் கட்டுப்படுத்தனும்!!!//

நாங்க இதை எல்லாம் எடுத்துச் சொல்லியும் எந்தப் ப்ரமோட்டரும் காதில் போட்டுக்கலை. அவங்க பாட்டுக்கு அவங்க வேலையப் பார்த்தாங்க. கஷ்டப் பட்டது நாங்க தான். வீட்டை விட்டு அவசரத்துக்குக் கூட வெளியே வர முடியாது. எங்க மாமனார் சிராத்தம் அன்று என் மைத்துனர், ஓர்ப்படி எல்லாம் வீட்டுக்குள் வரமுடியாமல் ஏறிக் குதித்து வந்தாங்க. அன்னிக்குப் பால்போடறவங்க வீட்டுக்கு வரமுடியாமல் பாலே கொடுக்கலை. இதை எல்லாம் சொல்லியும் அவங்க பாட்டுக்கு ரசிச்சுச் சிரிச்சுட்டு அடுத்த வேலையைக் கவனிக்கப்போயிட்டாங்க. வயித்தெரிச்சல்!:(((((

வல்லிசிம்ஹன் said...

பிறர் துன்பங்களை உணர்பவர்கள் இப்படியெல்லாம் செய்வார்களா கீதா.
அவரவர் பணம். பூமாதா ஒன்றும் சொல்ல மாட்டாள்.
தங்கள் லாபத்திற்காக கைபேசியிலியே உலகம் விற்கும் ப்ரோமோட்டர்கள்.
உங்கள் சிரமங்களைக் கேட்கும்போதே துன்பமாக இருக்கிறது.
நல்ல வழி காட்டவே இதெல்லாம் நடந்தது போலிருக்கிறது..