Blog Archive

Saturday, July 27, 2019

மருதமலை முருகன் மகிமை

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.

மருதமலை முருகன் மகிமை  1971

கோவையில் நாங்கள் இருந்தது நான்கு வருடங்கள்.
சின்னவன் பிறந்தது காரைக்குடியில் என்றாலும்
வளர்ந்தது அங்குதான்.
பெரியவனும் ,மகளும்  முதன் முதல் கல்விக்கூடம்
செல்ல ஆரம்பித்தது அங்கே தான்.

சிங்கத்துக்கு  உடல் நலம் சரியில்லாமல் இருந்ததும் அங்குதான்.
அதீதக் களைப்பும்,
தொழிலாளர் பிரச்சினைகளால் மன உளைச்சலும்
உஷ்ணத்தைக் கிளப்பி விட கால்களில்
வேனல் கட்டிகள் கிளம்ப  என்னவென்று தெரியாமல் அவதிப் பட்டோம்.
வாரத்தில் சில நாட்கள் வேலைக்குச் செல்ல
முடியவில்லை.
நாங்கள் இருந்த வீடில் வெளியே வந்தால் மருதமலையும், அதன் உச்சியில் இருக்கும் விளக்கும் தெரியும்.
தினம் வாயில் Gate பூட்டும்போது முருகா நீயே துணை என்று
வணங்கி வருவேன்.

வல் தாங்கமுடியாமல் அவர் சிரமப் படும்போது ஒரு நாள் கம்பெனி வைத்தியர்,
colonoscopy வேண்டும்.வயிற்றில் ஏதாவது புண் இருந்தால்
இது போல் தோலில் காட்டும் என்று சொன்னார்.
நல்ல அனுபவமிக்க டாக்டர்.

இந்த ஸ்கோபி விஷ்யம் எனக்கு மிகப் பயம்.
திருமணமாகி 5 வருடங்கள் ஆன நிலையில்

அந்த நிமிடத்தில் நிறைய வயதானது போல
உணர்ந்தேன்,.
கடவுளே  அந்த பயாப்சியில் தவறேதும் இருக்கக்
கூடாதே.. மருதமலை முருகா, எனக்குத் தெரிந்தது பால் அபிஷேகம் மட்டுமே.
அவர் உடல் உஷ்ணத்தைக் குறைத்து விடு. எங்கள் சின்னக் குடும்பத்தக் காத்து வா
காக்க வா என்று இரவில் அந்த மலை விளக்கிடம் வேண்டிக் கொண்டேன்.

மறு நாள் மருத்துவமனைக்குச் சென்றவர் மாலையில் தான் வந்தார்.
இரண்டு நாட்கள் கழித்து சொல்வார்கள்.
மனுஷனுக்கு இது போல வரக்கூடாது என்று மனம் நொந்தார்.

முருகன் கைவிடவில்லை.
பயாப்சி ரிசல்ட் வரும் முன்னமே புண்கள் உடைந்து
காய ஆரம்பித்தன.
இது என்னமா அதிசயம் என்றவர், முகத்தில் தெளிவு
பிறந்தது.
நான் அவரிடம் சொல்லவில்லை. இது எனக்கும் முருகனுக்குமான
ஒப்பந்தம் அல்லவா.
என் மனம் அந்த ரிசல்ட்டைப் பற்றிக் கவலைப்
படவில்லை. அமைதியாக உணர்ந்தேன். எதுக்காகப் பயந்தேனோ அது
இல்லை என்று வந்து விட்டது.

எல்லாம் மலைமேல் முருகன் செய்த நலம்.
அன்றிலிருந்து எதை மறந்தாலும் காலையும் மாலையும் மருதமலை
முருகன் தரிசனம் வீட்டிலிருந்தே.
 பாலபிஷேக  பிரார்த்தனை நிறைவேற்றியது ஐந்து வருடங்களுக்குப்
பிறகு. அவனை வணங்க வேண்டும் என்ற நினைப்பைக் கொடுத்ததும் அவன் அருளே.

வாழ்க முருகன் நாமம்..
மருதமலை ஆண்டவன் ,நான் வணங்கும் சமயபுரத்தாள், திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார், திருப்பதி தெய்வம் இவர்களோடு
என் மனக் கோவிலில் சேர்ந்து கொண்டான்.





29 comments:

கோமதி அரசு said...

அருமையான இரண்டு பாடல்கள் .இரண்டுமே மிகவும் பிடித்த பாடல்.
உங்கள் நீங்கா நினைவுகளுடன் பகிர்ந்து கொண்டது மிகவும் நெகிழ்வு. மருதமலை பக்கம் அந்த காலத்தில் குளிர் அதிகமாய் இருக்கும், அப்படியும் வேனல் கட்டிகள் வந்தது பயமாய் தான் இருக்கும்.
மருதமலை முருகன் கேட்டவருக்கு கேட்ட பலன்களை உடனே தருவார். நல்ல படியாக குணபடுத்தி விட்டார்.

வடவள்ளியில் இருந்தீர்களா?
மலை அடிவாரத்தில் என்றால் எங்கும் பசுமை, மலை அழகு வயல்கள் அழகு எல்லாம் ரசித்து இருப்பீர்கள்.

இயற்கை அழகு கொட்டி கிடந்த இடமே !

நாங்கள் காந்திபார்க் அருகிலிருந்து மாட்டு வண்டி கட்டிக் கொண்டு மருதமலை போய் வந்து இருக்கிறோம் கிருத்திகை அன்று. பஸ் உண்டு, ஆனால் கூட்டமாய் இருக்கும். பள்ளி பருவத்தில் சுற்றுலா போல் அடிக்கடி மருதமலை, பேரூர் அழைத்து செல்வார்கள்.


1970 வரை கோவியில் இருந்தோம், அப்பாவுக்கு தேனி மாற்றல் ஆகி விட்டது அங்கு போய் விட்டோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி இனிய காலை வணக்கம்.
கோவையில் ராமலிங்க நகர் என்ற இடத்தில் இருந்தோம். வீட்டைச் சுற்றி
வயல் வெளி உண்டு. வேலியில் சிலசமயம் பாம்பு சட்டை உரித்திருக்கும்.
ஆனால் நல்ல குளுகுளு
என்றிருக்கும்.
இவர் வேலை மெஷின் களுடன்.
இரவெல்லாம் உழைப்பார்.

முருகன் தான் அங்கே காப்பாற்றினார்.
நீங்கள் 70 வரை இருந்தீர்களா.
மருத மலையில் பார்த்திருப்போமோ என்னவோ.
சின்னப் பெண்ணாக இருந்திருப்பீர்கள்.

ஸ்ரீராம். said...

முருகனுக்கும் உங்களுக்குமான ஒப்பந்தம் சூப்பர். நம்பினோரைக் கைவிடாத கருணை வள்ளல்.

ஸ்ரீராம். said...

அட கோமதி அக்கா... நீங்களும் அந்த ஊரிலிருந்திருக்கிறீர்களா? நான் இன்னும் மருதமலை பார்த்ததில்லை.

ஸ்ரீராம். said...

இரண்டுமே இனிய பாடல்கள். இரண்டாவது உருக்கம்.

நெல்லைத்தமிழன் said...

அவனிருக்கக் கவலை ஏன்.

இரண்டு பாடல்களும் அருமை. எனக்கு மிகவும் பிடித்தது நீயல்லால் தெய்வமில்லை பாடல். தலைப்பைப் படித்ததுமே எனக்கு மருதமலை மாமணியே பாடல் நினைவில் வந்துவிட்டது.

KILLERGEE Devakottai said...

முதல் பாடல் எவ்வளவு முறை கேட்டு இருப்போம் என்றும் நிலைத்து நிற்கும் பாடல் அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

முருகா... முருகா...

அருமையான பாடல்கள்...

மாதேவி said...

எங்கள் அப்பாவுக்கு பிடித்தபாடல் மாலையானால் ரக்கோட்டரில் பக்திப்பாடல்கள் தினமும் ஒலிக்கும். தினமும் சாயேந்திரம் கோவில் சிலநாட்களில் காலையும் மாலையும் திருவெம்பாவைகாலத்தில் அதிகாலை நான்குமணி என 94வயதிலும் நடந்து சென்று வந்தவர்.அவர்ஆண்டவனிடம் சென்று ஒன்பது பத்துவருடம் ஒருநாள் படுத்தவர் இல்லை.சங்கடஹரசதுர்த்தி அதிகாலை ஆண்டவனிடம்.
சமயபுரம் நான் செல்லவில்லை மற்றஇரண்டும் தரிசித்திருக்கிறேன்.
இறைவன் அருள்தான் நோயை குணமாக்கியது.

துரை செல்வராஜூ said...

முருகன் திருவருள் முன் நின்று காக்கும்..

அதில் ஐயமே இல்லை...

வெற்றி வேல்.. வீர வேல்!..

துரை செல்வராஜூ said...

நீயல்லால் தெய்வமில்லை.. - எனது
நெஞ்சே நீ வாழும் எல்லை..

சீர்காழியாருடைய கச்சேரியில் இந்தப் பாடலைக் காதாரக் கேட்டுள்ளேன்..

எனது தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்...

கோமதி அரசு said...

ஸ்ரீராம், 5 வருடங்கள் அங்கு இருந்தோம். என் இனிமையான இளமை கால நினைவுகளை வல்லி அக்காஅழைப்புக்கு எழுதிய பதிவு சுட்டி கொடுத்து இருக்கிறேன்.படித்து பாருங்கள்.


https://mathysblog.blogspot.com/2010/03/blog-post.html

சார் குடும்பத்துடன் உறவு ஏற்பட்டது அந்த ஊரில் தான். என் அக்காவை கோவையில் தான் சாரின் மூத்த அண்ணா மணந்து கொண்டார்.
எங்கள் குடும்ப மூத்த மருமகள். நான் நான்காவது மருமகள். எனக்கு மதுரையில் திருமணம் ஆனது.
அப்போது அப்பா மதுரையில் வேலை பார்த்தார்கள்.

கோமதி அரசு said...

அக்கா , உங்கள் வீடு ராமலிங்கநகரா? எங்கள் மாமியார் வீடு ராமலிங்கம் காலனி.அவனசிலிங்க கல்லூரி அருகில்.
1971ல் எல்லாம் மருதமலை தெரியும் இப்போது தெரியாது கட்டிடங்கள் மறைக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
சோதனைகள் வருவதே அவனை நினைக்கத்தான்.
மறந்தும் அவனை நினைக்காமல் இருக்கக் கூடாது. அதற்காகத்தான் இந்த மாதிரிப் பாடல்களைக்
கேட்டுக் கொண்டே இருப்பது.
சீர்காழியின் குரல் மணி போன்றது.
ரீங்காரம் இன்னும் இருக்கிறது.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். அன்பு முரளிமா.
இவருக்கு ஒரே ஒரு தெய்வம் தான்.
ஸ்ரீராமன் மட்டுமே.

எனக்கு எல்லோரும் வேண்டும். கண்முன்னே அவன் விளக்கு தெரிந்தது.
ஒளி கொடுத்த ஊக்கம்,
பிரார்த்தனையாக மாறியது.

நீயல்லால் பாடல் தென் தமிழ் நாட்டில் வளர்ந்ததால்
எப்பொழுதும் கேட்ட பாடல்.
ரசித்து உருக வைத்துக் கண்ணில் நீர் வரவழைக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

யாமிருக்க பயமேன்.... என அவன் இருக்க கவலை ஏன்...

இரண்டு பாடல்களும் பிடித்த பாடல்கள். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள்.

இரண்டு மூன்று முறை சென்று இருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
உண்மைதான் காலத்தால் அழியாத பாடல். நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு ஜெயக்குமார்.வளமுடன் வாழ்க.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். அன்பு தனபாலன்.
நல்ல பாடல்கள் நம்மில் நன்மையைக் கூட்டுகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி , ஒரே ஒரு பாடல் அத்தனை லட்சம்
மனதைத் தொட்டு இருக்கிறது.

நம் மனதில் பக்தியை நிரப்ப தெய்வீகப்
பாடல்களே போதும்.
உங்கள் அப்பாவைப் பற்றி அறிய அத்தனை ஆனந்தமாக இருக்கிறது.
அதுவும் ஆரோக்கியமாக இருந்து ,இறைவனை வழிபட்டிருக்கிறார்
என்றால் மனம் நெகிழ்கிறது. இது போல் திடம் இப்போதும்
சில இடங்களில் இருக்கிறது.
அதனால் தான் நமும் கடவுள் நம்பிக்கையைக் கைவிடவில்லை.
நல்ல நாளில் இறைவனை அடைந்திருக்கிறார்.
அவர் செய்த புண்ணியம் உங்களை வாழவைக்கும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துரை செல்வராஜு,
நம்மை வாழ வைக்கும் தெய்வம் அவன். கண்ணெதிரே
நோயை மாற்றினான்.
நீங்கள் நேரிலியே கேட்டிருக்கிறீர்களா. மிகவும் கொடுத்து வைத்தவர் மா.

அப்பாவுக்கும் பிடிக்குமா. எத்தனை பேறு நாம் பெற்றிருக்கிறோம் பா.
நமக்கு தெய்வ நம்பிக்கை வரும் வழி அவர்கள் தானே
காட்டினார்கள். அப்பாவுக்கு நமஸ்காரங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி, அது காலனியா,நகரான்னு மறந்து விட்டது.
அவினாசி கல்லூரியின் அருகில் தான் வீடு.
அங்கு சென்று ஒரு சமையல் கோர்ஸ் கூட
கற்றுக் கொண்டேன். அருமையான நாட்கள்.

உங்கள் அக்கா உங்களுக்கு ஓரகத்தியா. எவ்வளவு இனிமை.
நீங்கள் கொடுத்த இணைப்பைப் பார்க்கிறேன்
எத்தனை நினைவுகள். அதையும் மறக்காமல் சரியாகச் சொல்கிறீர்கள்.
என் தங்கை மிக புத்திசாலி. மனம் மகிழ்ச்சியில்
நிறைகிறது மா.
ஆமாம் இப்போது கட்டிடங்கள் வந்திருக்கும்.
73க்கும் 2019 இடையே 46 வருடங்கள் வந்து விட்டனவே.

நாமாவது கொஞ்சம் பசுமை பார்த்திருக்கிறொம்.
இனி வரும் மக்கள் எதைப் பார்க்கப்
போகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், இரண்டு தடவை அவனைத் தரிசனம் செய்து விட்டீர்களா. ஆதியின்
பிறந்த வீடு அங்கே தானே இருக்கிறது. அதை மறந்து விட்டேன்.

ஆமாம் பாடல்களே நம் வாழ்வைச் சிறக்க வைக்கின்றன.
அதுவும் முருகன் பாடல்கள்
கேட்டதும் துன்பம் பறந்து விடும். நன்றி ராஜா

Bhanumathy Venkateswaran said...

எனக்கு பிடித்த ஊர்களில் கோவையும் ஒன்று. மருதமலைக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். பல முறை கேட்ட பாடல்கள். உங்கள் பதிவில் இனிமேல்தான் கேட்க வேண்டும்.

Geetha Sambasivam said...

ஊட்டி போகும்போது கோவையைப் பார்த்தது அவ்வளவு தான். அதிகம் தங்கியதில்லை. எங்கேயும் போனதும் இல்லை. மருதமலை நீண்டநாட்கள்/வருடங்களாகக் கனவு! முருகன் அழைத்தால் நிறைவேறும். உங்கள் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. நல்லவேளையாக் கட்டிகள் உடைந்து புண்ணும் ஆறியதே! முருகன் அருள் தான். காணொளியின் இரு பாடல்களுமே பிடித்தவை!

'பரிவை' சே.குமார் said...

மருதமலைக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். மீண்டும் செல்ல வேண்டும். முருகன் எனக்கு மிகவும் பிடித்த தெய்வம்... மருதமலை மாமணியே பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனம் பூரிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா,
இந்தப் பாடல்களே எனக்கு ஊக்க சத்து.
நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா மா,
நம் வாழ்க்கையின் பல அனுபவங்கள். அதுவும் தனியாகக் குடித்தனம் செய்யும்போது,
பெரியவர்களின் ஆதரவு, கடிதங்களில் கிடைத்தாலும்,
நாம் நாடுவது தெய்வத்தைத்தான். திக்குத் தெரியாதவர்களுக்குத்
துணையாக

முருகன் நேரிலியே வந்து காத்தான்.
கடந்தோம் கடம்பனின் அருளால்.
நம் வீட்டுக்கு அப்போது வேலை செய்ய வந்தவன்
பெயரும் ஷண்முகம்.
எல்லோருமாகத்தான் மருதமலைக்குச் சென்றோம்.

30 வயதுக்கேற்ற திடமான உடம்பு அவருக்கு. வரும்
நோயும் வீர்யமாக வந்தது.
முருகன் என்றும் துணை இருப்பான். நன்றி கீதா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமார். மனம் நிறை நன்றி ராஜா.
முருகன் துணையோடு வாழ்வு வளம் பெறட்டும்.