Blog Archive

Tuesday, January 25, 2022

பனி பொழிந்து கொண்டே இருக்கும்!


வல்லிசிம்ஹன்





 எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

பனி பொழிவது நிறகவே இல்லை. நாளை ஆகக் குளிர் நிறைந்த நாளாம்.!!
மதி நிறைந்த  நன்னாள் தான் நமக்குப் பிடிக்கும்.

பனிஉறை நிலைக்குக் கீழே போகும் சீதோஷ்ணமானி.
 
மரங்களின் இலைகளோடே
இந்தக் குளிரில் வாழும் குருவிகளையும் 
அணில்களையும் பார்க்கிறேன்.

சரசரவென்று கீழே இறங்கி அவை வருவதும், நம் கண்ணுக்குத் தெரியாத
இரையை எடுத்துக் கொண்டு மேலும் கீழும் ஓடுவது ஒரு ஆனந்த
அதிசயம்.
அதுவும் கனுப்பொங்கல் அன்று வைத்த கலந்த சாதங்களை
ஸ்னோ ஐஸ்ஸிலிருந்து தோண்டி எடுத்து
அவை வாயில் கவ்விச் செல்லும் லாவகம் மிக மிக அருமை.
படம் எடுக்காமல் விட்டேனே என்று அலுத்துக் கொள்கிறேன்.

படம் பிடிப்பதைவிடப் பார்ப்பது இன்னும் ரசனை.

இறைவன் அனைவரையும் காக்க வேண்டும்.

25 comments:

நெல்லைத்தமிழன் said...

இங்கு கனுப்பொடிக்கு வைத்தவற்றைச் சாப்பிட காகமோ அணிலோ வரவில்லை.

அங்கு வந்தது மகிழ்ச்சி.

ஐஸ் மணல் அழகு

ஸ்ரீராம். said...

இங்கு இருக்கும் பனியே தாங்கவில்லை. ஆனால் அது காலை வேளைகளில் மட்டும்! அங்கு கடுமையாக இருக்கிறது போல...

ஸ்ரீராம். said...

இந்தப் பனியிலும் வாழப் பழகிக்கொண்ட அல்லது வாழ்வது கட்டாயமாக்கப்பட அணில் போன்றவற்றின் உடலை ஆண்டவன் அதற்கேற்றார்போல  படைத்திருக்கிறான் போல..  உணவு எடுத்துக் கொண்டு அது ஓடும் அழகை கற்பனையிலேயே ரசிக்கிறேன்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
நலமுடன் இருங்கள்.
கனு வைக்கும் போது
சென்னையில் 80களில் கூட காகமும் ,அணிலும் வரும்.
பின்னாட்களில் வைத்தது வைத்தது போல
இருந்தது.

இங்கே அணில்கள் பலே கில்லாடிகள்.
ஒவ்வொன்றும் ஒரு பெரிய பூனை அளவில்
இருக்கும். அத்தனையும் சாப்பிட்டுவிட்டது.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

ஆமாம். இன்றே 0 டிகிரிக்குக் கீழே போய் விட்டது.
நாளைக்கு மைனஸ் 20க்குப் போகுமாம்.
ஹீட்டர் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
கூடவே ஹ்யுமிடிஃபையரும்.

பலவித உடல் வலிகளுக்கு இதுவே காரணம்.
எல்லோருக்கும் பொதுவானதுதான் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

நான், நரி,அணில், குருவி எல்லாமே
இந்த இயற்கையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறுதான்
படைக்கப் பட்டிருக்கின்றன.

நமக்கு தான் ஒத்துக் கொள்வதில்லை.

Geetha Sambasivam said...

இப்போதெல்லாம் இங்கேயும் கனுவுக்கு வைப்பதைச் சாப்பிட அணிலோ, காக்கை, குருவிகளோ வருவதில்லை. குளிரை எப்படித் தாங்குகிறீர்களோ! என்னவோ போங்க. ஒரு இடத்தில் அதீதக் குளிர். இன்னொரு இடத்தில் அதீத வெயில். இங்கே வெயில் கொளுத்துகிறது.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பனி படர்ந்த,குவிந்த படங்கள் அழகு. பார்க்க நன்றாக உள்ளன. அதன் அவதிகளை நம்உடம்பு தாங்குமா என்பதுதான் கேள்விக்குறி.. அங்கும் எல்லா உயிரினங்களும் தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்துதான் பார்க்கின்றன. அதன் உடலை இறைவன் அதற்கு தகுந்த மாதிரி படைத்துள்ளான் போலும். ஆனால் மாறி வரும் சீதோஷ்ணங்கள் நமக்கு ஒத்து வராதவை. அதிக குளிர் வராமல் இருக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா படங்கள் அனைத்தும் செமையா இருக்கு அழகோ அழகு!

இயற்கையோடு ஒன்றி வாழ அணில் குருவி எல்லாம் பாருங்கள்...மனிதன் தான் கஷ்டப்படுகிறான்!!! இயற்கைக்குத் தெரியும்...அதுகளுக்கு டாக்டரைத் தேடி எல்லாம் போக முடியாது என்று அதனால் அவற்றிற்கு இயற்கையாகவே படைப்பு...நமக்கு 6 அறிவு சிந்திக்கும் திறனைக் கொடுத்திருப்பதால் இப்படி!!!

இங்கு வெயிலில் பிறக்கும் நாய்க்கும், பனிப் பிரதேசத்தில் பிறக்கும் அதே வகை நாய்க்கும் வித்தியாசம் இயற்கையின் ஃபர் கோட்!!!

இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்தியாவின் சீதோஷ்ன நிலைக்கு ஏற்ற நாய்களை வளர்ப்பதை விட்டு (அது கூட ஹிமாலயத்தில் வள்ர்பவை வேறு தென்னகத்தில் வளர்பவை வேறு பாவம்) பனிப்பிரதேசத்து நாயை இங்கு வளர்க்க வேண்டும் என்று பேராசைப்பட்டு அதற்கும் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் வைத்துக் கொண்டு, லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கி வளர்த்து அதிலும் ப்ரீடிங்க் செய்தல் என்று அதனுடைய இயற்கை மெட்டபாலிசத்தை மாற்றும் மனிதனைப் போன்ற சுயநலவாதிகள் எவரும் இருக்க மாட்டார்கள். 6 அறிவு!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அணில்கள் வந்து சாப்பிட்டது ஸோ ஸ்வீட் அம்மா.

கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இயற்கை இயறகிதான் அம்மா அதை விஞ்ச யாராலும் முடியாது மனிதன் என்ன முயன்றாலும்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அவை வாயில் கவ்விச் செல்லும் லாவகம் மிக மிக அருமை.
படம் எடுக்காமல் விட்டேனே என்று அலுத்துக் கொள்கிறேன்.

படம் பிடிப்பதைவிடப் பார்ப்பது இன்னும் ரசனை.//

ஆமாம் அம்மா மிகவும் சரிதான்...எனக்கும் இப்படி லயித்ததில் எடுக்காமல் விட்டவை நிறைய ஆனால் இப்போது அப்படி எல்லாம் பார்க்க முடியாமல் போன போது அட எடுத்து வைத்திருந்தால் பார்த்து ரசித்திருக்கலாமே என்று இப்போது தோன்றுவதுண்டு அது போல நம் மக்களும் ரசிப்பாங்களே ந்னு..இப்போ எலலம் எடுத்துவிடுகிறேன்..... யாம் பெற்ற இன்பம் பெறுக நம் மக்கள் னு இனி அடுத்த முறை பார்க்க நேர்ந்தால் கொஞ்சம் எடுத்து இங்கிட்டுப் போடுங்க!! ஹாஹாஹா...நம் மகிழ்ச்சி இதுதானே அம்மா இப்ப வேறு என்ன செய்ய முடிகிறது

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் மனதைக் கவர்கின்றன. ஆனால் என்னைப் போன்றவர்களுக்குப் பார்க்கும் போதே உடல் நடுங்குகிறது குளிரில்! சிறு குளிர்தாங்காத உடல்.

விலங்குகள் அவை வாழும் ஒவ்வொரு பிரதேசத்திற்கேற்ப வாழும் அடாப்ட் பண்ணி வாழத் தகுந்த உடலமைப்பை இறைவன் கொடுத்திருக்கிறார் போலும்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

மதி நிறைந்த நன்னாள் தான் நமக்குப் பிடிக்கும்.//

ஹாஹாஹா அம்மா இந்த வரியை மிகவும் ரசித்தேன். அதான் முந்தைய பதிவுகள் எல்லாம் மதி நிறைந்த பதிவுகள்!!!!!!!!

கீதா

KILLERGEE Devakottai said...

காணொளி கண்டேன் அம்மா படங்கள் அருமை.

கோமதி அரசு said...

பனி பொழிவு பார்க்க அழகு, ஆனால் அதனால் ஏற்படும் துன்பங்கள் கஷ்டம் தான்.
உடல்வலிகளை தாங்கி கொண்டு வேலைகளை பார்ப்பது கடினம் இல்லையா?

உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.

மாதேவி said...

இன்று குளிர் நிலை என்றீர்கள் அதுவும் கடந்து செல்லும் என நம்புகிறோம். படங்கள் அழகு உடல் குளிராதவரை :)

வெங்கட் நாகராஜ் said...

படங்களும் காணொளியும் அருமை. சூழலுக்கு தகுந்த மாதிரி வாழ்க்கை வாழ பழகிக் கொண்டு விட்டால் நல்லது தான். வட இந்தியாவிலும் குளிர் அதிகமாகவே இருக்கிறது. சிம்லாவில் கடுமையான பனிப்பொழிவு இருக்க சாலைகளிலும் பல வாகனங்கள் பனிப் போர்வை போர்த்திய படி நிற்கின்றன. ரயில் பயணம் கூட தடைபட்டது. தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு என்றே தோன்றுகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா மா,
நலமுடன் இருங்கள்.
நம்மூரில் பொங்கலோடு வெய்யிலும் வந்துவிடும்.
ஆஹா குளிர் போகிறதே என்று தோன்றும்.

இங்கே ஒரு துளி சுண்டு விரல் கூட
வெளிக்காட்ட முடியவில்லை.
அப்படியும் பள்ளிக்கூடம் போய்த்தான் ஆக வேண்டும்.

எதாக இருந்தாலும் சகிப்புத் தன்மை வந்து விடும்
என்று நினைக்கிறேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

''ஆனால் மாறி வரும் சீதோஷ்ணங்கள் நமக்கு ஒத்து வராதவை. அதிக குளிர் வராமல் இருக்க வேண்டும்.''

இங்கே தான் சரியான பாயிண்ட். எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை
என்பதே நிஜம்.
இன்னும் மூன்று மாதங்கள் கடக்க வேண்டும்.
சமாளிக்கலாம்:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,
நலமுடன் இருங்கள் அம்மா.

'''''இங்கு வெயிலில் பிறக்கும் நாய்க்கும், பனிப் பிரதேசத்தில் பிறக்கும் அதே வகை நாய்க்கும் வித்தியாசம் இயற்கையின் ஃபர் கோட்!!!

இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்தியாவின் சீதோஷ்ன நிலைக்கு ஏற்ற நாய்களை வளர்ப்பதை விட்டு (அது கூட ஹிமாலயத்தில் வள்ர்பவை வேறு தென்னகத்தில் வளர்பவை வேறு பாவம்) பனிப்பிரதேசத்து நாயை இங்கு வளர்க்க வேண்டும் என்று பேராசைப்பட்டு அதற்கும் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் வைத்துக் கொண்டு, லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கி வளர்த்து அதிலும் ப்ரீடிங்க் செய்தல் என்று அதனுடைய இயற்கை மெட்டபாலிசத்தை மாற்றும் மனிதனைப் போன்ற சுயநலவாதிகள் எவரும் இருக்க மாட்டார்கள். 6 அறிவு!"""

மிக உண்மை,
இங்கே பிறக்கும் மிருகங்கள் பறவைகள் இயற்கையை
ஒட்டியே இயங்குகின்றன. இறைவன் காக்கிறான்.
நம்மூரில் ஒருவர் டிபேடன் ஆப்சோ Tibetan Apso என்ற
குட்டி செல்லத்தை சேலத்துக்குக் கொண்டு வந்தார்.

அது எத்தனை நாட்கள் இருந்ததோ தெரியாது.
குட்டியா ,இத்தனூண்டா இருந்தது.

நன்றி டா. ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அணில்கள் வந்து சாப்பிட்டது ஸோ ஸ்வீட் அம்மா.

மதி நிறைந்த நன்னாள் தான் நமக்குப் பிடிக்கும்.//


:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))மதி நிறைந்த நாட்கள் சில.
மதி உறையும் நாட்கள் சில.
மதி சுறு சுறுப்பாகும் நாட்கள் சில.
மதி சந்திரன் பற்றிய பதிவு ஷெட்யூலில்
இருக்கிறது:) நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

''இப்போ எலலம் எடுத்துவிடுகிறேன்..... யாம் பெற்ற இன்பம் பெறுக நம் மக்கள் னு இனி அடுத்த முறை பார்க்க நேர்ந்தால் கொஞ்சம் எடுத்து இங்கிட்டுப் போடுங்க!! ஹாஹாஹா...நம் மகிழ்ச்சி இதுதானே அம்மா இப்ப வேறு என்ன செய்ய முடிகிறது''

இந்த அணில் ஒரு செகண்டில் பறந்துவிட்டது கண்ணா.:)
இப்போதைக்கு பக்கத்து வீட்டு செல்லம் தான் குரைத்துக் கொண்டிருக்கிறது.

லாப்ரடார்.முடிந்தால் அணிலைப் பிடிக்கிறேன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

ஆமாம் பா. நம்மூர் உஷ்ணமே நமக்கு இதம்.
இந்த முடக்கும் குளிர் கொஞ்சம் சிரமம் தான்.
ஒவ்வொரு வருடமும் இதையே சொல்வது போல ஒரு பிரமை.

நன்றி அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.

''காணொளி கண்டேன் அம்மா படங்கள் அருமை.''
மிக மிக நன்றி ராஜா.
இதுவே எனக்கு மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.

பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ. நாம் அனைவருமே சூழ்னிலைக் கைதிகள் தான்.
அதனால் இருப்பதில் சௌகர்யம் தேடிக் கொள்ள வேண்டிய கட்டாயம்.

ஆமாம் வெளியில் நல்ல அழகு.
அதில் பள்ளிக்கும், வேலைக்கும் சென்று வருகிறவர்களின்
நிலைதான் வெகு சிரமம்.
நான் உள்ளே உட்கார்ந்து எழுகிறேன்.
முடியாதபோது படுத்துக் கொண்டு விடுகிறேன்:)
நன்றி தங்கச்சி.