Blog Archive

Saturday, February 02, 2019

பந்தம்

Vallisimhan

எல்லோரும்  வளமாக வாழ வேண்டும்.


   திருமண பந்தத்தில் எப்படி இணைகிறார்கள் இருவர் என்று
 பல நாட்கள் யோசித்திருக்கிறேன்.

 நிறைய தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன்.
எல்லோருமே  மனமொத்த முறையில் செயல்படுவாதைத்தான் பார்த்தேன்.
  அது யாரையுமே தவறாகவோ தப்பாகவோ எடை போடாத பருவம்.
 என் மற்றத் தோழிகள்  மேல்படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோது
எனக்குத் திருமணம் கூடி வந்தது.
 
 இவர்தான் உனக்கு நிச்சயைக்கப் படப் போகிறவர் என்ற போது
மனதில் சட்டென்று பதிந்து விட்டது அந்த முகம்.
 முதன் முதலாகப் பார்த்த போதே இருவருக்கும்

புரிந்து விட்டது. ஒரு சிறிதளவு சந்தேகம் இல்லை.
 நடுவில் பெரியவர்களுக்குள் கடிதப் போக்குவரத்தில்
சலனம் ஏற்பட்டாலும் சரியாகிவிட்டது இரண்டு பக்கமும்
பெருந்தன்மையோடு நடந்து கொண்டதால்.

 மனமுதிர்ச்சியில் அவருக்குப் பெரிய பங்கு. என்
சிறு தப்புகளை எல்லாம் பொறுத்துக் குடும்பத்தை
நடத்தினார்.
  குறை ஒன்றும் இல்லை. 47 வருடங்கள்
சேர்ந்திருக்க விதிக்கப் பட்ட,வாழ்த்தப் பட்ட வாழ்வு.
சில தம்பதிகளுக்குக் கிடைக்காது.
எல்லோருக்கும் இனிய மணவாழ்வு அமைய வேண்டும்
 என்று இறைவனைப்
பிரார்த்திக்கிறேன்.
என் கணவர் எங்கிருந்தாலும் என்னைக் காப்பார்.
 குழந்தைகளுக்குத் துணை இருப்பார்
என்றே நம்புகிறேன்.
இணைந்த நாள்  தை மாதம் 22 ஆம் நாள் 1966.

No comments: