Blog Archive

Thursday, September 27, 2018

மஹாலய நாட்களின் கடைப்பிடிக்க வேண்டியவிதிமுறைகள்..

Vallisimhan
    அனேகமாக எல்லொருக்கும் தெரிந்த விதி முறைகள் தான். 

அப்பா, கீதயை மொழி பெயர்த்து எழுதிக் கொண்டே வந்தார். 
எதுக்குப்பா கஷ்டப் படறேன்னு கேட்பேன். நீங்கள் எல்லோரும் படிக்கணும் என்பதற்காகத்தான்.

எழுதி முடிப்பதற்குள் பகவான் அழைத்துக் கொண்டான்.

அது போலத்தான் மஹாலய முறைகளை என் நம்பிக்கையை விருத்தி செய்து கொள்ளவே
எழுதுகிறேன்.
வாழ்வில் நஷ்டம், கஷ்டம், மகிழ்ச்சி என்று உருண்டோடி வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நிற்கிறேன்.
எத்தனை நாட்கள்  விதிக்கப் பட்டிருக்கிறதோ அத்தனை நாட்கள்
நல்ல விதமாக இருந்துவிட்டுப் போகவேண்டும்.

இதோ நான் அறிந்த விதிமுறைகளும்,
இது போலச் செய்வதால் ஏற்படும் நன்மைகளும்.

பக்ஷம் ஆரம்பித்த நாட்களிலிருந்து எள்ளும் தண்ணிரும் இறைப்பது என்பார்களே அதைச் செய்யலாம்.
16 நாட்களும் செய்யலாம். முடியாதவர்கள் பெரியவர்கள் அறிவுறுத்திய,மஹா பரணி, மத்யாஷ்டமி, அல்லது பித்ருக்கள் இறைவனடி சேர்ந்த நாட்களில் செய்யலாம்.

முடிந்தவரை உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. வெளியே எங்கேயும் சாப்பிடாமல் வீட்டு உணவையே சாப்பிடலாம்.

வெங்காயம் பூண்டு முதலியவற்றை விட்டுவிடலாம்.
சிலவீடுகளில்  ,குறிப்பாக இங்கே அவற்றை எப்பொழுதும் சேர்ப்பது இல்லை.

சென்னையில் சிங்கமும் நானும் இருந்த காலங்களில் வெங்காயம் இல்லை என்றால் அதகளம் தான்.

தினம் கோவில்கள் செல்வது. எண்ணெய் வழங்குவது. நெய் தீபத்துக்கு
உதவி செய்வது எல்லாம் செய்யலாம்.

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு கைப்புல் என்ற வாக்கியங்களின் படி,
இன்சொல் சொல்லி, மற்றவரைப் பகைமையாகப் பார்க்காமல்,
கோபத்தைக் கட்டுப் படுத்தி,நல் வார்த்தைகளே சொல்லி
விரதம்போல் இந்த நாட்களைக் கடக்கவேண்டும்.

ஏழைகளைத் தேடிப்போய் புதிய உடைகள், வயிறு நிறைய அன்னம் 
கொடுக்கலாம். இதற்கே ஏற்பட்டிருக்கும் கோவில் அன்னதானங்களில் பங்கேற்கலாம்.

இவ்வளவும் செய்வது நம் பூர்வ, இப்போதையப் பாபங்களைலிருந்து மீள ஒரு வழி.
எத்தனையோ முன்னோர்களுக்கு  திதிகள் கொடுக்காமல் விட்டுப் போனதால்
இப்போது பலவிதமாக அவதிப் படுபவர்களைப்
பார்த்திருக்கிறேன்.
ஒரு தப்பை, ஒரு நல்லது செய்தே திருத்த வேண்டும்.

செய்யச் செய்ய தீமைகள் விலகும்.
மனதில் நிம்மதி பிறக்கும்.
தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.

நதி நீர், சுத்தப் படுத்தப் பட்ட வாய்க்கால்கள் வழியே
வயல்களுக்குப் பாய்வது போல
வருங்காலப் பயிர்கள் செழிக்கும்.

நாம் சிரமப்படுவதையாவது
 பொறுத்துக் கொள்ளலாம்.
நம் சந்ததியினர்  சிரமப் பட்டால் மனம் தாங்காது இல்லையா.
அதற்காகவே நல்ல விஷயங்களையும், மஹாலயத்தில் செய்ய வேண்டிய கர்மாக்களையும்
அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது நம். கடமை.

அனைவரும் அருமையான வாழ்வு நெறிகளைக் கடைப்பிடித்து
நல வாழ்வு பெறுவோம்.

No comments: