Blog Archive

Thursday, July 26, 2018

கயாவை நோக்கி....

Vallisimhan

அடுத்தனாள் காலை ,
எல்லா ப் பெட்டிகள் படுக்கைகள், சால்வைகள்  வரவேற்பு
க் கூடத்தில் வைக்கப் பட்டிருந்தன.
பிரயாணத்து ஏற்றவாறு உடை அணிந்து ,லக்ஷ்மிமாவும் வஞ்சுவும் கங்கைக்கரை நோக்கி நடந்தனர்.

இருவருக்கும் பெற்ற தாயாரைப் பிரிவது போல
ஒரு வருத்தம்.

லக்ஷ்மி ,நீ எனக்குக் கிடைத்த மிக நல்ல தோழி.
அதற்கே இந்த கங்கை அம்மாவுக்கு நன்றி சொல்லணும்.

உண்மையே வஞ்சு, நீங்கள் இல்லாவிட்டால் எங்களுக்கு இத்தனை சந்தோஷமான
பயணம் அமைந்திருக்காது.
ஒரு ரொடீன் கோவில் பயணம் மறக்க
முடியாமல் அமைந்தது உங்களால்தான் என்றபடி அவளை அணைத்துக் கொண்டார் லக்ஷ்மி.

 வாவா. அவர்களுக்குப் பொறுமை கொஞ்சம் குறைவு என்று விடுதியை
அடைந்தனர்.
வாசுவும் ,நாராயணனும், நடேசனிடம் விவரங்கள் கேட்டு அறிந்தனர்.
88 கிலோ மீட்டரில் இருக்கும் கயா புண்ணிய ஸ்தலத்துக்கு ஒன்றரை மணி நேரத்தில் போய்விடலாம்.
 முதலில் விஷ்ணு பாதம் இருக்கும் கோவிலுக்குச் சென்று ,நடேசன் சொன்ன புரோஹிதரை அழைத்துக் கொண்டு  அக்ஷயவடம்  சென்று வணங்க வேண்டும்.
//அவர் விவரமாக உங்களுக்குச் செய்ய வேண்டிய முறைகளைச் சொல்லிக் கொடுப்பார்.
பல்குணி நதி தரிசனம் முக்கியம்.// என்று நிறுத்தினார் நடேசன்

வஞ்சு,உனக்குத் தெரியுமா, இந்த அக்ஷயவடம் தான் எல்லாக் காலத்திலும் உயிர்த்து வாழ்ந்து யுகம் யுகமாக   நிற்கிறது.
நம் வட பத்ர சாயி துயில் வதும் இந்த புனித மரத்தின் இலையில் தான் ஆலிலைக் கண்ணன்.
  VATA PATHRA  SAAYI. நம் வாயில் வடை பாடு படுகிறார். என்று இடை மறித்தார் வாசு.
பகவானை என்ன சொன்னாலும் அவர் கோபித்துக் கொள்ள மாட்டார் என்றார் வஞ்சு மா.

பிரியாவிடை என்றுதான் சொல்லவேண்டும், இது போல யாத்திரை அமைந்தது இல்லை.
இத்தனை சௌகர்யமாக அலுப்பில்லாமல் எல்லா இடங்களுக்கும்
அழைத்துச் சென்றீர்கள்.
இதற்காகவே நாங்கள் இன்னோரு முறை வரத் தோன்றுகிறது.
என்றார் லக்ஷ்மி மா.
அதெல்லாம் இல்லைம்மா. நல்ல மனிதர்களுடன் ஒருவனாக இந்த ஐந்து நாட்களும்
 கழிந்தது என் பாக்கியம். மீண்டும் சந்திப்போம்.
உங்களுக்கு ஒரு தந்தி வந்திருக்கிறது இதோ கொடுக்கிறேன் என்று கொண்டு வந்தார்.
அவசரமாகப் பிரித்த வாசுவின் முகம் மலர்ந்தது.
வஞ்சு நீ சொன்ன செய்தி கன்ஃபர்ம் ஆயிடுத்து.
உன் பெண் மீண்டும் தாயாகிறாள்.
பெருமாளே காப்பாத்து என்று உணர்ச்சிவசப் பட்டார் வாசு.
அதுதான் பகவான் லட்டு கொடுத்து கண் காட்டி விட்டிருக்கிறார்
என்று ஆனந்தமாகக் கங்கைக் கரையிலிருந்து கிளம்பினார்கள்.

உங்களது மதிய உணவு இந்தப் பிரம்புக் கூடையில் இருக்கிறது.
மறவாமல் சாப்பிடுங்கள்.என்று கை கூப்பினார் நடேசன்.
மனமில்லாமல் அவரிடம் பல நன்றிகளை உரைத்தபடி வண்டி ஏறினார்கள்.

கங்கைக்கு நமஸ்காரங்களைச் சொன்னபடி வண்டி கிளம்பியது.
அவரவர் நினைவுகளில் மூழ்கினார்கள்.
எத்தனை நாட்கள் கனவு கண்ட பூமி இது. இறைவா உனக்கு நன்றி
என்றபடி சற்றே கண்ணசந்தனர்.
வண்டியோட்டி மிதமான வேகத்தில் ஒன்றரை மணி நேரத்தில்
கயாஸ்தலத்துக்கு வந்துவிட்டார்.

நடுவில் ராமாயணத்தில் நடந்த சம்பவமாக ஒன்றைக் குறிப்பிட்டார்
நாராயணன்.
பல்குணி நதிக்கரையில் ராமன்,லக்ஷ்மணன் ,சீதை தங்கி இருந்தபோது
தசரதமஹாராஜாவுக்கு  ஸ்ராத்தம் கொடுக்க வேண்டிய நாள் வந்தது.
அதிகாலையில் எழுந்த சகோதர்கள் நதிக்கு அக்கரையில் தேவையான் பொருட்களைச் சேகரித்து நதி வழியே வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை எதிர்பார்த்துக் கரை யோரம் சீதை காத்திருந்தபோது திடீரென
தசரதரே வந்துவிட்டார்.
விதிர்விதிர்த்துபோன சீதை மாமனாரை வணங்கி தாமதத்துக்கு
மன்னிக்கச் சொல்லி சகோதரர்கள் வந்துவிடுவார்கள் என்று உறுதி சொல்கிறாள்.
அந்த யுகத்தில் முன்னோர்கள்
நேரில் வந்து பிண்டங்களை வாங்கிக் கொள்வது வழக்கமாம்.
தசரதரோ மிகவும் பசியாய் இருக்கிறது சீதே,
நீ அந்த மண்லில் செய்துவைத்திருக்கும் உருண்டைகளை
நீர் வார்த்து எனக்குக் கொடு என்கிறார்.
தயங்கின சீதையை உற்சாகப் படுத்துகிறார்.
சீதையும் கொடுக்க அதை ஸ்வீகரித்தபடி மறைந்து விடுகிறார்.
சீதைக்குத் தெரியும் ராமனின் சுபாவம்.
ஐந்து சாட்சிகளைக் கேட்டு நடந்தவிஷயங்களை ராமனிடம்
ருசுப்பிக்கச் சொல்கிறாள்.
 அக்ஷயவடம், ஒரு பிராமணர்,ஒரு பசு, பல்குனி நதி, ஒரு துளசி செடி.
எல்லோரும் சம்மதிக்கிறார்கள் ராமர் வருகிறார்.  நாளை பார்ப்போம்.

No comments: