Friday, July 13, 2018

1409 காசி, கயா,ரிஷிகேஷ்...தொடரும் பயணம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


 அடுத்த நாளும் வந்தது. முதல் நாள் கங்கையில் குளித்த கையோடு
அன்ன பூர்ணாதேவியின் ஆலயத்தில் வழிபட்டு,
அங்கு வெளியே இருந்த நெருக்கம்
நிறைந்த வீதிகளில் மாடுகளைக் கவனமாகப் பார்த்தபடி

குடும்பத்தாருக்கு வேண்டிய அன்னபூரணி விக்கிரகங்களை வாங்கிக் கொண்டனர்.
கூடவே பெரிய பெரிய கங்கை சொம்புகள். கையில் அன்னம் ப
வழங்கும் கரண்டியும் கண்ணில் ஈடு இணையில்லாத கருணையும் பொங்கும் தேவியைத் தரிசித்தது மன நிறைவைக் கொடுத்தது.
அடுத்தாற்போல் காசி விஸ்வ நாதன் கோவில்.

சொல்ல முடியாத கூட்டம். நடேசன் செய்த ஏற்பாடு மிகவும் உதவியாக இருந்தது,
அனைவரும் சுற்றி நிற்க பால் அபிஷேகம் ஸ்வாமிக்கு நடந்து கொண்டிருந்தது.

வட இந்திய வழக்கப்படி  எல்லோரும் தொட்டு மலர்களைத் தூவி
வணங்கிக் கொண்டிருந்தார்கள். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒருவரான
விஸ்வனாத ஸ்வாமி, உலகத்துக்கே நாதராக வழிபடப் படுவதுடன்,
காசியில் வந்து இயற்கை எய்தினவர்களின் காதுகளில்
இறைவன் நாமத்தைச் சொல்லி அவர்களை மோக்ஷப்பாதையில் அனுப்புவதாக
கூட வந்த நடேசன் சொன்னார்.
காசி வழக்கப்படி ஏதாவது இஷ்டமான பொருளை விடவேண்டுமே
என்று வாசு சொல்ல, நாராயணன் நான் வெற்றிலை போடுவதை விட்டு விடுகிறேன் என்றார்.
லக்ஷ்மிமா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த
வஞ்சுமா இது நிஜமா என்று கேட்க
வைத்தியர் அறிவுறுத்தலின்படி அவர் செய்ய வேண்டிய வேலை இது.

வயிற்றில் அல்சர் வந்து இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம்
என்று சொன்னபடி  இறைவனை மீண்டும் வணங்கினார் லக்ஷ்மிமா.

இனி ஒரு தொந்தரவும் வராது பாருங்கள் என்று வாசு சொன்னது,
 வஞ்சுமாவுக்குக் கண்ணில்  நீர்.
ஹேய், உனக்கு என்ன ஆச்சு என்றவாறு அணைத்துக் கொண்டார் கணவர்.

வாழ்க்கைதான் எத்தனை மேடு பள்ளங்கள் கொண்டது.
ஏதோ நல்ல டாக்டர் கிடைத்தார். நானும் சுலபமாக
வெளியே வந்தேன்.
இந்தக் காசிப்பயணம் நம் துன்பமெல்லாம் போக்கட்டும்

 என்று அவளும் வணங்கினாள்.
இந்த ஆலயமே ஆறுதடவை இடிக்கப் பட்டிருக்கிறது அம்மா.
ஏழாவது தடவையாக மராத்திய மன்னர் கட்டின கோவில் இது.
நீங்கள் இந்தத் தலபுராணத்தைப் படியுங்கள் என்று கொடுத்தார்.

அன்னபூர்ணா தேவி சிவபிரானுக்கு அன்னம் கொடுத்துக் காசிப் பஞ்சத்தையே
நீக்கிவிட்ட அன்னை.
மஹா புண்ய க்ஷேத்ரம் அம்மா என்று சொன்னவருக்கும்
ஏதோ நினைவு வந்தது போல முகம் சொன்னது.
அவர் இங்கே வந்த கதையைக் கேட்க வேண்டும் என்று நினைத்தபடி
விடுதிக்குத் திரும்பினர் தம்பதியினர். ஸ்ரீ விஸ்னாத ஸ்வாமி சரணம்.
அன்னபூர்ணே சதா பூர்ணே,சங்கர பிராண வல்லபே.
தாயே சரணம். எல்லா வளங்களையும் அள்ளிக் கொடுப்பாய்.
ஸ்ரீ மாதா அன்னபூர்ணேஸ்வரி சரணம் ....
காசி வீதி.