Saturday, July 07, 2018

1403, கங்கையும் அவர்களும்....

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  அடுத்த நாள் கங்கைக் காற்று எழுப்ப, படகுக் காரர்களின் அழைப்புகளும், சுற்றி இருக்கும்
கோவில்களின் மணி ஓசை, அவர்கள் தங்கி இருந்த இடங்களிலிருந்து

கொஞ்சம் தொலைவில் கேட்டன.
உள்ளத்திலும் உடலிலும் புத்துணர்ச்சியோடு
இரு தம்பதிகளும் காப்பி குடித்த கையோடு கங்கையை நோக்கி
நடக்க ஆரம்பித்தனர்.
புலர்ந்தும் புலராத காலைப் பொழுது  படித்துறை சூரியக் கிரணங்களால்
 மஞ்சள் பூசிக்கொள்ளத் தொடங்கி இருந்தது.

நால்வரும் மேல்படியிலிருந்து கைகளைப் பிடித்தவண்ணம்
இறங்கத் தொடங்கினர்.

சில்லென்று இருக்குமே அம்மா உனக்குப் பரவயில்லையா.
வஞ்சுமாவுக்குச் சிரிப்பு வந்தது. நாமும் காவிரியில் குளித்தவர்கள்
தானே .படிகளில் உட்கார்ந்து கொள்கிறேன்.
காலில் ஜலம் படபட உடம்பு தயாராகும்.
நீங்கள் உங்கள் நீச்சலை இங்கே வைத்துக் கொள்ளவேண்டாம். ஒருமைல் அகலம்
 கங்கா மாதா ஓடிக்கொண்டிருக்கிறாள்.
லக்ஷ்மி மா உடனே ஆமாம் அன்னிக்கு முதலை கூட இருந்ததாம்
என்றாள் சிரித்தபடி.
லக்ஷ்மி உம்ம். மச்சினரைக் கேலி செய்கிறாயா.
அச்சோ இல்லைம்மா. நீ முதல்ல காலை கங்கை அம்மாவுக்குக்
கொடு.
எல்லோரும் முதலில் குனிந்து அம்மா கங்கையின் நீரைத் தலையில்
 தெளித்துக் கொண்டார்கள்.
அடுத்து தம்பதியர்கள் மெள்ள இறங்கினார்கள்.
நதியின்  வேகம் பிரமிக்க வைத்தது.
அவர்கள் இறங்கிய இடத்தில் சங்கிலிகள் கட்டப்பட்டிருந்தன.
கேதார் காட் எனும் பெயர் எழுதி இருந்தது.
கண்மூடித்திறப்பதற்குள் கூட்டம் சேர்ந்து விட்டது.

எங்கிருந்தோ வந்து சேர்ந்தார் ஒரு பண்டிட்.
 தமிழாளா. தர்ப்பணம் பண்ணனுமா என்றபடி வந்தார்.

நால்வரும் தயங்கினர். முதலில் ஸ்னானம் செய்கிறோம் இருங்கள் என்று
இருதம்பதிகளும் கைகளைப் பிடித்துக் கொண்டு
தலைவரை முங்கி எழுந்தனர். அப்படியே கங்கைக்கு
அர்க்கியம் விடுங்கோ. என்றவாறு செய்து காட்டினார்.
ஒன்பது தலைமுறைக்கு ஒன்பது தடவை மூழ்கி எழுந்திருக்கணும் என்று அவர் சொன்னதும்
வாசு எங்களுக்கு மூன்று போதும் என்று விரைவாக
வஞ்சுமா அழைத்தார்.
குளிரில் பற்கள் கிடிகிடுக்க நின்ற வாஞ்சுமா லக்ஷ்மிமா
இருவரும் மறுத்தனர்.
முகத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டோட ஒன்பது தடவையும்
முங்கி எழுந்தனர்.
கங்கையை விட்டு வர மனதில்லாமல் , சூரியனை வணங்கியவாறுக்
 கரையில் படிகளில் உட்கார
கணவர்கள் முதல் தர்ப்பணத்தைப் பூர்த்தி செய்தனர்.
பண்டா என்றழைக்கப் படும் பண்டிட் வினாயக்,
இருவருக்கும் வாராணசியின் முக்கியத்துவத்தைச் சொன்னார்.
ஐந்த கட்டங்களில் குளித்தால் யாத்ரை பூர்த்தியாகும்.
வாராணசி ஒன்றில் தான் கங்கா மாதா வடக்கு நோக்கிப் பாய்கிறாள்,
 பிறகு மீண்டும் தென்
கிழக்குத் திசை திரும்புகிறாள்
 என்றேல்லாம் விளக்கினார்.
கையோடு கொண்டு வந்திருந்த புடவையை உடலைச் சுற்றிப் போர்த்திக் கொண்ட கொஞ்ச நேரத்தில், ஈரப்புடவை உலர்ந்து விட,
 கரையோரம் இருந்த கோபுரங்களுக்கு கைகூப்பி நமஸ்காரங்கள் செய்து விட்டு, விடுதியை
நோக்கி நகர்ந்தனர். இனிதாக ஆரம்பித்தது வாராணசி வழிபாடு.

அம்மா கங்கா எல்லோருக்கும் ஆரோக்கியத்தைக் கொடு. அமைதியைக் கொடு என்று மனதில் பிரார்த்தித்தவண்ணம்,
நல்லதொரு  உணவை உட்கொண்டனர்.
Add caption