About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, June 10, 2018

சந்தோஷப் பட வேண்டிய நினைவுகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ரயில் பயணங்கள் எப்பொழுதும் இனிமைதான்.
நிறை மாதத்துடன், கையில் இரண்டு சமத்துக் குழந்தைகளுடன்,
என்னை அம்மா வீட்டுக் கொண்டு போய் விட ஆள் வேண்டுமே.

சிங்கத்துக்கோ கோவையில்  மூச்சுவிட நேரம் இல்லை.
யாரை உதவிக்குக் கேட்கலாம்னு பார்த்தால்,
முரளி நினைவு வந்தது,
20 வயது முரளி 22 வயது அக்காவுக்குத் துணையாக
வந்தான்.
படிப்பு முடிக்கும் வருடம்.
குழந்தை அலுத்துக் கொள்ளவில்லை.

திருச்சியில் இறங்கி, காரைக்குடிக்குச் செல்லும்
வண்டியில் ஏற்றி விட்டுத் தானும் வந்தான்.
மறு நாளே சென்னை செல்ல வேண்டும்.
மீண்டும் போட் மெயில் ஏறிச் சென்னை வந்து சேர்ந்த
பையன்.இரண்டு நாட்கள் கழித்து கடிதம் போட்டான்.
தூக்கக் கலக்கத்தில் திருச்சியில் இறங்கி பங்கலூர் எக்ஸ்ப்ரஸ்ஸில் ஏறிவிட்டதாகவும்.
ஜோலார்பேட்டை வந்ததும், டிக்கெட் கலெக்டர் எழுப்ப,போட் மெயில் டிக்கட் இருக்கிறது
இந்த வண்டியின்
டிக்கட் இல்லாமல் விழித்திருக்கிறான்.
அந்தக் காலத்து நல்ல மனிதர்,
உடனே என் அப்பாவுக்கு, தந்தி கொடுக்க,
அப்பா பதறிப் போய் தந்தி மணி ஆர்டரில் பணம் அனுப்ப
சென்னைக்கு ஏற்றிவிட்ட அந்த நல்ல மனிதர்,காப்பியும் இட்லியும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
வாழ்க வளமுடன் .என்றும் நன்றியுடன் உன் அக்கா ரேவ்.

Add caption

20 comments:

KILLERGEE Devakottai said...

அன்று மனிதநேயமிக்கவர்கள் வாழ்ந்தார்கள்

ஸ்ரீராம். said...

நல்லவர்களுக்கு உதவ நல்ல மனிதர்கள் ஆங்காங்கே தயாராய் இருக்கிறார்கள்தான்!

வெங்கட் நாகராஜ் said...

தூக்கக் கலக்கத்தில் வண்டி மாற்றி ஏறி விட்டாரா? நல்ல வேளை அந்த நல்ல மனிதர் உதவி செய்தார். சில சமயம் தூக்கத்தினால் இப்படி நடப்பதுண்டு. ஒரு முறை பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் வரும்போது பேருந்தில் தூங்கி விட்டேன். பேருந்து ஷெட் சென்ற பிறகு விழித்து திட்டு வாங்கிக் கொள்ள நேர்ந்தது.

Bhanumathy Venkateswaran said...

சுவாரஸ்யம், தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே தேவகோட்டை ஜி.
அப்பாவுக்குத் தந்தி வந்ததோ, பணம் அனுப்பினதோ எங்களுக்குத் தெரியாது .

அவனுடைய பெட்டியும் கையை விட்டுப் போய்விட்டது.

இருந்த உடைகள் போய், மாமாவின் உதவியுடன்
இரண்டு பாண்ட் ,இரண்டு சட்டைகள் வாங்கிக் கொண்டான்.
பிறகு அவனே அனைவருக்கும் வாங்கிக் கொடுத்தான் என்பது
வேறு கதை. மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

இன்று வரை புரியாத புதிர் ஸ்ரீராம்.
அந்த ரயில் அதே இடத்தில்தான் இருந்திருக்க வேண்டும்.
எப்படி ஜோலார் பேட் போகும் கோச்சில் ஏறினான் என்று அவனுக்கே தெரியவில்லை.
சின்னத்தம்பி வெகு நாட்களுக்கு அவனைக் கேலி செய்த வண்ணம் இருந்தான்.
இப்போது இங்கே இருக்கும் எனக்கே
வேறு வேறு தெருக்களில் நுழையும் போது
புரிவதே இல்லை.
பிறகு உலகம் சுற்றும் வேலை வந்த பிறகு தம்பி கூடத் தெளிந்து விட்டான்.
எனக்கு இன்னும் லே அவுட் நினைவு கொள்வது சிரமம்தான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வெங்கட்,
புதிராகவும் பரிதாபமாகவும் இருந்தது.

அந்த ஸ்டேஷன் மாஸ்டர், கடுமையாக நடக்காமல்
நிலைமையைச் சரியாக ஹாண்டில் செய்தார்.
பாவம் பையன். அப்பாவும், ஜோலார்பேட் ஸ்டேஷன் மாஸ்டரும்
வெகு நாட்களுக்குத் தந்தியில்
பேசிக் கொண்டார்கள். எப்படியோ சிக்கலிலிருந்து விடுபட்டான்.
வந்து படித்ததற்கு மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு. மிக நன்றி மா.
வாழ்க வளமுடன்.

Geetha Sambasivam said...

ஹையோ, இப்படி ஒரு தரம் நம்ம ரங்க்ஸூக்கு ஜி.டி.யில் நடக்க இருந்தது. தூக்கக் கலக்கம்! நல்லபடியா ரயிலில் ஏறிட்டார். வெறும் பனியனோடு இருந்தாராம்! :))))

Geetha Sambasivam said...

நல்லவர்கள் அப்போதும், இப்போதும், எப்போதும் உண்டு. நமக்குத் தான் தெரியறதில்லை!

வல்லிசிம்ஹன் said...

அட ராமச்சந்த்ரா.
நல்ல வேளை ரயிலில் ஏறினாரே. கீதா. பாவம்.

ஆமாம் நல்லவர்கள் நம் கண்ணில் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எங்கள் ப்ளாகை நினைக்கும் போது அப்படித்தான் தோன்றும்.

எல்லோரும் ஆரோக்கியமாக வளமாக இருக்கணும்.

கரந்தை ஜெயக்குமார் said...

நல்லவர்கள் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்

Anuradha Premkumar said...

சந்தோஷமான நினைவுகளே...

Sathiya Balan M said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News

Sathiya Balan M said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News

கோமதி அரசு said...

உங்கள் தம்பியின் நல்ல மனதுக்கு நல்ல மனிதரை உதவிக்கு அனுப்பிவிட்டார் இறைவன்.

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப அறியாத வயது கோமதி. மிகவும் பயப்படுவான்.

நல்லவன். நல்ல நிலை அடைந்தான்.
இறைவனும் அழைத்துக் கொண்டான்.
அந்த ஸ்டேஷன் மாஸ்டரைஸ் சொல்லுங்கள். குடும்பஸ்தராகத் தான் இந்தப் பிள்ளையை நடத்திருக்கிறார். வாழ்க வளமுடன் கோமதி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜெயக்குமார். நீங்கள் எல்லோரும் என் சகோதர்களே.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனும்மா, நல்ல நினைவுகள் ஒரு மருந்து. நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

Vanakkam thiru. Saththiya Balan
மிக நன்றி . படித்துக் கருத்து சொன்னதற்கு மிக நன்றி.