Blog Archive

Saturday, May 19, 2018

இறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அண்மையில் வீட்டுக்கு என்னைப் பார்த்து பேசிப்போக வந்த தம்பதியினர் 4 நபர்கள்.
  ஒரு மனைவிக்கும் கணவனுக்கும் வாக்குவாதம்.

மாமியார் செய்த தவறுகளை வந்த இடம் என்று கூடப் பார்க்காமல்
சொல்லிக் கொண்டிருந்தார். சீனியர் சிடிசன்  களைப் பார்த்துக் கொள்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.
எங்கே விழுவார்களோ,
அதிகமாகத் தூங்குகிறார்களே என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் கவலைப் பட வேண்டி இருக்கு.
இதே  இறந்து போன மாமனார் நிறையக் கட்டுப்பாட்டோடு இருந்தார்.
சட்டென்று போய்விட்டார்.

இப்பொழுது எங்கள் முறை. 4 மாதமாவது வைத்துக் கொள்ளவேண்டும்.
 அவள் கணவரின் முகத்தைப் பார்க்க சகிக்கவில்லை.

இன்னோரு பெண்ணின் கணவர் விட்ட இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
 என் மாமனார் பிள்ளைகளே பெரிசு என்று இருந்தார். இதோ இவள் பெயரில்
ஒரு சொத்தும் இல்லை. ஆனால் மாமியாரைப் பார்த்துக் கொள்ளும் கடமை மட்டும் வந்திருக்கிறது.
இது எந்த விதத்தில் நியாயம்.++++++++++++++++++++

அவர்களுக்கு நானும் ஒரு சீனியர் சிடிசன் தான் என்பதே
மறந்து விட்டது.
என் மகளும் மாப்பிள்ளையும் வேறு பேச்சு பேசி ,சூழ்னிலையைக் கலகலப்பாக்கினார்கள்.

அம்மா நீ தப்பா எடுத்துக்காதே. படபடவென்று பேசுவார்கள். மற்றபடி நல்லவர்கள்.
இந்த ஊர் டென்ஷன் அதுபோல என்று  சொல்லி சமாதானப் படுத்த ஆரம்பித்தாள்.

நாங்களும் இதை எல்லாம் தாண்டி தான் வந்திருக்கிறோம்.
ஆனால் இன்னோரு இடத்தில்  போய் இறந்தவர்களை
இழிந்து பேசியதில்லை.
முதல் கடமை  தப்போ தவறோ, முன்னோர்களை
மரியாதையோடுதான் அணுகவேண்டும்.
அவர்களைக் குற்றம் சொன்னால் எழுந்து வந்து
பதில் சொல்லும் நிலையிலா இருக்கிறார்கள்.

ஏதோ ஒரு பதிவு இறந்த நடிகையைப் பற்றிப் படித்தேன். படம் கூட வந்திருக்கிறது.
மனசு கஷ்டப் படத்தான் செய்தது.
இதோ இவர்களும் பேசுகிறார்கள்.
Let the dead remain dead.






11 comments:

Geetha Sambasivam said...

நம்மையும் இப்படித் தான் பேசுவார்கள். நமக்குத் தெரியப் போவதில்லை என்பது வரை மகிழ்ச்சி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

Do not speak ill of the dead என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டுள்ளேன். இருப்பினும் இறந்தவர்களை நிம்மதியாக இருக்கவிடுவோம்.

காமாட்சி said...

போனப்புறம் பேசறதையே கேட்க முடிவதில்லை. எவ்வளவு நல்ல பிள்ளை,நாட்டுப்பெண்கள், பெண்களானாலும் ஓரளவு வயதிற்குமேல் இருந்து விட்டால், சில விஷயங்கள் இப்படிதான் போகும்.உலகத்தில் நீயா,நானா என்று ஏலம்போடுவதும் இருக்கிறது. அடுத்த ஜெனரேஷன்லே நீயா,நானா இருக்காது.பிளஸ்ஸும்,மைனஸுமாக இருக்கும். குழந்தைகள் ஒன்றுதானே? இப்போது கேட்கும் கதைகள் யாவும் யார்,எவ்வளவுமாதங்கள் வைத்துக்கொள்வார்கள் என்பதுதான். வயதானவலாதலால் நிறைய கதைகள் தெரியறது. அவ்வளவுதான். அன்புடன்

வல்லிசிம்ஹன் said...

சரியான வார்த்தை கீதா.

இரண்டு வாரங்கள் கழித்து கூட
என்னால் ஜீரணம் செய்ய முடியவில்லை.

இவ்வளவு அலுப்பு எப்படி வந்தது. விட்டுவிட வேண்டியதுதான்..

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் திரு.ஜம்புலிங்கம் ஜி.
அது மிகப் பெரிய தப்பு. நாளை நமக்கும் இதே நிலை என்பதை மறந்து விடுகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு காமாட்சிமா,

வயதாக ஆக கேட்கும் பேச்சுகள் அதிகரிக்கிறது. நான் இனி பத்திரிக்கை படிப்பதையோ,
மற்ற சமாசாரங்களையோ நிறுத்திவிட்டேன்.
இருந்தாலும் வலிய வந்து பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
இன்று நீ,நாளை நான் புரியவில்லை.

நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும்.
உங்கள் தைரியம் எனக்கும் வேண்டும்.

நெல்லைத் தமிழன் said...

இந்த மாதிரி இடுகைகள் நிறைய சிந்திக்க வைக்கிறது. அதற்கே உங்களுக்குப் பாராட்டுகள் (பகிர்ந்துகொள்வதற்கு)

இறந்தவர்களை மட்டுமல்ல, அங்கு இல்லாதவர்களைப் பற்றியும் பேசக் கூடாது. யாரைப் பற்றி விமரிசித்தாலும், அவர்கள் முன்னால் செய்வதுதான் நேர்மையான குணம்.

ஆனால் சொல்லியிருக்கும் செய்திகளில் அர்த்தமும் இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

இறந்தவர்களை மட்டுமல்ல, அங்கு இல்லாதவர்களைப் பற்றியும் பேசக் கூடாது. யாரைப் பற்றி விமரிசித்தாலும், அவர்கள் முன்னால் செய்வதுதான் நேர்மையான குணம்.
This is so true. Ne.Tha.
நன்றி மா.
கீதா சொல்வது போல நாம் போய்விட்டாலும் நம்மைப் பற்றிப் பேசப்போகிறார்கள்..
அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.
நாம் பேசாமல் இருக்கலாம்.

அன்று ரொம்ப வருத்தமாக இருந்தது.
ஒரு வகையில் எனக்குத் தெரிந்தவர்கள் தான்.
திண்டுக்கல் பழக்கம்.

நல்ல வளமான குடும்பம். மகளுக்கு அத்தனை சீர் செய்தே
திருமணம் செய்தார்கள்.
மனிதர்களின் மறதி எப்படி வேலை செய்கிறது பாருங்கள்.
நன்றி மா.

எதுவாக இருந்தாலும் மன்னித்தல் அவசியம்.
கர்மா விதிப்படி மன்னிக்காவிட்டால் நம்முடன் அடுத்த ஜன்மாவுக்கும்
இந்த பிராப்தங்கள் வரும்.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா இப்படிப் பேசுபவர்கள் முதலில் தங்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். தங்களுக்கும் வயதாகும் போது இப்படிப் பிள்ளைகள் காது படவே பேசினால் (அதுவும் நிகழத்தானே செய்கிறது!!) எத்தனை வருத்தமாக இருக்கும் அப்பெரியவர்களுக்கு!

தன் வினை தன்னைச் சுடும்!! அவ்வளவே!

துளசிதரன், கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா யார் தான் இவ்வுலகில் தவறு செய்வதில்லை? பெண் முதலில் குழந்தை, அப்புறம் அக்கா அல்லது தங்கை, மனைவி அம்மா, நாத்தனார், மன்னி அல்லது ஓர்படி, மாமியார் பாட்டி என்று பல ரூபங்கள் (ஆண்க்களுக்கும் உண்டுதான்!!!) ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஒவ்வொரு தவறு செய்யத்தான் செய்கிறார்கள். இன்று மாமியாரைக் குற்றம் சொல்பவர்கள் நாளை நாமும் மாமியார் ஆவோம் அப்போது அந்தக் காலக்கட்டதிற்கேற்ப நம்மை நம் மருமகள் பார்க்கக் கூடும் அவள் கண்ணுக்கும் சில தவறுகள் தெரியலாம் என்பதைப் பலரும் சிந்திப்பதில்லை. ஒரு வேளை இப்போது பலரும் தாங்களாகவே முதியோர் இல்லங்களை நானா நானி போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கும் வளம் பெற்றவர்கள் பலர் இருபாதால் சொல்ல மாட்டார்களாக இருக்கும்...ஆனால் அந்த அளவு வளம் இல்லாதவர்கள் நிலை? சரி வளத்தை விடுங்கள் மனம் அன்பு என்பதெல்லாம்?

என்னவோ வல்லிமா இதைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம் ஆனால் மனம் வேதனைப்படும் அம்மா. நான் ஒரு கதை எழுதி இன்னும் முடிக்காமல் வைத்திருக்கிறேன். கொஞ்சம் பெரிய கதைதான். உணர்வுகள் கொப்பளிக்கும் கதை....குறுநாவல் அளவிற்கு...இப்போது உங்கள் பதிவை வாசித்ததும் கதையை எழுத வேண்டும் என்றும் தோன்றுகிறது பார்ப்போம்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா யார் தான் இவ்வுலகில் தவறு செய்வதில்லை? பெண் முதலில் குழந்தை, அப்புறம் அக்கா அல்லது தங்கை, மனைவி அம்மா, நாத்தனார், மன்னி அல்லது ஓர்படி, மாமியார் பாட்டி என்று பல ரூபங்கள் (ஆண்க்களுக்கும் உண்டுதான்!!!) ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஒவ்வொரு தவறு செய்யத்தான் செய்கிறார்கள். இன்று மாமியாரைக் குற்றம் சொல்பவர்கள் நாளை நாமும் மாமியார் ஆவோம் அப்போது அந்தக் காலக்கட்டதிற்கேற்ப நம்மை நம் மருமகள் பார்க்கக் கூடும் அவள் கண்ணுக்கும் சில தவறுகள் தெரியலாம் என்பதைப் பலரும் சிந்திப்பதில்லை. அதுவும் சொத்து இல்லை ஆனால் பார்த்துக் கொள்ளணும் இப்படியும் சிலர் பேசத்தான் செய்கிறார்கள் பணம் இருந்தால்தான் மதிப்பு என்பது போலும்...என்னவோ அம்மா...இதை எல்லாம் வாசித்தால் மனது வேதனைப்படும்.

ஒரு வேளை இப்போது பலரும் தாங்களாகவே முதியோர் இல்லங்களை நானா நானி போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கும் வளம் பெற்றவர்கள் பலர் இருபாதால் சொல்ல மாட்டார்களாக இருக்கும்...ஆனால் அந்த அளவு வளம் இல்லாதவர்கள் நிலை? சரி வளத்தை விடுங்கள் மனம் அன்பு என்பதெல்லாம்?

என்னவோ வல்லிமா இதைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம் ஆனால் மனம் வேதனைப்படும் அம்மா. நான் ஒரு கதை எழுதி இன்னும் முடிக்காமல் வைத்திருக்கிறேன். கொஞ்சம் பெரிய கதைதான். உணர்வுகள் கொப்பளிக்கும் கதை....குறுநாவல் அளவிற்கு...இப்போது உங்கள் பதிவை வாசித்ததும் கதையை எழுத வேண்டும் என்றும் தோன்றுகிறது பார்ப்போம்...

கீதா