Blog Archive

Sunday, May 13, 2018

என் அம்மா...

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

1964  இல் ஒரு நாள்.
ஒரு வாரமாக இருப்புக் கொள்ளவில்லை. அப்பாவின் கடிதம்
பார்த்ததிலிருந்து, தோழிகளிடம் சொல்லி சரிப்பா போறும். உங்க
அம்மா க்ரேட் தான். நாங்க வந்து பார்க்கிறோம்
என்று விட்டனர்.
 அந்த நாளும் வந்தது.
எக்மோர் ஸ்டேஷன். புகை,காலைப் பனி என்று ஒரே புத்துணர்ச்சியான சூழ்னிலை. மாமா
என்னை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.
ரயிலும் வந்தது
அம்மா முகம் தேடிக் கண்டு பிடித்தாச்சு.

ரிப்பன் கட்டாத பின்னலை, முன்னால்
போட்டுக் கொண்டு, வெளையில் சாம்பல் வண்ண பூக்கள் தூவின
கடாவ் புடவை, அதே சாம்பல் கலர் ரவிக்கை.
ஒரு கை வளையல் ஒரு கை வாட்ச், காதிலதொங்கும் வட்ட ரிங்க்,
காத்தில பறக்காத மேலாக்கு.
அப்படியே அம்மாவை அசத்தணும் என்கிற நினைப்பு
என் முகத்தில் தெரிந்து இருக்க வேண்டும்.
முகம் கொள்ளாத புன்னகையோடு இறங்கி வந்து
கைகளைப் பிடித்துக் கொண்டார்.

அவரது குறும்பான சிரிப்பு இன்னும் நினைவில் இருக்கு.
ஆளே மாறிட்டாப்பல இருக்கு, நம்மா ஆண்டாள் தானா இது
என்று இருவரும் கை கோர்த்தபடி,
நான் பேச அவர் கேட்க
புரசவாக்கம் வந்து சேர்ந்தோம். என் அம்மாவும் நானும்.
அனைத்து அன்பு அன்னையருக்கும் வாழ்த்துகள். என் படம் என் அம்மாவுக்காக.










8 comments:

KILLERGEE Devakottai said...

இனிய அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா.

கோமதி அரசு said...

அழகான இனிமையான நினைவுகள்.
இனிய அம்மாவுக்கு வணக்கங்கள்.
அன்னையர்தின வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

நினைவுகள் அருமை. அன்னையர் தின வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி தேவகோட்டையார் ஜி. உங்களது நாளும் நன்னாளாக இருக்க வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அம்மாவுக்கு பெண்ணை முதன் முதலாகப் புடவை அணிந்து பார்ப்பதில் ஒரே சந்தோஷம்.
அன்பு கோமதி நன்றி மா. இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். உங்கள் குடும்பப் பெண்கள் அனைவருக்கும் என் அன்னையர் தின வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

சிறப்புப் பகிர்வு மிகச்சுருக்கமாக என்றாலும் மிக அருமையாக .

Thulasidharan V Thillaiakathu said...

அழகான படங்கள். அம்மா மிக மிக அழகாக இருக்கிறார்! எங்கள் அம்மாவும் தான்!! வாழ்த்துகள் அம்மா.! இனிய நினைவுகள் அதுவும் மிக நுணுக்கமாக நினைவில் வைத்திருக்கிறீர்கள் அருமை...

துளசி, கீதா