Blog Archive

Wednesday, May 30, 2018

வாழ்க்கையின் குரல் 9 ஆம் பாகம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

   அப்பா பாவம் மா.
ரொம்பக் கஷ்டமாப் போயிடுத்து
பேசியபடி தன்னைப் பார்க்கும் பெண்களை ஆராய்ந்தாள்.
 என்ன சொன்னார் மா.
நாங்க தான் அவரை கோபித்துக் கொண்டோம்..சொன்ன பேச்சுகளை அப்படியே மீண்டும்

அம்மாவிடம் சொன்னார்கள்.
சந்திராவுக்கே அதிர்ச்சி யாக இருந்தது.
ஒன்றும் சொல்லவில்லை. சரி உங்கள் தேர்வுக்குப் படியுங்கள்.
நான் மீனாக்ஷியிடம் பேசணூம். தாத்தா பாட்டியிடமும் கேட்கணும்
என்றவாறு நகர்ந்துவிட்டாள்.
மீனாக்ஷிக்கு உண்மையிலேயே வெளியூர் வேலை இருந்தது.
தனது உதவியாளர்களுடன் ஒரு கணினி பிரச்சினையை சமாளித்துச் சரிப்படுத்த
வேண்டி இருந்தது.
சந்திரா, தனக்கு சென்னையிலிருந்து மாற்றம் கிடைக்குமா என்று உதவி கேட்டாள்.

மீனாக்ஷி தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாகச் சொல்லி
ஃபோனை வைத்து விட்டாள்.
 அடுத்ததாக மாமனார் ,மாமியார்க்கு  அவர்கள் சென்றிருக்கும்
மெர்க்காரா பண்ணை வீட்டுக்குப் பேசி விவரங்கள்
கேட்டுக் கொண்டாள். அவர்கள்  பகிர்ந்த கொண்ட
விஷயமும்  அவளைப் பாதித்தது,.
இப்போது சுந்தரம் உண்மையிலேயே தனிமைப்
படுத்தப் பட்டுவிட்டான்.  தன்னை சீரமைத்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பம்.
அதைச் செய்வானா என்பதுதான் தெரியாது...

பேசி முடித்து விட்டு, வக்கீல் மாமாவிடம் தன் யோசனையைச் சொன்னாள்.
பணத்தைச் சுந்தரம் பேரில் போடுவதற்குப் பதிலாக
அவன் யாரிடம் கடன் பட்டிருக்கிறானோ அவர்களுக்குக்
கொடுத்து அவனை அந்தத் தொந்தரவிலிருந்து விடுவிக்கலாமே.
என்ற யோசனையைச் சொன்னார்.
மாமனாரின் தோழர் சந்திர சேகர் கிட்டே சொன்னால், அவர் சுந்தரத்திடம்
பேசி விவரங்கள் அறியலாம் என்றாள் சந்திரா.
இதை எல்லாம் செய்தால் அவன் திருந்திவிடுவானாம்மா
என்றார்.
அதை நான் எதிர்பார்க்கவில்லை மாமா. ஆனால் நல்ல
இக்கட்டில் மாட்டி இருக்கிறார் என்பது தெரிகிறது.
அவ்ருடைய தந்தையின் பணம் ,இதற்கு வழி செய்யட்டும்.
அதுதான் தர்மமும் கூட. நான் பிரிந்து செல்வதானாலும் ,
மனம் நிம்மதியுடன் இருக்க இதைச்
செய்யவேண்டும். சொல்லிவிட்டுப் பெண்களுக்கு
 இரவு சாப்பாடு கொடுத்துவிட்டுப்
ஓய்வெடுக்கச் சென்றாள்.

அந்த வாரம் முழுவதும், சுந்தரம் தன் மகள்களைப்
பார்க்கத் தினம் பள்ளிக்கு வந்தான்.
 அவர்களுக்குப் பிடித்த சாக்கலேட் பாக்கெட்கள்
அவனுடன் வந்தன. நிறையப் பேசவில்லை. சற்று நேரம் உட்கார்ந்துவிட்டுப்

போவதை வழக்கமாக்கிக் கொண்டான்.
அவன் வேலையில் மீண்டும் சேர வேண்டிய நாளும் வந்தது.
அவன் அப்பாவின் சினேகிதரிடமிருந்து தன்னை வந்து பார்க்கும் படி அழைப்பு
வந்தது.
முதலில் பயமாக இருந்தாலும் வேலை முடிந்ததும் வருவதாகச் சொன்னான்.
மதியம் தன்னுடன் வழக்கமாக  சீட்டு விளையாடும்
நாகராஜனிடம், தன்னால் வரமுடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டான்.

நீ நிறைய பேருக்குக் கடன் பட்டிருக்கிறாய் மறக்காதே
எங்கு சென்றாலும் விட மாட்டார்கள். தயாராக இருந்து கொள் என்று கேலியாகப்
பேசிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

எப்படி அடைக்கப் போகிறேன் ,ஏன் இந்தப் பழக்கத்தில் விழுந்தேன்
என்று முதன்முறையாகக் கலங்கினான் சுந்தரம்.
தன் வேலை நேரம் முடிந்ததும், தன் கடன் விவரத்தைப் பட்டியலிட்டான்.
கிட்டத்தட்ட 60 ஆயிரத்துக்கு கணக்கு வந்தது.

காசியிடமே கடன் வாங்கி மற்றவர்களைச் சமாளிக்கலாமா என்ற யோசனை வந்ததும்
ஒதுக்கிவிட்டான். தினம் வட்டியே  ஆயிரத்துப் பக்கம் போய்விடும்.
யோசித்தபடி  அடையாரில் இருந்த  சந்திரசேகர் மாமாவின் வீட்டை அடைந்தான்.

10 comments:

Geetha Sambasivam said...

நல்ல வழி பிறக்கட்டும். சுந்தரத்துக்காகப் பிரார்த்திப்போம்.

Thulasidharan V Thillaiakathu said...

சுந்தரம் திருந்தும் நிலைக்கு வந்துவிட்டார். சந்திராவின் முடிவு என்னவாக இருக்கும்....??

துளசி, கீதா

காமாட்சி said...

சிந்திக்க ஆரம்பித்துள்ளான். நல்லகாலம் பிறக்கும். நல்லதே நடக்கட்டும். அன்புடன்

ஸ்ரீராம். said...

நானும் சுந்தரம் பின்னாலேயே வருகிறேன். என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்கிறேன்.

கோமதி அரசு said...

//

//நல்ல இக்கட்டில் மாட்டி இருக்கிறார் என்பது தெரிகிறது.
அவ்ருடைய தந்தையின் பணம் ,இதற்கு வழி செய்யட்டும்.
அதுதான் தர்மமும் கூட. நான் பிரிந்து செல்வதானாலும் ,
மனம் நிம்மதியுடன் இருக்க இதைச் //

சந்திராவின் யோசனை நல்லது தான்.
பார்ப்போம் சுந்தரம் எப்படி மாறுவார் என்று.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். சுந்தரத்தின் அம்மா அதைத்தான் செய்தார்
பிரார்த்தனைகளே பலிக்கும் என்பதே அவர் நம்பிக்கை.
கீதாமா.

வல்லிசிம்ஹன் said...

சுந்தரம் திருந்தும் நிலைக்கு வரும்போது,சந்திராவின் மனக்கசப்பு மாற வேண்டும். நான் இங்கே எழுதாத எத்தனையோ சங்கடங்கள் நடந்திருக்கின்றன.
சந்திரா நிறைவான முடிவை எடுக்கணும் அன்பு, துளசி, கீதா

வல்லிசிம்ஹன் said...

அப்படி நல்ல துணை சுந்தரத்துக்குக் கிடைத்தால் நல்லதே ஸ்ரீராம்.
பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று ஸ்ரீராம்..

வல்லிசிம்ஹன் said...

சந்திராவின் மனம் ,பிரச்சினையிலிருந்து விலகினதும், அவளது கோபங்கள் குறைந்தன.
தாங்கள் ஒற்றூமையாக இருந்த காலங்கள் அவள் மனதில் எழும்பின.

தீர்க்க முடியாத பிரச்சினை இல்லை என்ற
நம்பிக்கை பந்தது,.
ஆனாலும் அவன் மேல் நம்பிக்கை வரவேண்டும் இல்லையா கோமதி மா.
நல்லதே நடக்கட்டும். பெண் குழந்தைகள் வருத்தப் படக்கூடாது.
வாழ்க வளமுடன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு காமாட்சி மா. காலம் கனியட்டும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்தட்டும். மிக நன்றி நீங்கள் வந்து படித்தது. தெரிந்த நிகழ்ச்சியைக் கதையாகப் பின்னுகிறேன்.
உங்கள் அன்புக்கு நன்றி.