About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, May 18, 2018

1373 , வாழ்க்கையின் குரல்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
தப்பும் தவறு மாக வாழ்க்கையைத் தொலைத்து விட்டு
இந்த ஐம்பது வயதில்  ,எங்களை என்ன செய்யச் சொல்கிறாய்.

கேள்வி கேட்கும் அண்ணனை ,மனம் பதைக்கப் பார்த்தாள்  சந்திரா.
என்ன செய்யட்டும் அண்ணா.
நிலைமை இவ்வளவு முத்திப் போனதும்
எங்களை அழைக்கிறாய். உன் குழந்தைகள் வளர்ந்தாச்சு.

இப்ப சொல்லு உங்கள் இருவரையும் பிரித்து விடலாம்.
அவந்தான் பணத்தில் கொழிக்கிறானே.
உனக்கு ஜீவனாம்சம் கொடுக்காமல் ஓடிவிடுவானா.
இல்லை உன் மாமியாரைத்தான் கேட்காமல் விடுவோமா.

பல வருட உழைப்பில் முன்னுக்கு வந்துவிட்ட
அண்ணனின் ஆணித்தரமான கேள்விகளுக்குப்
பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்.

அவர்களும் எத்தனை நாட்கள் தன் குடும்பத்தைத் தாங்குவார்கள்.
நல்ல தங்காள் மாதிரி கிணற்றில் தள்ளி
 சாகடிக்கும்  சந்தர்ப்பம் இப்போது இல்லை.
கல்லூரிக்குச் செல்லும் வயதில் இருந்தார்கள்
இரு மகள்களும்.
 நல்ல அழகும் ,அடக்கமும் உள்ளவர்கள்.
தந்தையை மதிப்பவர்கள்.
அப்பா,பணம் கொடுக்காவிட்டால் என்னம்மா,நாங்கள் சம்பாதித்து
 உன்னைக் காப்பாற்றுகிறோம்.

இப்போதையத் தேவைக்காக உன் அண்ணனை அணுகாதே.
 அவனுக்குத் தனிக் குடும்பம்
வந்துவிட்டது. பிள்ளைகளும் வளர்ந்து அவர்கள்
வெளினாட்டுப் படிப்பு செலவு வேறு மாமாவுக்கு
இருக்கிறது.
 தாத்தா பாட்டி இருந்த வரை உனக்கு
நிலத்தில் விளைந்ததெல்லாம் வந்தது.
  இப்போது நிலங்களையும் வித்தாச்சு. மேற்கொண்டு
நம் காலில் நிற்க நாம் பழக வேண்டும். நீ உதவி கேட்டதேல்லாம் போறும் அம்மா.

வீட்டுக்கு வந்த  சந்திரா மகளின் கூர்மையான பேச்சைக் கேட்டுப் பிரமித்தாள்.
தனக்கு ஏன் இந்த வலிமை இல்லை. ஏன் தழைந்து போனோம்.

ஏன் பேச்சு கேட்டோம்.
கண்மூடித்தனமான கணவன் பக்தியா. என்றோ ஆரம்பித்த காதலா.
அவன் செய்யும் தவறுகளை ஈடு கட்ட மற்றவர்களிடம் இறைஞ்ச வைத்தது எது.

குழப்பத்துக்கு விடை பார்க்கலாம். எதை விதைக்கிறோமோ அதையே
அறுக்கிறோம்.

7 comments:

KILLERGEE Devakottai said...

உண்மை அம்மா விதைப்பதையே அறுக்கிறோம்.

ஸ்ரீராம். said...

அனுபவங்கள் அதைரியத்தைப் போக்கித் தன்னம்பிக்கையை வளர்க்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே. நம்மை வலுப்படுத்த மறந்தால்
பள்ளத்தில் விழச் சந்தர்ப்பம் உண்டாகும் ,தேவகோட்டையாரே.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். பட்டால் தான் புத்தி வரும்.
எப்பொழுதும் ராஜபாட்டையில் பயணிக்க முடியுமா.
நன்றி மா.

கோமதி அரசு said...

//தப்பும் தவறு மாக வாழ்க்கையைத் தொலைத்து விட்டு
இந்த ஐம்பது வயதில் ,எங்களை என்ன செய்யச் சொல்கிறாய்.//

அடுத்தவரை சார்ந்து வாழ வேண்டும் என்ற நிலை வந்தால் இது போன்ற வசை சொல்லையும் வாங்க வேண்டும் தான் போலும்.

Ramani S said...

தாங்க முடியாத துயரங்கள் தரும் துணிவை வேறு எதுவும் தந்துவிட முடியாதுதானே

Geetha Sambasivam said...

சிலர் எப்போதும் சார்பு நிலையையே விரும்புவதாகத் தெரியும்! :( இதை முன்னர் படிக்காமல் விட்டிருக்கேன்.