Blog Archive

Monday, April 30, 2018

அழகர் வந்தார்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 புதிய தலைமுறை லைவ் தொலைக்காட்சி வழியாக மனம் நிறைய அழகர்
ஆற்றில் இறங்குவதைப் பார்த்தாச்சு.

அந்தக் குதிரையின் கம்பீரம் எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை.
மேல் கோலாகலமாகப் பச்சைப் பட்டாடை உடுத்தி

குதிரையை ஓட்டும் அழகுக் கம்பை நீட்டியபடி, அளவில்லா ஆபரணங்களும்,
சுந்தர பாஹு என்ற பெயருக்கேற்ற தோள்களில்
பாரமாய் மாலைகளும்.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் அனுப்பிய மாலையின் பெருமை முகத்தில் பிரதி பலிக்க
அவர் வரும் அழகை என்ன சொல்வது.
எதிர் சேவை வழங்கிய அழகா கோடி நமஸ்காரங்கள்.

10 comments:

KILLERGEE Devakottai said...

நானும் தரிசித்தேன் அம்மா

கோமதி அரசு said...

அழகர் வந்து அனைவரையும் மகிழ்வித்தார்.
சங்கரா தொலைக்காட்சியில் கண்டு களித்தோம்.
வைகையில் தண்ணீர் இரவு 1மணிக்கு வந்தது.

அவர்வந்த நேரம் நல்ல நேரமாய் மழை பெய்து எங்கும் பசுமையாக வேண்டும்.
மக்கள், சுற்றம் வாழ வேண்டும்.

சித்திரை நிலா பெண் அழகு.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா நேரடி ஒளிபரப்பில் பார்த்தாச்சா.... நல்லது....

அழகர் அனைவருக்கும் அருள் பாலிக்கட்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

தரிசனம் எல்லா தளங்களிலும்!!

கீதா: அழகர் வந்து விசிட் கொடுத்துட்டுப் போயாச்சு பேக் டு பெவிலியன்.. போல...இங்க மாமியார் டிவியில் பார்த்தார்.

ஸ்ரீராம். said...

நாங்கள் சங்கரா டீவி வழி பார்த்தோம்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி தேவகோட்டையார் ஜி. அழகாகக் கொடுத்திருந்தார்கள். பொதிகையில் பார்க்கும் போது பக்கத்தில் நின்று பார்ப்பது போலத் தோன்றும். இது ஷார்ட் அண்ட் நைஸ்.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் செய்வார் வெங்கட். வைகை ஆற்றைத் திறந்த விட்டிருக்கிறார்களே.
அதுவே நன்மை செய்யும். மழை வரவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். கோமதி மா. பார்க்கும் போது எனக்கும் அவ்வாறே தோன்றியது. மக்கள் வெள்ளம்
தான் இன்னும் அதிகமாகத் தோன்றியது. வெய்யில் உக்கிரம் தணிந்ததா. முன்பெல்லாம்
ஒரு மழை இருக்கும்.வாழ்க வளமுடன் மா.

வல்லிசிம்ஹன் said...

ஐபிஎல் எஃபெக்டா கீதா பாக் டு பெவிலியன். ஹாஹா.
இல்லை இன்னும் அவர் பல மண்டகப் படிகளைக் காணவேண்டும்.
பிறகே அழகர்மலைக்குத் திரும்புவார்.

அன்பு துளசி, என்னைப் போல வெளியூரில் வசிப்பவர்களுக்கு இதெல்லாம் தான் வரம்.
இல்லையா மா. வாழ்க வளமுடன்.

Geetha Sambasivam said...

அழகர் திரும்ப இன்னும் ஒரு வாரமாவது ஆகும். இங்கேயும் துலுக்க நாச்சியார் உண்டு. அங்கே போயிட்டுத் தான் அழகர் திரும்புவார். தாயாரின் கோப, தாபம் எல்லாமும் இருக்கு. :)))))