About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, April 16, 2018

விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 மைலாப்பூரில் பழைய வீட்டுக்கு விளா மர வீடு என்றே பெயர். இரண்டு விளாமரங்கள்,கிட்டத்தட்ட 80 வயதானவை இருந்தன.

பாட்டி இந்த இடத்துக்குக் குடி வந்த பொதே


வைத்ததாகச் சொல்லுவார்கள்.
சப்போட்டா மரமும் இருக்கும்.
இரண்டு மரங்களிலும் கிடைக்கும் பழங்கள் ருசி சொல்லி முடியாது.
பெரிய பெரிய அளவில் மரத்திலிருந்து விழுந்து கொண்டே இருக்கும்.
சப்போட்டாவைப் பறிக்க ஆட்கள் ஏற்பாடு செய்யப் படுவார்கள்.

எல்லா வீட்டுக்கும் கொடுத்தனுப்பினது போக , கூடத்துக்குப் பக்கத்தில்
 இருக்கும் பெரிய அறையில் ஜன்னல் திட்டுகளில் வரிசையாக அடுக்கிவைக்கப் படும்.
நான் அங்கே இருந்த நாட்களில் , பாட்டி அந்த அறைக் கதவை சாவிபோட்டுத் திறந்ததும்  நாசியை வாசம் தூக்கும்.
ஒவ்வொரு விளம்பழமாக மேலிருந்து போட்டு
அதன் சத்தத்தை வைத்தே பழுத்ததா இல்லையா என்று சொல்வார்.
சில பழங்கள் குடுகுடு சத்தம் போடும். நன்றாகப் பழுத்ததின் அடையாளம்.
எனக்கு விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட பாடல் நினைவுக்கு வரும்.

பழுத்த விளாம்பழங்களைக் குழந்தைகளுக்குப் பிரித்துக் கொடுத்து உங்க அப்பா கிட்ட
கேளு. அவன் எக்ஸ்பர்ட் என்று சொல்லிவிடுவார்.
அவரும் அதை நல்ல இடம் பார்த்து உடைத்து,
வெல்லம் கலந்து கிண்ணத்தில் போட்டுக் கொடுப்பார்.

சின்னவனுக்கு மிகவும் பிடிக்கும் விளாம்பழம். மத்த ரெண்டும் பக்கத்திலியே போகாது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இப்போது இந்த விளாம்பழப் பச்சடி செய்யும் விதம் பார்க்கலாமா.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எங்கள் ஆஜிக்கு உதவி ஆள் நான் தான்.
மதிய வேளையில் , அம்மியில் இந்த விளாம்பழத்தை வைத்து
உடைத்து,
உள்ளிருக்கும் பழத்தை எடுத்து கொஞ்சம் வெல்லம், கொஞ்சம் புளி கலந்து பிசிறச் சொல்வார்.
அது நெகிழ்ந்து கொள்ளும்.
பிறகு அதன் தலையில் கடுகு ,பச்சை மிளகாய் தாளித்தால் ஆச்சு.

இந்தக் கலவையை அவர் தன் வெள்ளிக்கிண்ணத்தில் வைத்துக் கொண்டு சாப்பிடும் அழகே தனி.

16 comments:

ஸ்ரீராம். said...

சப்போர்ட்டா ஓகே. விளாம்பழம் எனக்கும் அவ்வளவு இஷ்டமில்லை. பற்பல வருடங்களுக்கு முன் ஓரிரு தரம் சாப்பிட்டிருக்கிறேன். அவ்வளவுதான்!

அதில் பச்சடி வேறு செய்வார்களா.. கேள்விப்பட்டதில்லை.

Geetha Sambasivam said...

வத்தக்குழம்பு அல்லது வெறும் குழம்பு ஏதேனும் சாதத்தோடு தொட்டுக்க இந்த விளாம்பழப் பச்சடி மட்டும் இருந்துட்டால்! ஆஹா! சொர்க்கம் தான்!

வெங்கட் நாகராஜ் said...

விளாம்பழம் சாப்பிட்டதில்லை. சப்போட்டா விஜயவாடாவிலிருந்து வரும் பெரியப்பா கூடையோடு கொண்டு வருவார். அங்கே அது விலை மலிவு.

நெ.த. said...

விளாம்பழம், வெல்லம் பிசிறி கிண்ணத்தில் வைத்துக்கொண்டு சின்ன ஸ்பூன் போட்டு சாப்பிடணும். கையில் கதைப் புத்தகம். ஆஹா சொர்க்கம்

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: விளாம்பழம் அவ்வளவாகச் சாப்பிட்டதில்லை. பிடிக்காது என்றில்லை ஆனால் வாய்ப்பு இல்லை..

கீதா: விளாம்பழம் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் அம்மா. வெல்லம் கலந்து கொஞ்சம் தேனும் கலந்து சூப்பரா இருக்கும். பச்சடியும் செமைஅயா இருக்கும்....சாதத்திற்குத் தொட்டுக் கொண்டும் சாப்பிடுவேன். என்னவென்றால் விளாம்பழம் வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும் அதுதான் பிரச்சனையாகிறது.

Thulasidharan V Thillaiakathu said...

சப்போட்டாவும் ரொம்பப் பிடிக்கும்..

கீதா

ராஜி said...

விளாம்பழத்தோடு சர்க்கரை சேர்த்து என் வீட்டுக்கார் சாப்பிடுவார். ஆனா எனக்கு பிடிக்காது.

சப்போட்டா ரொம்ப பிடிக்கும்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், விளாம்பழம் நானும் சாப்பிட மாட்டேன். நல்லதெல்லாம் பிடிக்காதேன்னு அம்மா கிட்ட பேச்சு கேட்பதும் உண்டு. கையில் ஒட்டிக்கொள்ளும் எதுவும் நமக்கு ஒத்து வராது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா,
ஸ்ராத்த சமயங்களில் மாங்காய் இல்லாட்டா இந்தப் பச்சடி இருக்கும். அப்பா,பெரிய தம்பி விரும்பி சாப்பிடுவார்கள். நம் வீட்டில் சின்னவனுக்கு மிகவும் பிடிக்கும்.
உங்கள் ரசனை அழகு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், சப்போட்டா எனக்கும் மிகவும் பிடிக்கும். இப்போ தடா. நம் வீட்டு சப்போட்டாவுக்கு நிறைய பேர் போட்டி. தேங்காய் அளவில் இருக்கும்.
ஒண்ணு சாப்பிட்டாலே வயிறு நிரம்பிடும். சாலையோரம் இருந்ததால் மதில் தாண்டி வந்து பறித்துப் போவார்கள். இதெல்லாம் 1970களில்.

வல்லிசிம்ஹன் said...

கையில் கதைப் புத்தகம் . இது ஒரு பெரிய வரலாறு தெரியுமோ முரளி.
ஜீன்ஸ் வழி வரும் குணம். அப்பா, அத்தை வழி பசங்க,நான்,
இப்போ எங்க பேரன் பெரியவனும், பேத்தி யும் செய்கிறார்கள்.
I am multitasking paatti enRu perumai.
நிறைய விளாம்பழம் எடுத்துக்கோங்கோ. மிகவும் நல்லது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி., ஸ்ரவண மாதங்களில் கிடைக்கும் மா. உடல் நலத்துக்கு நல்லது.

சப்போட்டா எல்லோருடைய ஃபேவரிட் என்று நினைக்கிறேன்.

@ கீதா, இதோ வந்துவிடும் விளாம்பழம். நிறைய சாப்பிடுங்கள். குளுமை கூட.

நெ.த. said...

வல்லிம்மா... எனக்கு சப்போட்டா எப்போதுமே பிடிக்காது. நான் பெருங்குளத்தூரில் சிறிய இடம் வாங்கினேன் (ட வடிவில்). அதில் ஓரமாக சிறிய சப்போட்டா மரம் இருந்தது. அதில் உள்ள பழம் பெரிய கொய்யா சைஸ். நான் வெளிநாட்டில் இருந்ததால், ட வின் மீதி இடத்தில் இருந்தவர்கள், அதனை வெட்டிவிட்டார்கள். எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது.

கோமதி அரசு said...

விளாம்பழம் எனக்கும் பிடிக்கும். பள்ளி காலத்தில் விளாங்காய் சாப்பிட்டு இருக்கிறேன்.
விளாம்பழம் பிள்ளையார் சதுர்த்திக்கு வாங்குவோம்.
சில நேரம் அது ஏமாற்றி விடும் உடைத்தால் உள்ளே பூஷணம் பூத்து இருக்கும்.
பழமாய் இருந்தால், வெல்லம், சீனீ போட்டு சாப்பிட பிடிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன்,

சஃப்போட்டா என்கிற சிகூ கையில ஈஷிக்கிற சமாசாரம் தான். ரொம்பவே திதிப்பு.
விளாம்பழ வோட் ஜாஸ்தியா இருக்கும் போல.
மரத்தை வெட்டினார்களா. பாவம் தான்.
பெருங்களத்தூர் நல்ல வளமான பூமியாச்சே. நன்றாக வளர்ந்திருக்கும்
அந்த மரம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி. விளாங்காய் ,பிளந்து உப்பு,மிளகு தூவி சாப்பிடலாம்..
நாங்களும்
நிறைய ஏமாந்திருக்கிறோம்.
மழை இல்லாத வருடங்களில் பல பழங்கள் இது போல ஆகிவிடும். வாங்கும்போதே
பார்த்து வாங்க வேண்டும்.கீழே
போட்டல் தொம்னு அப்படியே இருக்கும்.
அதை வாங்கலாம்.