Blog Archive

Friday, April 13, 2018

1991 APPA IS 70

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
70 வயதில் என் பெற்றோர்கள். 1991 மே 30
++++++++++++++++++++++++++++++++++++++
அப்பாவின் 70 வயது பூர்த்திக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
அவருக்கு கைக் கடியாரம், நல்ல சட்டை, செருப்பு எந்த ஆடம்பரமும் வேண்டாம்.
அங்க வஸ்திரம் மடிப்புக் கலையாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

மிகத் தீவிரமான ஆன்மிகம்,அது சம்பந்தமான நூல்கள். தம்பிகள் இருவருக்கும்
எப்பொழுதும் சென்னைக்கு   வெளியே செல்லும் வேலை.

அதனால் என்ன ஏற்பாடு செய்வதாக இருந்தாலும்
நாந்தான் பார்க்கவேண்டும்.
எனது தோழி சாந்தி ஹோமம் செய்யலாம் என்றாள்.
அம்மா, அதற்கு மறுப்பு சொல்லிவிட்டார். அப்பாவுக்கு
அதில் ஈடுபாடு கிடையாது.
உன் குழந்தைகளுக்காக ஏதாவது செய்யலாம் என்றால் சம்மதிப்பார் என்றார்,.
அப்பொழுது மக்கள் எல்லாம் வேலைக்குப் போக ஆரம்பித்தாச்சு.
  திருமண முயற்சிகள் ஆரம்பித்த நேரம்.
கோவில் செல்ல எல்லோருக்குமே பிடிக்கும்.
 அப்பாவின் நட்சத்திரம் ஒரு வெள்ளிக் கிழமை.

அன்று முழுவதும் கோவில்கள் சென்று வரலாமே என்று தோன்றியது.
அப்பா வெகு நாட்களாகப் போக நினைத்து ,கனவு கண்டது
காஞ்சி கூரத்தாழ்வர் கோவில்.
அதைச் சுற்றி இருக்கும், திரு வேளுக்கா, பிறகு காஞ்சிபுரம், வரதராஜன், பாண்டவ தூதன்,
உலகளந்த பெருமாள்,, வரும் வழியில் திருவள்ளூஊர், திரு முல்லை வாயில்,,
திருமழிசை என்று என் திட்டம் நீண்டது.

கணேஷ் டிராவல்ஸில் பெரிய டெம்போ வண்டி கிடைத்தது.
எல்லாம் எழுதி வைத்துக் கொண்டு அப்பாவிடம் சென்றேன்.
அவர் என்றாவது எனக்கு மறுப்பு சொல்லி இருந்தால் தானே
இப்போது மறுப்பு சொல்ல.
உடனே ஒப்புக் கொண்டார்.
தம்பிகளிடம் தொலைபேசியில் கலந்து பேசி சம்மதம் வாங்கிக் கொண்டேன்.
வெளியில் சாப்பிடுவது யாருக்கும் ஒத்துக் கொள்ளாது.
அதனால் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இட்லி, புளியோதரை,சப்பாத்தி,ததியன்னம்,
திருக்கண்ணமுது
இது அம்மா கைவண்ணம்.
வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நம் வீட்டுக்கு வண்டி வந்து விட்டது.
ததி அன்னம், சப்பாத்தி, உருளைக்கிழங்கு கூட்டு என்  பங்கு. லிம்கா, தண்ணிர் பாட்டில்கள் எல்லாம் ஏறின.
13 இருக்கைகள் கொண்ட வண்டி. முதல் இரண்டு சீட்டும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்.
 நானும் தம்பியும் ஒரு பக்கம்.,பெரிய தம்பியும் சிங்கமும் ஒரு பக்கம் தம்பிகளிம் மனைவிகளும்
எங்கள் பெண்ணும் கடைசி இருக்கை. . 13 வயது பேரன், 9 வயது பேத்தி,
எங்கள் பையன்கள் எல்லோரும் வண்டிக்குள் நடந்து கொண்டே இருந்தார்கள்.

இனிதே பயணம் ஆரம்பித்தது.
Add caption

17 comments:

KILLERGEE Devakottai said...

அருமை தொடர்கிறேன். பயணத்தை நானும்...

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... பயணமா.... நமக்குப் பிடித்த விஷயமாயிற்றே....

நானும் தொடர்கிறேன்.

ஸ்ரீராம். said...

உங்களுடைய எழுபதாவது வயதில் அப்பாவின் எழுபதாவது வயதில் நடந்தவற்றை நினைவு கூர்கிறீர்களா? இனிமையான நினைவுகள். தொடருங்கள்.

நெல்லைத் தமிழன் said...

அப்பாவின் 70ஆவது வயது பூர்த்திக்கா? காஞ்சி ஒருபுறம், திருவள்ளூர் மறுபுறமாயிற்றே. இன்டெரெஸ்டிங். 13 வயது பேரன் 9 வயது பேத்தி யார்?

நேற்றுத்தான் திருநின்றூர் ஹிருதயாலீஸ்வர்ர் (பூசலார் நாயனார்) (நேற்று பிரதோஷம் என்பது கோவில் சென்றபின்தான் தெரியும்) , பக்தவத்சலன்/என்னைப்பெற்ற தாயார், திருநின்றூரில் ஏரிகாத்த ராமர், ஆஞ்சநேயர் சேவித்தோம்.

இன்று வெங்கட்நாராயணா திருப்பதி தேவஸ்தானம், விரைவில் காஞ்சி கோவில்கள், திருவள்ளூர் வைத்ய வீர்ராகவன் சேவை கிடைக்கணும்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நினைவுகளைப் பகிரும்போது கிடைக்கும் மன நிறைவு எல்லையற்றது.

Geetha Sambasivam said...

அப்பாவின் எழுபது சுவாரசியமான ஆரம்பம். நேரில் பேசுவது போல் நீங்கள் எழுதுவது மனதையும் கவரும்.

@நெ.த. திருநின்றவூரில் ஏரிகாத்த ராமரா? அடக் கடவுளே தெரியாமல் போச்சே! :))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டையருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
வாங்கோ சேர்ந்தே போகலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
நீங்கள் செல்லாத பயணமா,. ஹாஹா.
காட்டாயம் சேர்ந்து கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
ஆமாம். அப்பாவுக்குப் பயணம் என்றால் வெகு ஆசை.
சொல்ல மாட்டார்.
இருவரும் அழகாகத் திட்டம் போடுவார்கள்.

கச்சிதமாகச் செய்யவும் தெரியும். இதைத் தொடர்ந்து திருவேந்திபுரம்
சிதம்பரம் எல்லாம் சென்று வந்தோம்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் அன்பு முனைவர் ஐயா. இனிய பயணம் அது.
விளம்பி வருடப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத் தமிழன்,
ஆமாம் இரண்டு நாட்களாக நீண்டு விட்டது.

நல்ல வேளை அப்பாவுக்குத் தெரிந்த நண்பர்
தன் வீட்டை ஒழித்துக் கொடுத்தார். காஞ்சீபுரத்தில்
எல்லோருக்கும் புடவை, வேட்டிகள் கிடைத்தன.
காட்டன் தான்.
சந்தோஷமாக வாங்கிக் கொடுத்தார் அப்பா.

பேரன் ,தம்பி முரளியின் பையன்.
பேத்தி தம்பி ரங்கனின் பெண். முரளியோடு திருமணப் படத்தில் நிற்குமே அந்தக் குட்டி.

மறக்க முடியாத சந்தோஷப் பயணம். என்னைப் பெத்த தாயார் சன்னதியில் குபேர யந்திரம் கொடுத்தார்களா.
அந்த ராமர்தான் எத்தனை உயரம் இல்லையா மா. வனவாச ராமர்.
ஹ்ருதயாலீஸ்வரர் கோவிலில் கர்ப்பிணியாகச் சீதையைப் பார்த்தீர்களா.

Geetha Sambasivam said...

அட! இதுக்கு நான் கொடுத்த கருத்து காக்கா ஊஷ்ஷா! :)))))

கோமதி அரசு said...

அருமையான அன்பான பயணம்.

தொடர்கிறேன் நானும் .

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா ஸாரிம்மா நான் இரண்டு நாட்களும் ரொம்ப பிஸியாகிட்டதால் தளம் வந்து வாசித்து கருத்து போட முடியலை...துளசி அனுப்பியிருந்த கருத்தையும் போட முடியலை...
இதோ கருத்துகள்

துளசி: வல்லி அம்மா உங்கள் அப்பா அம்மா குடும்பக் கதைகள் பயணம் என்று எல்லாமே ஏதோ எங்கள் அருகில் உட்கார்ந்து கொண்டு எங்கள் எல்லோருக்கும் கதை சொல்லுவது போல அழகாகச் சொல்லுகின்றீர்கள். வாசிக்கவும் இனிமையாக இருக்கிறது. அந்தக் காலத்திற்கும் கொண்டு செல்கிறது. ரசித்து வாசிக்கின்றேன்..பயணத்தில் நானும் உங்களுடன் சேர்ந்துவிட்டோம் தொடர்கிறோம்.

கீதா: வல்லிம்மா பயணம் என்றாலே எனக்கு ரொம்பப் பிடிக்கும். அட உங்கள் வயது எழுபது. உங்கள் அப்பாவின் 70பதாவது வயது நிகழ்வுகள் நினைவுக்கு வந்துவிட்டதோ?!!! அதான் அந்த இனிய நினைவுகள். எவ்வளவு இனிமையான அன்பான குடும்பத்தி நிகழ்வுகள். அது சரி அந்தப் பேரன் பேத்தி யார்? உங்கள் பயணத்தைத் தொடர்கிறோம் நாங்களும்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, கோவில் சென்று வந்தீர்களா.
ஆமாம் ,இனிமையான பயணம். நல்ல வேளை அழைத்துச் சொன்றோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,
அருமையான நண்பர்கள் நீங்கள் எல்லோரும்.
எப்பொது வந்தாலும் தவறில்லை.
என்னால் தான் நிறைய நண்பர்கள் பதிவுகளுக்குப்
போக முடிவதில்லை. வருத்தம் வருகிறது.

நினைவுகளை எழுதும் போது I feel closer to them.
அதுதான் பதிந்து வைக்கிறேன். பின்னாட்களில் நானே
படிக்கும்போது இன்னும் சந்தோஷமாக இருக்கும்.

அன்பு கீதா, பயணங்களில் ஒரு நாள் ஒருபடுவோம். நாமெல்லாரும்
போகலாம். நான் குற்றாலம் பார்த்ததே இல்லை.
சரியா .நன்றி கண்ணா. வாழ்க வளமுடன்.

அந்தப் பேரன் தம்பி முரளியின் மகன், பேத்தி தம்பி ரங்கனின் மகள் கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
இரண்டு கருத்து வந்திருக்கேமா.
என்னைப் பெற்ற தாயர் கோவிலுக்கு
எதிர் சாரியில் இருக்கு மா. எட்டடி உயரம் ராமர். வனவாசக் கோலம்.
ஆஞ்சனேயர் கிடையாது. சீதையும் லக்ஷ்மணர் உண்டு. வெகு அழகு.