Saturday, April 21, 2018

அப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 அகிலா மாமிக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. நீங்க எல்லாம் சாப்பிட வேண்டாமோ என்றார்.
கையோடு கொண்டு வந்திருக்கிறோம் அகிலா
கிருஷ்ணனைப் பார்த்துவிட்டு வரதனைப் பார்க்கணும்.
குளக்கரையில் சாப்பிடலாம் என்று குழந்தைகள் ஆசைப் படுகிறார்கள். நீங்களும் வாங்கோ என்றதும்..
சாப்பாடெல்லாம் முடித்தாச்சே. நீ செய்யும் திருக்கண்ணமுது இன்னும் என் நாக்கு மறக்கவில்லை. அதைக் கொஞ்சம் வைத்து விட்டுப் போ.
இதோ மணி மூணாகிட்டது பார். கண்ணனிப் பார்த்துட்டு பெரிய கோவில்
போங்கோ என்றார்.
முன் பசிக்கு, இட்லி எல்லோருக்கும் போது மாந்தாக இருந்தது.

இப்பாவே சொல்லிட்டேன் இன்று இரவு நம்மாத்திலதான் சாப்பாடு.
வந்துவிடுங்கள் என்று என்னை அன்புடன் அணைத்துக் கொண்டார்.

அப்புறம் எப்போது சென்னைக்குச் செல்வது என்றார் அப்பா. அதெல்லாம் கார்த்தால
பார்த்துக்கலாம் டா நாராயணா வராத  விருந்து நீங்கள். நல்ல நாள். நான் கொடுத்து வைத்திருக்கிறேன் என்று மாமாவும் சொல்ல நாங்கள் விழித்தோம்.

கோவிலுக்குப் போய் வருகிறோம் என்று கிளம்பினோம்.
மாமி மாமாவுக்கு  ஆர்டர் போட ஆரம்பித்துவிட்டார்.

பாண்டவதூதன் கோவில் அப்போதெல்லாம் வீதியிலிருந்தே ஆரம்பித்த நினைவு.
பிழையாகவும் இருக்கலாம்.

துவஜஸ்தம்பம் தொட்டு வணங்கி, பட்டர் மமாவுடன் உள்ளே நுழைந்ததுதான் தெரியும்.
விஸ்வரூபம் எடுத்து, துரியோதனன் சபையில் எழுந்தருளினானே அந்தக் கண்ணன் விரித்த விழிகளும், கறுத்த உருவம், மடித்த காலும், அந்த அழகிய நகங்களும் தெரியும் படி வீற்றீருந்த கோலம் இப்பொழுதும் என் கண்களில் நிற்கிறது.
அந்த க்ஷணமே கண்ணன் முடிவெடுத்தானோ ,குருகுலத்தை அழிக்க.
 ஒன்றும் ஓடவில்லை எநகள் மனதில்.
யார் இந்த சிலையை வடித்திருப்பார்கள். இத்தனை வடிவாகா,
வேஷ்டி மடிப்புகள் அளவாக இருக்க, அபய ஹஸ்தம் அருள் வழிய
இதென்ன மாயம் .
எங்கள் வாழ்க்கையில் இது போல ஒரு மாயக்கண்ணனைப் பார்த்ததில்லை.
மனமில்லாமல் வேலீயே  வந்தோம்.
வண்டியிலேறி மீண்டும் வரதராஜன் மதில்சுவரை அடைந்தோம்.
மீண்டும் பட்டர் உதவியோடு சுற்றுப்புற மண்டபத்தில் குளுகுளு காற்றூ வீச,
 குளத்தில் மீன்கள் பாய்ந்து வர, கொஞ்சமே சாப்பிட முடிந்தது. அம்மா கதம்ப சாதத்தைத் தன் தோழியோடு சாப்பிட எடுத்து வைத்துவிட்டார்.
நாமெல்லாம் அங்கே சாப்பிட வேண்டும் என்றால், சீக்கிரம் பகவான் தரிசனம் முடித்துக் கொண்டு வைகுண்டம் சார் அகத்துக்குப் போய் விடலாம் என்றார் அம்மா.

அப்பா, முரளியையும்,ரங்கன்,சிம்முவை அழைத்தார்.
கைப்பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தார்.
///////எதுக்குத் தாத்தா ..இந்தக் கேள்வி என் பசங்களிடமிருந்து.
நான் அவர்களை இந்தச் செலவில் கலந்து கொள்ளச் சொன்னேன்,. தெரியாதாம்மா என்று
திருப்பிக் கேட்டனர்////

நாளை மீண்டும் வரதனைத் தரிசிக்கப் போகிறோம்.
நீங்கள் மூவரும் அவரவர் மனைவியை அழைத்துப் போய்
புடவைகள் வேஷ்டிகள் வாங்குங்கள்.
இன்னோரு ஜோடி வைகுந்தத்துக்கும், அவர் மனைவிக்கும் வாங்கி விடுங்கள். அவர்கள் இருவரும் இன்று நமக்கு பெருமாளும் பெருந்தேவித்தாயாரும் என்றார்.
யாரும் மறுக்கவில்லை.
நான் அம்மா அப்பாவோடு இருந்து கொண்டேன் . அவர்கள் வண்டியில் கிளம்பினார்கள்.
நாங்களும் வரதா வரதா என்று முன்புறப் படிகளில் ஏறினோம். தொடரும்.
திருமண வரம் தரும் ஆதிசேஷன். திரு ஊரகம் கோவில்