Blog Archive

Monday, March 19, 2018

இடும்பை கூர் வயிறும் அம்மாவும்,நானும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  1958  திருமங்கலம்.
 காலையில் அம்மா தைத்து வைத்திருந்த புத்தாடை அணிந்து ,பத்து என்கிற பத்மா
வீட்டுக்குப் போய்
என் அருமை அம்மா அப்பா.
இன்று நான்.
காண்பித்து விட்டு
பக்கத்து வீட்டில் இட்லி விற்கிற மாமாவிடம் எல்லோருக்கும் இட்லி ,சட்டினி எல்லாம் வாங்கிக் கொண்டு
 அவர்களின் கேள்விகளுக்கெல்லாம்
பதில் சொல்லி வந்ததும்
வீட்டுக்கு வந்ததுதான் தெரியும்.
பசியில் நான் கு  இட்டிலி உள்ளே தள்ளியாச்சு.
புது சாட்டின் பாவாடையோடு தட்டாமாலை  சுற்றும்போது வயிறு ஆட்டம் கண்டது.
என்ன ஆட்டம் போடுகிறாய் நீ என்று கடிந்து கொண்ட அம்மாவிடம்
பதில் சொல்ல முடியாமல் வந்தது வயிற்றுப் பிரட்டலும் வாந்தியும்.
அம்மா நடுங்கி விட்டார்.
ஊர்க்கண்ணே பட்டுவிட்டது போல என்னைப் படுக்க வைத்து ஏதோ கை வைத்தியம் செய்தும் நிற்கவில்லை.

ஒவ்வொரு தடவை வாந்தி வரும்போதும் தரையைத் துடைத்த வண்ணம்,
எனக்குக் குடிக்க ஏதோ கொடுத்த வண்ணம் இருந்தார்.
அப்பாவுக்குச் சொல்லி அனுப்பி அப்பாவும் அவசரமாக வந்து
  நாலு வீடு தள்ளி இருந்த டாக்டர் வீட்டுக்கு
அழைத்துப் போனார்.
வைத்தியரைப் பார்த்ததும் பாதி உடல் நலம் திரும்பிவிட்டது.
 என்ன நேத்திக்கு என்ன சாப்பிட்ட. வேர்க்கடலையா, பக்கோடாவா
என்று கேட்ட வண்ணம் வயிற்றை அழுத்திப் பார்த்து
ஒண்ணுமே இல்லையே.

ஆமாம் எல்லாம் வெளில வந்தாச்சு.டாக்டர்,, என்று சொன்னேன்.
மூணு நாளுக்கு அம்மா  கொடுக்கறதை மட்டும்  சாப்பிடு.

ஸ்கூலுக்குப் போக வேண்டாமே என்று கேட்டுக் கொண்டேன்.
அப்பா முகத்தில் புன்னகை.
 நாளைக்கு மட்டும் லீவு.
இன்னிக்கு புதன் கிழமை.
வெள்ளிக்கிழமை ஸ்கூலுக்குப் போகலாம்.
சரியா என்று இளம் சிவப்பு மிக்சர் டானிக் ஒன்றைக் கொடுத்தார்.
வீட்டுக்கு வந்ததும் கடையில் வாங்கி வந்த ப்ரெட் ,
பாலைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டதும்  மீண்டும்

பசி வந்தது போலத் தோன்றியது.
அம்மா அசைந்து கொடுக்க வில்லை.
தம்பிகள் பள்ளியிலிருந்து வந்ததும்
ஏன் நீ ஸ்கூலுக்கு வரவில்லை .பெரிய டீச்சர் கேட்டார்.
என்றான் பெரிய தம்பி.
உடம்பே சரியில்லைடா ,எட்டு தடவை வாமிட் பண்ணேன் என்று அலுத்துக் கொண்டேன்.
உடனே கட்டிலுக்கு சென்று படுத்துக் கொண்டாகிவிட்டது.
ஆண்டாளுக்கு என்னம்மா,ஜுரமா என்றதும்
இல்லைடா ஏதோ வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாத வஸ்து சாப்பிட்டு இருக்கா.
ஓ. அம்மா ,நேத்திக்கு ஆனந்த பவன் உ.கிழங்கு மசாலா வாங்கி வந்தோமே
அதுவா மா என்றான்.
அப்பாவோட போயி வாங்கினோமே .அதும்மா
என்றதும் அம்மா,அப்பாவைப் பார்க்க
நேத்திக்கு ஆபீசிற்கு வந்தார்கள் மூன்று பேரும். வாங்கிக் கொடுத்தேன் மா
அப்பா ,அம்மா முகத்தைப் பார்க்காமல் சொன்னார்.
அம்மா சிரித்துவிட்டார்.
இந்த ராணிம்மாவுக்கு  இளவரசி போல் எதையும் தாங்காத
வயிறு. கண்டிப்பாக இருக்கணும் என்றதும் அன்றைய
பெரிய சம்பவம் முடிந்தது.
அம்மா நினைவு அதிகமாக வருவது பங்குனி மாதத்தில் தான்.
எத்தனை சிரமப்பட்டாளோ என்னுடன்.
தாயில் சிறந்த கோவில் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

19 comments:

Angel said...

ஸ்வீட் மெமரிஸ் :) வல்லிம்மா .
சாட்டின் பாவாடை தட்டாமாலை சுற்றும் பெண்ணை கற்பனைபண்ணி பார்க்கிறேன் :)
நானும் சின்னத்தில் எங்கஅம்மாவை ரொம்ப படுத்தி வச்சிருக்கேன் :) வீட்ல யாருக்கு சிக் வந்தாலும் பரவால்ல உனக்கு மட்டும் சின்ன ஜுரம் கூட வரக்கூடாதுன்னு வேண்டிக்கறேன்னு அம்மா எப்பவும் சொல்வாங்க :)
எனக்கும் ஹோட்டல் சாப்பாடு டேக் away எல்லாம் அப்பவும் தடா இப்பவும் தொட்டதில்லை ..

ஸ்ரீராம். said...

தந்தை சொல் மிக்க மந்திரமில்லையும் சேர்த்தே சொல்லுங்க...!! ருசியான அனுபவம்.(உ கி போண்டா) எப்படியோ ஸ்கூலுக்கு மட்டம் போட்டாச்சு!!

கோமதி அரசு said...

//இந்த ராணிம்மாவுக்கு இளவரசி போல் எதையும் தாங்காத
வயிறு//

அம்மாவின் கனிவான பேச்சு அருமை.

எனக்கும் ஐஸ் சாப்பிட்டால் தொண்டைவலி வந்து கஷ்டபடுவேன் சிறு வயதில் அப்போது எல்லாம் திட்டும் கவனிப்பும் அதிகம் கிடைக்கும்.

பெரிய அம்மை வந்து கஷ்டபட்ட போது அம்மா, அப்பா கவனிப்பு !

பகல் இரவாய் விழித்து இருந்து காத்தார்கள்.

தலைப்பும் பதிவும் நெகிழ வைத்தன அக்கா.

KILLERGEE Devakottai said...

அம்மாவுடனான நினைவுகள் சுகமே...

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்

Thulasidharan V Thillaiakathu said...

//தாயிற் சிறந்த கோயிலுமில்லை!!//

ஆமாம் வல்லிம்மா....

உடம்புக்கு முடியவில்லை என்றால் "ஹை ஸ்கூலுக்குப் போக வேண்டாம் ஜாலி" என்று தோன்றும்...

அப்போதே அடையார் ஆனந்த பவன் இருக்கா? அந்த ஆனந்தபவனா?

உங்கள் சிறு வயது அனுபவங்கள் ரொம்பவே ஸ்வாரஸ்யமாய் இருக்கு வல்லிம்மா...தொடர்கிறோம்,,,

கீதா

நெல்லைத் தமிழன் said...

இளமை நினைவுகளை ரசிக்க முடிந்தது. நம்மைப் பெற்று வளர்த்தவர்களை எல்லாச் சம்பவங்களும் நினைவுக்குக் கொண்டுவந்துவிடுகிறது. தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல், நீங்கள் எல்லோரும் அன்பு பொழியும் அம்மா போலவே இருக்கிறீர்கள்.
எனக்கு என்ன குறை அம்மா.
ஆமாம் அந்தப் பாவாடை சட்டையை 3 வருடங்கள் வைத்திருந்தேன்.
துணியின் தரம் அப்படி.நன்றி டா ராஜா. என்றும் என் ஆசிகள் உங்களுக்கு. ஆரோக்கியமாக இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

சேர்த்துட்டென் ஸ்ரீராம். நிஜமாவே இரண்டும் சேர்ந்தால்தான் நமக்கு ஆசி கிடைக்கும்.
ஜாலிதான் லீவுன்னால் இன்னும் ரெண்டு ஆனந்தவிகடன், குமுதம் படிக்கலா

ஸ்ரீராம். said...

/ சேர்த்துட்டென் ஸ்ரீராம்.//

அடடே.. நன்றிம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,

அம்மாவை நினைக்கக் காரணம் இன்று எனக்கு நட்சத்திரப்படி 70 பூர்த்தி.
என் சிறப்பு வாழ்க்கைக்காக அம்மா அப்பா
செய்த தியாகங்கள் எத்தனையோ.
நாமும் நம் குழந்தைகளுக்காக எவ்வளவோ செய்கிறோம்.
ஆனால் அவர்களது உறுதியான உதவிகள்
சொல்லி முடியாது. உங்கள் அம்மாவைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் எழுது
ங்களேன்
கோமதி.
இறைவன் கருணையில் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க வேண்டூம்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே தேவகோட்டையாரே. அவர்கள் இல்லாமல்
நாம் எங்கே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக் குமார்,வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நான் சொல்வது, மதுரையின் அருகே இருக்கும் திருமங்கலம்.
அங்கே மீனாட்சிதான் கோவில் கொண்டிருந்ததால் ஆனந்த பவன்,மீனாட்சி பவன் இரு
உணவகங்கள் உண்டு.
நல்ல முறையிலியே பராமரிக்கப் பட்டு வந்தன.
எனக்குத்தான் ஒத்துக் கொள்ளவில்லை.
உண்மைதான் பல வகை மருந்துகள் வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கின்றன.
அதனால் வெளியே அழைத்துச் செல்லவே மகள் பயப்படுகிறாள்.
நம்மால் இவர்களுக்கு சிரமம்.என்ன செய்யலாம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நெல்லைத்தமிழன்,
திரும்பிப் பார்ப்பதே எனக்கு வழக்கமாகி விட்டது.
ரசமான சம்பவங்களைக் குறித்துக் கொள்கிறேன். நன்றி மா.

கோமதி அரசு said...

70 வயதுக்கு வாழ்த்துக்கள் அக்கா
. வணங்கி வாழ்த்து பெற்றுக் கொள்கிறேன்.
என் அம்மா, அப்பா பற்றி முன்பு நிறைய எழுதினேன்.

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறை ஆசிகள் கோமதி. என்றும் மன நிறைவோடு, பெருமையாக இருக்கணும்.
என்றாவது ஒரு நாள் மதுரையில் பார்க்கலாம்.

ராமலக்ஷ்மி said...

பிறந்த தின மாதத்தில் பெற்றவரின் நினைவுகள்.

வாழ்த்துகளும் வணக்கங்களும் வல்லிம்மா!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, எத்தனை ஆதரவு உங்களுக்கு. என்னிடம்.
அம்மா அப்பாவை ஒவ்வொரு நாளும் நினைக்கிறோம்.
நன்றி சொல்லி முடியாது. வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா.என்றும் வாழ்க வளமுடன்.