About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Tuesday, March 13, 2018

வாழ்வின் பாடங்கள் பலவிதம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
   அன்பு, மரியாதை,பாசம் என்ற எல்லாமே நாம் வளரும் இடத்தில் தான்
கிடைக்கப் பெறுகின்றன.
செடி ,நாற்றாக இருக்கும் போது அதற்குக் கிடைக்கும் ஊட்டமே
பிற்காலத்தில் புயலோ மழையோ வெயிலோ
எதையும் சமாளிக்க உரம் கிடைக்கிறது
 நம்மில் அனேகமாக அனைவருக்கும், அம்மா,அப்பா,பாட்டிகள் ,தாத்தாகளின்
அன்பும் ,கண்டிப்பும் சேர்த்தே கிடைத்திருக்கிறது.
நியாயங்கள் மனதில் பதியும் படி சொல்லப் பட்டிருக்கின்றன.
நன்மை  தீமை அறியும் விதமாக கதைகள்  வழியாக
காதுகளுக்குள் புகுந்து புத்தியிலும் பதிக்கப் பட்டிருக்கின்றன.
விடுமுறை நாட்கள் என்று மதுரைக்குச் சென்றாலும்,
தாத்தா அத்தனை வாய்ப்பாடுகளையும் சொல்ல வைப்பார்.
பாட்டி  மாவரைக்கக் கூப்பிடும்போது
அரைத்துக் கொண்டே பழைய நினைவுகளை,
பரம்பரையாக நடந்த சம்பவங்களைப் பதிவார்.
கீரை ஆய்ந்து கொண்டே கேட்ட செய்திகள் அனைத்திலும் உழைப்பே
மேலுறுத்தப்படும்.
அப்போதே பாட்டியும்,தாத்தாவும் அனுபவிக்காத
துன்பங்கள் இல்லை.
மகன், மகள் இருவரையும் இழந்தும்,
மன வலிமையை இழக்காமல்
தெய்வ பக்தியை விடாமல் வாழ்க்கையை நடத்தினர்.

அம்மாவுடைய அம்மாவும், அப்பாவுடைய அம்மாவும்
கூடப் பிறந்த சகோதரிகளிடம் வைத்திருந்த பாசம்
சொல்லிமுடியாது.
நல்ல கட்டுக் கோப்பு.ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
இதை எல்லாம் ஏன் இங்கே சொல்கிறேன் என்றால்,
நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு
 நாம் தான் உதாரணம். 
நாம் பெரியவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் ,அவர்களின் எதிர்கால
நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமையும்..
எங்கள் தலைமுறை வரை அப்படித்தான் இருந்தது.
இந்தத் தலைமுறை மக்களும் மரியாதை மீறி
ஒன்றும் செய்வதில்லை.
பெரியவர்களிடம் நமக்கு ஏதாவது வேற்றுமை உணர்வு இருந்திருந்தாலும்
சிறியவர்கள் வரைக் கடத்த வேண்டாம்.

அவ்வாறு கடத்தினால் நம் மேலேயே என்றாவது திரும்பும்.
இப்போதுள்ள குழந்தைகளுக்கு கற்றறிவு , சூழ்னிலையைக் கிரஹிக்கும் தன்மை
அதிகமாகவே இருக்கிறது.
பெற்றோர்களுக்குள் இருக்கும் வேறுபாடோ,
அன்பு குறைபாடோ அவர்கள் மனதை உறுத்தும்.
இதமாகப் பேசித்தான் அவர்களை நல்வழிப் படுத்த வேண்டும்.

கல்லூரிக் காலமும் வந்துவிட்டால் சுதந்திரம் ஜாஸ்தியாகும்.
கூடா நட்பு ,ஏற்படக் கூடாது.
இந்த ஊரில் விதவிதமான வேடிக்கைகளைப் பார்க்கிறேன்.
நம் இந்தியக் குழந்தைகள் நிறைய வழி மாறிப் போவதில்லை.
பெற்றோரிடம் அடங்கியே
இருக்கிறார்கள்.  எதிர்காலம் எப்படியோ தெரியவில்லை.

தெரிந்த வரை சொல்லிவிட்டேன்.
 நம் மூக்கு நுனி அளவே நம் வாய்ச்சொற்களுக்கு சுதந்திரம்.
அதற்கு மேல் போனால் கேட்டுக் கொள்ள இளைய தலைமுறைக்கோ,
அவர்கள் பெற்றோர்களுக்கோ பொறுமை இல்லை.
காலம் மாறியதால் என்னைப் போன்றிருப்பவர்களும் மாறித்தான் ஆக வேண்டும்.
உட்கார் என்று சொன்னால் உட்காரவோ,
நில் என்றால் நிற்கவோ மனம் ஏற்க மறுக்கிறது.
அதனால் நம்மால் முடிந்தது, குழ்னிலைக் கேற்ப பக்குவமாக நடப்பதும்,
கடவுளை இடைவிடாது பிரார்த்திப்பதிலும் தான்.

வாழ்க வளமுடன்.
அம்மாவின் தம்பிகள்