Blog Archive

Sunday, March 11, 2018

மாசி மாதமும் வடாம் பிழிதலும். 6

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
வடாத்துக் கூழ் மகிமை.
+++++++++++++++++++++++++++++++
எல்லோருக்கும் வற்றல் வடாம் பொரித்துச் சாப்பிடுவது எவ்வளவு பிடிக்குமோ அத்தனை
அந்தக் கூழும் பிடிக்கும்.

எங்கள் வீட்டில்  கூழ் கிளறும்போதே, சாப்பிட என்று தனியாக எடுத்து வைப்போம்.
சாயந்திர வேளை டிஃபனுக்கு உதவும்.

ஜவ்வரிசியைக் கிளறி முடித்த பெண்கள், வெந்த பதம் போதுமா என்று கேட்க,
அருகில் வந்து ,கூழின் வண்ணத்தைப் பார்த்தே சரி என்று சொன்னார் ஜயம்மா,.

அடுத்தாற்போல அரைக்க வேண்டியது புழுங்கலரிசி.
சௌபாக்யா க்ரைண்டர் இரண்டு வைத்திருந்தார் ஜயம்மா.
இரண்டு கிலோ அரிசியையும் தனிதனியாக அரைக்க,
செங்கமலம் வேதாவைக் கேட்டுக்கொண்டார்.
இருவருக்கும் கீது நல்ல மசாலா டீ போட்டுக் கொடுத்தார்.
அந்தப் பெண்களும் ஆற அமர உட்கார்ந்து டீயைக் குடித்தனர்.
அரை டஜன் வேஷ்டிகளோடு வந்து சேர்ந்தான் மாது.
பிள்ளைக்கும் டீ கொடுத்த கீது ,வேட்டி கிழியாமல் வந்திருக்கிறதா என்று சோதித்தாள்.

அடுத்த நாளுக்கான வேலைகள் பட்டியலிடப்பட்டன.
1, காலை நான்கு மணிக்கு எழுந்ததும்,
  ஏழெட்டு எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து,
பச்சை மிளகாய் அரைத்து,உப்பு,பெருங்காய ஜலத்துடன்
கலந்து ஜவ்வரிசிக் கூழுடன் கலக்கவேண்டும்.

2,சீனுவும் மாதுவும் தயாராக இருக்கும்
கூழ்களை எடுத்துக் கொண்டு மாடிக்குக் கொண்டுபோகவேண்டும்.

3,செங்கமலம் ,வேதா வந்ததும் அன்றைக்கான சாப்பாட்டு தயாரிப்பு வேலைகளில்
 இறங்க வேண்டும்.
4, சமையல் வேலை முடிந்ததும் மாடிக்கு வந்து மிச்ச வடாம் வகையறாவை பிழிந்து விட்டு
 நிழலில் உட்கார்ந்து  காவல் இருக்க வேண்டும்.
அங்கே சுற்றி மாமரங்கள் ,தென்னை இருப்பதால்
காகம்,அணில் தொந்தரவு நிறைய. கறுப்புத் துணிக்கோ, குடைக்கோ அவைகள் அஞ்சுவதில்லை.
5, பத்துமணி வாக்கில் ,ஜயம்மா,கீது இருவரும் லஸ் சர்ச் ரோடு வீட்டுக்குச் சென்றால்
வேலை முடிய மதியம் ஒரு மணி ஆகும்.
அந்த மாமி அழகாக இலை போட்டு சாதம் பரிமாறும் அழகை நினைத்தே ஜயம்மாவுக்கு
சந்தோஷமாக இருந்தது.
அவர்களிடமே சமையல்காரர்  இருந்தார்.
செய்து பரிமாறிவிட்டுப் போய்விடுவார்.

6, மதியம் வீடு திரும்பி சிரம பரிகாரம்.
மாடியிலிருந்து வேஷ்டிகள்,வற்றல் கனத்தோடு இருப்பதால் இருவர் இருவராகக்
கொண்டு வந்து  அலங்காமல் மடித்து வைக்க வேண்டும். அடுத்த நாள்
 குழம்பு வடாம் செய்ய வேண்டியதுதான்.
எழுதி விட்டு நிமிர்ந்த ஜயம்மா,சீனுவைப் பார்த்து, லஸ் வீட்டிலிருந்து
 ஓலைப் பாய்களை எடுத்து வரமுடியுமா என்றாள்.
ஒரு ஃபோன் இருந்தால் நானே மாமியைக் கேட்பேன்.
என்றதும், சீனு உடனே கிளம்பினார். அரைமணி நேரத்தில் சைக்கிள் ரிஷாவில் ஓலைப் பாய்கள்
வந்திறங்கின.  தொடரும்.


Add caption

12 comments:

ஸ்ரீராம். said...

திட்டமிட்ட வேலைகள்! பாதி காய்ந்த கூழ் வடாம் கூட டேஸ்ட்!

Geetha Sambasivam said...

அந்தக் காலத்தில் வடாம் போடுவதே அழகு! திட்டமிட்டுப் பட்டியல் போட்டுப் போடுவதெனில்! மிக நன்றாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

காத்திருக்கிறோம்.

கரந்தை ஜெயக்குமார் said...

தொடருங்கள் சகோதரியாரே

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
வியாபாரம் என்று வந்துவிட்டால்
லிஸ்ட் இல்லாமலியா. நான் வடாம் போட்ட காலத்தில் மாடிக்கு அடிக்கடி ஏறும் கால்கள் எட்டு.
சிங்கம் பர்மனெண்டா அங்க இருப்பார்.
கேட்டால் காக்காய் விரட்ட வந்தேன் என்பார்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா.
பழைய வீட்டில் மூன்று மாடி ஏறிப் போகணும்.
மாமியாரும் அவரது ஓர்ப்படிகளும் ஹம்மாடி அப்பாடின்னு ஏறுவதைப் பார்க்க
பாவமா இருக்கும்.

ஒரே ஒரு கோடையில் அங்கே இருந்தேன்.
மொத்த குடும்பத்திற்கே வருஷத்துக்கான
வடகம் போட்டாகிவிடும்.

டெல்லி,பாம்பேன்னு பறக்கும். எனக்கு எங்க பாட்டி போட்டுக் கொடுப்பார்.
பிறகு நானே போட ஆரம்பித்தேன். மீனாட்சி அம்மாள் தயவோடு.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி முனைவர் ஐயா. நேரம் எடுத்து இங்கு வந்து படிப்பது எனக்கு
பெருமையாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார், நீங்கள் எல்லாரும் எழுதுவது போல கருத்துடன் என்னால் எழுத
முடியவில்லை. அனுபவங்களே இங்கே எழுத்தாகின்றன.
வருகைக்கு மிக நன்றி.

Anuprem said...

படிக்க படிக்க ஆசையாய் இருக்கு மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா. நாமெல்லாம் எப்பவாவது ஒண்ணா
சேர்ந்தால் வடாம் போடலாம் மா.

Thulasidharan V Thillaiakathu said...

எங்கள் வீட்டில் கூழ் கிளறும்போதே, சாப்பிட என்று தனியாக எடுத்து வைப்போம்.
சாயந்திர வேளை டிஃபனுக்கு உதவும்.//

ஆஹா வல்லிம்மா இப்போதும் இதே கதைதான்...நான் எடுத்து வைத்துவிடுவேன் மாமியார் மைத்துனர் எங்களுக்கு என்று..

வடாம் வேலைகள் எல்லாம் மிகவும் நன்றாக நினைவு வைத்துக் கொண்டு எழுதுகின்றீர்களே இதற்கே சபாஷ்!!

ப்ளானிங்க் சூப்பர்...ஆமாம் வியாபாரம் இல்லையா...நல்ல அனுபவங்கள் தொடர்கிறோம்..

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
அனேகமாக நடை பெறும் வழக்கம் தான் என்று நினைக்கிறேன்.
கூழ் கிளறும்பொழுதே அட்வான்ஸ் புக்கிங்க் நடந்து விடும்.

அவர்களது வியாபாரம் நன்றாகவே நடக்கின்றது.
பலவித மாற்றங்கள் குடும்பத்தில். நல்ல படியாக நடந்தன.
நன்றி மா