Blog Archive

Saturday, January 20, 2018

எங்கள் ப்ளாகிற்கான பதிவு Engal Blog

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
// உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்டால் கேளுங்கள் – கேட்கமாட்டோம்னு சந்தேகம் இருக்குல்ல. அப்புறம் எதுக்கு அட்வைஸ்?//
எங்கள் ப்ளாக் அழைப்புக்கு நன்றி ஸ்ரீராம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதல் அட்வைஸ் எனக்குத்தான். ஏதாவது எழுதினால் சேமிக்கணும்.
இரண்டாவது யார் என்ன சொல்கிறார்கள் என்பதை
நன்றாக உள் வாங்கிக்கணும்.
இரண்டும் செய்யலைன்னால் கணினி பொறுப்பேற்காது.

என் பேச்சை நானே கேட்காமல் இருந்தால் இன்னோருத்தருக்கு புத்தி சொல்லத் தகுதி இருக்கான்னு
எப்படி சொல்கிறது. கஷ்டம் தான். 12 வருஷமா எழுதினேன் என்கிற
பெருமையில் அர்த்தமே இல்லை. //செய்வனத் திருந்தச் செய் மற்றவர்களுக்கு மட்டுமா.//
இல்லை நான் முதலில் என்னைச் சீர் செய்து கொள்கிறேன்.

என் கணினிக்குக் கேள்விக்குறி போட வராது. அது மட்டும் இல்ல,ஆச்சரியக் குறியும் வராது. இது ஜெர்மன் மடிக்கணினி. இமோஜின்னு ஒண்ணு இருக்கோ பிழைத்தேனோ.
அதுவும்  அர்த்தம் தெரியாமல் ஏதாவது இமோஜியைப் போட்டு
வாங்கிக் கட்டிக் கொள்வதும் உண்டு.
சரி இனி, சொல்ல வந்த சப்ஜெக்டுக்கு வரலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எங்கள் ப்ளாக் வாசகர்கள் வாசகிக்களுக்கு வணக்கம்.
என் 70 ஆவது வயது வரும் வரை அதாவது இன்னாள் வரை
புத்திமதிகள் கேட்டே வளர்ந்த காதுகள்.
பாதி வாங்கி,பாதி வெளியில் விடுவதே வழக்கம்.
Zone out ஆகாதே அம்மான்னு மகள் சொல்கிறாள்.
தாத்தா தான் நிறைய அறிவுரை சொல்வார். //கண்ணைப் பார்த்து பதில் சொல்லு
உண்மையைத் தவிர வேற வார்த்தை கிடையாது.
நேரத்தை வீணாக்காதே.// இதெல்லாம் என் பனிரெண்டு வயது வரை கேட்ட சொற்கள்.
ஆழமாகவே பதிந்து விட்டன.
நன்றி என் அருமை தாத்தா.
அடுத்தாற்போல்  அம்மாவும் அப்பாவும்.
 அம்மாவின் கை பதிந்த முதுகு. மகாலக்ஷ்மிக்கே கோபம் வரும் அளவு பயங்கர
துடுக்காக இருந்திருக்கிறேன்.பாவம் அம்மா.

அப்பா ஒரே மென்மை. அதைப் பார்த்து உலக ஆண்கள் அத்தனை பேரும்
அப்பா மாதிரியே இருப்பார்கள் என்று நம்ப வைத்தவர்.
அதிராமல் வார்த்தைகள் சொல்லி வாரத்துக்கு ஒரு முறையாவது
எங்களை உட்கார வைத்து நல் வார்த்தைகள்,கதைகள் சொல்வார்.
குழந்தைகளிடம் அதீத அன்பு வைத்தவர்க்கு
எப்பொழுதும் அவர்கள் தன் பாதுகாப்பிலேயே இருப்பார்கள்
என்கிற நினைப்போ ...தெரியவில்லை.
என் பேரில் போட்ட வைப்பு நிதிகளில் என் பெயர்  நாராயணன் ரேவதி நரசிம்ஹன்
என்றே இருக்கும்.
என்னப்பா LIC policy மாதிரி இரண்டு பக்கமும் பாதுகாப்பா என்று கேட்பேன்.
நீ கையெழுத்துப் போடு .மிச்சதை நான் பார்த்துக் கொள்கிறேன்
என்று வாங்கிப் போவார்.என் அருமை அப்பாவால் எங்கள் வாழ்வு உயர்ந்தது.

பின் என் கணவர்,
புத்திமதி சொல்வதில் அவருக்கு நம்பிக்கை கிடையாது.
சுதந்திரமாகச் சிந்திக்கத் தெரியணும். வரும் கஷ்டம்,லாபம் எல்லாத்துக்கும் பொறுப்பேற்கணும்
என்பதில் தீவிர நம்பிக்கை.
தன் தந்தையிடம் வாங்கிய அடிகள் பற்றிச் சொல்லும்போது என் தொண்டை
அடைத்துக் கொள்ளும்.
 அந்த 16 வயதுப் பையனை அணைத்துத் தேற்றவேண்டும் என்கிற உணர்வே மேலிடும்.
மாமியார் எதிர்மறை. அவர் மிரட்டியது என் மக்களைத்தான்.
மகன் மேல் கண்மூடிப் பாசம். ஆம்புலன்சில் படுத்த நிலையிலும்
சொன்ன கடைசி வார்த்தைகள்// சிம்மு நன்றாக இருடா. போயிட்டு வரேன்// என்பதுதான்.

அம்மா இறப்பதற்கு முதல் நாள் சொன்ன வார்த்தை,// யாருக்கும்
அட்வைஸ் பண்ணாதே. பிரயோசனம் கிடையாது. உன்னைப் பார்த்துக் கொள்.//

எங்கள் குழந்தைகளுக்கும் நாங்கள் புத்திமதி என்று சொன்னதில்லை.
 தன் முயற்சியில் வளர்ந்தார்கள். தந்தையின் உதவி, தாயின் உதவி என்றும் உண்டு.
எங்கள் இருவருக்கும் அவர்களது முடிவெடுக்கும் தன்மையில் அசாத்திய நம்பிக்கை உண்டு.
கடவுளும் அவர்கள் பக்கம் இருக்கிறார்.
 அவ்வப்பொழுது  நான் அவர்களது சொல் கட்டுப்பாட்டுக்கு வரும் நிலைமை வரும்.
இதமாக எடுத்துச் சொல்வார்கள். நானும் அந்த நேரம் ,கண் ஒரு பக்கம், நெஞ்சொரு
பக்கம் கேட்டுக் கொள்வேன்.
எனக்கும் என் உறுதிப்பாடுகள் தீர்மானங்கள் உண்டல்லவா.

பேரன்,பேத்திகளுக்கு புத்திமதி அவ்வப் பொழுது வாட்ஸ் ஆப்பில்
சொல்வது சேமிப்பைப் பற்றித்தான். அவசியம் இல்லாமல்

செலவழிக்காதே. கவனம் தேவை.
கைகளில் எப்பொழுதும் பணம் இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.
 ஒரு பகுதியை எடுத்து வைத்துவிடு. அந்தப் பணத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை
என்று நினைத்துக்கொள்.// என்பதுதான்.
தாத்தா சேமிக்கும் வழிகள் எல்லாம் சொல்வேன்.
 காதுகளில் வாங்கிக் கொண்டால் சரி.
என் பிரார்த்தனைகளும் அதுவே.
 அன்பு ஸ்ரீராம், இந்தப் பதிவையாவது ஒழுங்காக வெளியிடுகிறேன்.
நஷ்டங்களைப் பற்றிக் கவலைப் படாமல் லாபங்களை நோக்கி நடை போடலாம்.
வாழ்க வளமுடன்.

My dearest younger brother always  full of advises  forme. Rangappa. I miss you.

APPA
Singam
MuraLi  my Brother
Baby girl
Thambiyum makanum.
  என் ஆசான்கள் ,
பாட்டியும்,அம்மாவும் நானும்.
என் அன்பு மாமாக்கள்.

26 comments:

நெல்லைத் தமிழன் said...

உடனேயே எழுதிட்டீங்க வல்லி சிம்ஹன் அம்மா. நானும் உடனே படித்து கருத்திடறேன்.

படிக்க சுவாரசியமா எழுதியிருக்கீங்க. வாழ்க்கைல சிலருக்கு அப்பா, ஹஸ்பண்ட், பிள்ளைகள்ட அட்வைஸ் கேட்டுக்கொள்ளும்படி ஆகிடறது. சிலர் தங்கள் அப்பாவின் அதீத அட்வைஸால், தங்களுக்கு எப்படி இருந்திருக்கவேண்டுமோ அதேபோல பிள்ளைகளை, ரொம்ப அட்வைஸுன்னு டார்ச்சர் செய்யாம வளர்த்துடறாங்க. ஒருவேளை, பெற்றோர், இவன் தன்னாலயே வளருவான், இவனுக்கு அப்போ அப்போ அட்வைஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு தீர்மானிச்சிடறாங்களோ?

நெல்லைத் தமிழன் said...

இன்னொண்ண, படங்களின் கீழ், யார் யாருன்னு போட்டிருக்கலாம். சிலரைக் கண்டுபிடிக்க முடியலை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன், மிக நன்றி மா. நான் எழுதி இரண்டு நாட்கள் ஆச்சு. அதை சரியாக ஸ்ரீராமுக்கு அனுப்பலை. அந்தப் பதிவைக் காணொம்.
இது இரண்டாவது பதிவு.ஹாஹா.
இந்த நிலைமையில் நான் என்னத்த சொல்லி யாருக்கு அட்வைஸ்
செய்யறது.

சிறிய வயதிலிருந்து பெரியவர்களின் கட்டுப்பாட்டில் வளர்ந்த குழந்தைகளுக்கு நாங்கள் சுதந்திரம் கொடுத்தோம்.
அவர்களும்சமாளித்தார்கள்.
அவர்களுக்கு யார் மேலும் வருத்தம் கிடையாது.

எனக்கு புத்திமதி கேட்டுப் பழகிவிட்டது. அவ்வளவுதான். ஒன்றும் குறையில்லை.
நான் உண்டு பகவான் உண்டு. அவர் நடத்திப் போகட்டும் ராஜா. சொன்ன மாதிரி
படங்களுக்குப் பெயர் கொடுத்து விட்டேன்.

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப அருமையாக எழுதியிருக்கீங்க அம்மா...

Angel said...

வாவ்வ் !! சூப்பர்ப் வல்லிம்மா அழகா இனிமையா உங்களைப்போலவே எழுதியிருக்கீங்க ..
/அப்பா ஒரே மென்மை. அதைப் பார்த்து உலக ஆண்கள் அத்தனை பேரும்
அப்பா மாதிரியே இருப்பார்கள் என்று நம்ப வைத்தவர்//

எல்லா பொண்ணுங்களுக்கும் அப்பா தானே வல்லிம்மா முதல் ஹீரோ .நானும் அப்படிதான் நினைச்சேன் .
அதே போல் என் கணவர் மாதிரிதான் எல்லா ஆண்களும்னு இப்போ நினைச்சிட்டிருக்கேன் :) சில நேரம் சிலவற்ற்றை கேள்விப்பட்டாலோ படித்தாலோ மனசுக்கு ஏமாற்றமாயிடும் .அநேகமா நாம் இன்னும் ஸ்நோஒயிட் சிண்ட்ரெல்லா ஜெனரேஷன்லயே இருக்கிறோமோன்னு தோணுது :) அதில் தனே fairy tale ஹாப்பி எண்டிங்ஸ் :)


Angel said...

படங்களில் ரொம்ப பிடிச்சது நீங்க அம்மா பாட்டி ..த்ரீ ஏஞ்சல்ஸ் உரையாடும் படம் ..அதை தனியா பிரிண்ட் எடுத்து வைங்கம்மா .இந்த மாதிரி அந்நியோன்யமான loving அன்பு மலரும் படம் கிடைப்பது அரிது

வல்லிசிம்ஹன் said...

அன்பு பரிவை குமார்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
நீங்கள் தான் இந்தத் தொடரை ஆரம்பித்தீர்களா.

நான் அதிகம் எங்கயும் போய்ப் படிக்காததால் தெரியவில்லை.
நன்றி கண்ணா.
ஆமாம் இன்னும் Fairy Tales காலத்தில்தான் இருக்கிறோம்.
எல்லோரையும் நம்பிக்கொண்டு.
பரவாயில்லை. நம்பினார் கெடுவதில்லை என்று தானே வேதம்
சொல்கிறது. மீண்டும் வருகிறேன்.

ஸ்ரீராம். said...

எங்கள் பிளாக் என்றே சொல்லி விட்டீர்கள்! உங்கள் அன்புக்கு நன்றி..இது மதுரைத்தமிழன் தொடங்கி வைத்த தொடர்பதிவு. நானும் உங்களை தொடர அழைத்திருந்தேன், நெல்லைத்தமிழனும் தொடர அழைத்திருக்கிறார்!

ஸ்ரீராம். said...

"கண்ணைப்பார்த்து பேசு" - நல்ல அறிவுரை. பொய் சொல்வது கஷ்டம். தடுமாறுவதில் கண்டுபிடித்து விடலாம். என் அப்பாவும் சொல்வார்.

ஸ்ரீராம். said...

பெண் குழந்தைகளிடம் அப்பாக்களுக்கு எப்போதுமே ஒட்டுதல், பாசம் ஜாஸ்தி. ஒரு தந்தையாக எனக்கு வாய்க்காத அதிருஷ்டம்!

ஸ்ரீராம். said...

//அந்த 16 வயதுப் பையனை அணைத்துத் தேற்றவேண்டும் என்கிற உணர்வே மேலிடும்.//

ஆ....! 16 வயதா?!! அப்போ திருமணத்தின்போது உங்கள் வயது?

ஸ்ரீராம். said...

சேமிப்பு பற்றிய அட்வைஸ் முக்கியமானது. எல்லாமே நல்லா இருந்தது வல்லிம்மா. ரசிக்கும்படி இருந்தது. பெரியவர்கள் அனுபவங்கள் செல்லும்போதுதான் சுவாரஸ்யம் வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு ஏஞ்சல்,
என்னைப் பார்த்ததும் பூரித்துப் போவார்கள் இருவரும்.

அப்பா,தம்பிகளும் தான். கைகளைப் பிடித்துக் கொண்டு விட மாட்டார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன் அழைப்புக்கு மிக மிக நன்றி. இன்னும் எழுதி இருக்கலாம்.
எங்கள்
குழந்தைகளைக் கடியும் போது நானும் மிக வருந்தி இருக்கிறேன்.
அப்போது பேச முடியாத நிலை.
இப்பொழுது அந்தத் தவறை நான் செய்யக் கூடாது.

வல்லிசிம்ஹன் said...

இத்தனை தமிழர்கள் ஆரம்பித்த தொடரா இது.
நன்றி ஸ்ரீராம். நான் உங்கள் ப்ளாகில் பார்த்ததும் இது அங்கு ஆரம்பித்தது என்று நினைத்துவிட்டேன் அப்பா.
சிங்கம் 14 ,15 வயதில் வாங்கின அடிகளைப் பற்றித் திருமணத்துக்குப் பிறகு எங்கள் உரையாடலில் அறிந்து கொண்டேன். அப்பொழுது வந்த உணர்வு. மற்றவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமே ஹய்யோ ஸாமீ.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம், தாத்தா அருமைக்கு அருமை. கண்டிப்புக்கு கண்டிப்பு.
சொன்ன பேச்சைக் கேட்டு விட்டால் அத்தனை சந்தோஷம் வரும் அவருக்கு.

பாட்டி கேலி பேசியே என்னை வழிக்குக் கொண்டு வருவார்.

மீண்டும் உங்களுக்கு நன்றி.

காமாட்சி said...

அருமை வல்லிம்மா. எல்லோரும் நல்ல முறையிலேயே எதையும் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். அழகுற எழுதியிருக்கிறீர்களே! அதுவும் அழகோ அழகு. கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும் போல ஒரு நிஜ கட்டுரை. நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்று வளர்ந்திருக்கிறீர்கள். படங்களெல்லாம் கட்டுரைக்குப் பக்க பலமாக அமைந்திருக்கிறது. எல்லோரும் எனக்குத் தெரிந்தவர்கள் போன்றஒரு உணர்வு. மிகவும்ரஸித்தும்,உணர்ந்தும் படித்தேன். மிக்க நன்றி. அன்புடன்

KILLERGEE Devakottai said...

///புத்திமதி சொல்வதில் அவருக்கு நம்பிக்கை கிடையாது.
சுதந்திரமாகச் சிந்திக்கத் தெரியணும். வரும் கஷ்டம்,லாபம் எல்லாத்துக்கும் பொறுப்பேற்கணும்///

அருமை அம்மா எனக்கு இந்த வார்த்தை மிகவும் பிடித்து இருக்கிறது வாழ்வியல் உண்மை இதில் அடங்கி விட்டது.

பகிர்வுக்கு நன்றி - கில்லர்ஜி

Geetha Sambasivam said...

மிக அருமையாக எழுதி இருக்கீங்க ரேவதி! என்னையும் ஏஞ்சலின் எப்போவோ அழைச்சாச்சு! அதுக்கப்புறமா ஶ்ரீராமும் அழைச்சிருக்கார். ஆனால் இன்னும் எழுதணும்னு தோணலை! பார்க்கலாம். ஒவ்வொருவர் அனுபவங்களும் வேறுபடும் இல்லையா! அவரவர் அனுபவங்களைத் தானே சொல்ல முடியும்! நம்முடைய அனுபவங்களைப் பிறருடையது போல் எப்படிச் சொல்லுவது? அதான் ஒரே குழப்பம்! பார்க்கலாம்! :))))) இப்போதைக்கு எழுதப் போவது இல்லை! வேறே விஷயங்கள் இருக்கின்றன!

வல்லிசிம்ஹன் said...

அன்பு காமாட்சி மா.
உங்கள் கைகளுக்கு வணக்கம். இத்தனை அன்பு வார்த்தைகளைக் கேட்டு வளர்ந்த
விதம் தான் என்னை உங்களை மாதிரி சத்சங்கத்துடன் இணைக்கிறது.

18 வயது வரை உரம் போட்டவர்கள் எங்கள் குடும்பத்தினர்.
பிறகு வேண்டும்கிற அளவு பட்டாச்சு.
வனவாசத்திலிருந்து வெளிவர 23 ஆண்டுகள் ஆச்சு.
ஒன்றும் தப்பில்லை. மனுஷர்களைச் செதுக்குவது அனுபவங்கள் தானே.
கணவரின் உறுதித்துணை என்னை வழி நடத்தியது.
அவர்தான் குழந்தைகள் மேல் படிப்பில் அத்தனை கரிசனம் காட்டி உழைத்தார்.

என்றென்றூம் கடமைப் பட்டிருக்கிறேன். ஏனெனில்
வெளியில் சென்று எதையும் சாதிக்க எனக்கு
வழி தெரியாது.
ஒருவாறு ஒரு பகுதி நேர வேலை எடுத்துக் கொண்டு ஊர் உலகம் பார்த்தேன்.
இப்பொழுது வலையுலகம் வழியாக உங்களை அறிகிறேன்.
எல்லாம் இறைவன் செய்த கருணை. நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கில்லர் ஜி. வாழ்க வளமுடன்.
குழந்தைகள் சுதந்திரத்தில் குறுக்கிடுவதில் எங்கள் இருவருக்கும் ஆவல் கிடையாது. இறைவன் அவர்களுக்கு நிறைய சோதித்தாலும் மீண்டு வந்தார்கள். நல்ல நிலைமையில் அவன் வைத்திருக்கிறான். என்றும் அனைவரும் நன்றாக இருக்கணும்.
குடும்பத்துக்கும் உங்களுக்கும் ஆசிகள் அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
விதமான வாழ்க்கை. நீங்கள் இளவயதில் அம்மாவின் உடல் நிலையால் சிரமப்பட்டது தெரியும்.
நேரம் வரும்போது மனதில் எழுத வேணும்னு தோணினால் எழுதினால் போறுமே.
நீங்கள் எழுதாத சப்ஜெக்டே கிடையாதே.
நன்றாக இருங்கோ மா.

Anuprem said...

அழகிய படங்களுடன்...


ரொம்ப அருமையாய் எழுதி இருக்கீங்க மா...நன்றி

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: நல்ல கருத்துகள் அடங்கிய பதிவு அம்மா. சேமிப்பு பற்றிச் சொல்லியது ஆமாம்...இக்காலக் குழந்தைகளுக்கு அது தெரிவதில்லை...நாம் சொன்னாலும் பிடிப்பதில்லை...(கீதா: நல்ல காலம் என் மகன் சேமிப்பு பற்றிச் சொன்னால் கேட்டுக் கொள்வான்...அனுபவம் காரணம்...)

கீதா: நான் என் மகனுக்குச் சொன்னது "கண்ணைப் பார்த்துப் பேசு! " என்று நான் யாராகிலும் அவர்களது முகத்தைக் கண்ணைப் பார்த்துத்தான் பேசுவது வழக்கம். அது பல விஷயங்களைக் காட்டும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்களே!

அப்புறம் உங்களைப் போலவே...அதுவும் அர்த்தம் தெரியாமல் ஏதாவது இமோஜியைப் போட்டு....ஹா ஹா ஹா ஹா...எனக்குப் பல இமோஜிஸ் அர்த்தம் தெரியாது. எனக்குத் தெரிந்தவை சிரிக்கும் இமோஜிஸ்....அப்புறம் யோசிப்பது போல்...முறைப்பது போல்...எனக்குச் சிரிக்கும் இமோஜிஸ் தான் பிடிக்கும்..ஹா ஹா ஹா...எனக்குச் சிரித்துக் கொண்டே இருக்கணும்...

நல்ல விஷயங்கள் பல சொல்லிருக்கீங்கமா...படங்கள் அனைத்தும் அழகு! அதிலும் நீங்க மூணுபேரும் இருக்கறது ரொம்ப க்யூட்!!! மூன்று தலைமுறை!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுராதா.
தாமதமாகப் பதில் சொல்வதற்கு மன்னிக்கணும்.
நினைவுகளில் சுகம் காணும் காலம் இது.அம்மா.