Blog Archive

Saturday, January 27, 2018

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடையுடுத்தி

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 அவளுக்குப் பிஞ்சில் பழுத்தாளென்றே பெயர்.
அத்தனை ஞானமும் உள்வாங்கியே செய்த அவதாரம்.

எங்கள் பெரிய பாட்டி முதல் மகவு ஈன்றபோது அவளுக்குப் பதின்மூன்று
வயதே ஆகி இருந்தது.
இது இருபதாம் நூற்றாண்டுக் கதை.

நாச்சியார் அவதாரமோ,பக்தி இலக்கியம் ததும்பித் திளைத்த
ஏழாம் நூற்றாண்டு.

அப்போதெல்லாம் எந்த வகையான உடை நாகரீகம் என்று எனக்குத் தெரியாது.
என் பிறந்தகப் கொள்ளுப் பாட்டிகள் ரவிக்கை கூட அணிந்ததில்லை. என் அம்மாவின் அம்மா
வெள்ளை ரவிக்கை அணிவார்.

ஆங்கில நாகரீகம் உள்ளே புகுந்தபோது,
இந்த வெளிப்படைப் பேச்சு, வெளிப்படைக் கலாச்சாரம் எல்லாம் அருவருப்பாகத்
தெரிந்திருக்கவேண்டும்.
அவர்கள் குளிருக்கு உடை போர்த்து மூடிய வழக்கம்.
கோடை காலத்தில் வேறு உடையாக இருந்திருக்கலாம்.

வெறுங்காலோடு நடப்பதே அனாகரீகம் என்று சொல்பவர்கள்.
அந்தக் காலத்தில்
நம்மூர் எளிய மக்களுக்குச் செருப்பு பற்றித் தெரிந்திருக்கவே
நியாயம் இல்லை.

நம் கோதை சொன்ன நாச்சியார் திருமொழி
அவளுக்கு முன் வந்த ஆழ்வார்கள்
உரைத்த நாயிகா  நாயக bhaவத்தில் அமைந்தே திகழ்கின்றது..

சொல்ல  வேண்டும் என்று தோன்றியது.
இது என் கண்மூடித்தனமான பக்தியாகவும் இருக்கலாம்.
டிஎன் ஏ உலக முழுவதும் பதிந்து வரும் செய்திகள் பற்றி நேற்றுப் படித்தேன்.
அது போல கோதை நாச்சியார் அவதாரமும்
திருமாலுடன் இணையும் டி என் ஏ கொண்டதாக இருக்க வேண்டும்.
ஆண்டாள் போற்றி. அவள் திரு நாமம் வாழி.

19 comments:

Avargal Unmaigal said...

//ஆங்கில நாகரீகம் உள்ளே புகுந்தபோது,
இந்த வெளிப்படைப் பேச்சு, வெளிப்படைக் கலாச்சாரம் எல்லாம் அருவருப்பாகத்
தெரிந்திருக்கவேண்டும்.//

உண்மைதான்

Geetha Sambasivam said...

நல்ல பதிவு. உள்ளத்திலிருந்து வந்திருக்கு!

ஸ்ரீராம். said...

இருக்கலாம் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.
அந்தக் காலத்தில் , நாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த போது,
அது கிராமம் என்று சொல்ல முடியாத பழமையில் ஊறிய நகரம்.
ஒவ்வொரு வீட்டிலும் ஆண்டாள் அவர்கள் வீட்டுப் பெண்ணாகவே
கருதப் பட்டு உருகி உருகி வழிபடுவார்கள்.
15 வயதுப் பெண்ணுக்கு எப்படி நாச்சியார் திருமொழி எழுதும்
தீவிரம் வந்தது என்கிறார்கள்.
இப்பொழுது சினிமாக்களில் வேறென்ன காட்டுகிறார்கள் . 1980இல் வந்த
அலைகள் ஓய்வதில்லைக் கதா நாயகனும் நாயகியும் பதின்ம வயதுக்காரர்கள் தான்.
அப்போதிலிருந்து அதற்கு முன்பிருந்தே

காதல் சிறிய வயதிலேயே மலர்வதாக மாய பஜார் படத்தில் வரவில்லையா.
கண்ணனைக் கண்வனாக வரித்தாள்.
அவனுக்காகத் தன் பாவையை அர்ப்பணித்தாள். கனவு கண்டாள்.

இதில் எந்தத் தப்பும் இருப்பதாக யாரும் இது வரை சொன்னதில்லை.
யாருக்கும் தோன்றவில்லை.
இன்று ஒரு பதிவு கண்ணில் பட்டது.
அதற்காகத்தான் பதிலாக இந்த எழுத்துக்களைச் சமர்ப்பிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

புரியாமல் பேசுகிறார்களே என்று தோன்றுகிறது கீதா மா.
இதுவே உயிருள்ள ஒருவரைப் பற்றிப் பேசமுடியுமா.
ஆனால் தெய்வங்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிந்திக்காமல் பேசுவோரைப் பற்றி நினைக்கவேண்டாம்.

Anuprem said...

ஆண்டாள் பற்றி அறியாமல் உணராமல் பேசுகிறார்கள்....


நம் ஆண்டாள் அவர்களுக்கும் நல்வழி காட்டுவாள்...


ஆண்டாள் போற்றி..... அவள் திருநாமம் போற்றி...

நெல்லைத் தமிழன் said...

என்ன அருமையான பாடலைத் தலைப்பாக வைத்திருக்கிறீர்கள். சீர்காழி குரலில் எப்போதும் எனக்குப் பிடித்த எவர்கிரீன் பாடல் அது. சிறிய வயதில் நிறைய முறை அந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பேன். இப்போதும் எப்பவாவது தனிமை உணர்வு வரும்போது நான் பாடும் பாடல் அது.

'காதல் உணர்வு' என்பது இரு காதலர்களுக்கு இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் வெளி ஆட்களால் அதனைப் புரிந்துகொள்ள இயலாது. நம் வீட்டுப் பெண் அப்படி ஒரு உணர்வை வெளிப்படுத்தும்போது, நமக்கு இயல்பாக எப்படி interpret செய்யத் தோன்றும்? சாதாரண மனிதர்கள் நாமே நம் தலைமுறையின் உணர்வைப் புரிந்துகொள்ள இயலாது. அப்படிப்பட்ட சாதாரண மனிதர்கள், தெய்வீகக் காதலை, மேன்மையான உணர்வைக் கொண்ட, இறைவன்மீது பக்தி செலுத்தும் காதலைப் புரிந்துகொள்வது எங்கனம்? இஸ்லாமியர்களில் சூஃபி வழி வருபவர்களும் இறைவன்மீது, 'நாயக நாயகி' பாவத்தோடுதான் வழிபாடு செய்வார்கள்.

அதுவும் 'காதல் கொண்டு மணந்த மனைவி'யையே விலக்கி வாழ்ந்துகொண்டிருப்பவருக்கு, 'காதல்' என்பதன் அர்த்தமாவது தெரியுமா என்பது கேள்விக்குறி. இப்போது தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பது அரசியல். அதைப் பற்றிப் பேசுவது வீண் வேலை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். ஐயா. திரு ஜம்புலிங்கம்.
வாய் புளித்ததோ நாக்குப் புளித்ததோ
என்று அக்னி போன்ற வார்த்தைகளை
அந்தத் தெய்வத்தின் மேல் அர்ச்சிக்கக் கூடாது.
எழுதியவர் மிக உயர் மட்டப் பெண் எழுத்தாளர்.
இதையும் கடந்துவிடலாம்.நன்றி ஐய்யா.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நேர்மையான கருத்து.
அந்தப் பெண் எழுத்தாளருக்கு
இந்த உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை.
இது ஒரு அதீதமான ,தாகம். கண்ணனுடன் கலந்துவிட
எண்ணிய வேகம்.
எனக்குப் புரிந்ததெல்லாம் அந்த ஏழாம் நூற்றாண்டில்
இது சகஜமாக இருந்திருக்க வேண்டும்.
பகவத் இராமானுஜரே
கோதையால் அண்ணா என்று அழைக்கப் பட்டிருக்கிறார்.
நானோ, அந்த் எழுத்தாளரோ , கோதையை ஆதரித்து
எதிர்த்துப் பேசுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை.
அரங்கனால் அங்கீகரிக்கப் பட்ட பெண். இதற்கு மேல் என்ன இருக்கிறது சொல்ல.
நன்றி மா. நெல்லைத்தமிழன்.

Angel said...

ஹ்ம்ம் லேட்டாத்தான் புரிஞ்சது ..நான் முகப்புத்தகத்தில் இல்லை .அங்கிங்கென செய்தியில் தலைப்பை மட்டும் பார்ப்பதோடு சரி .
இதெல்லாம் பார்க்கவே பார்க்காதீங்கம்மா மனசுக்கு தான் அப்செட் ஆகும் .

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
இப்போது நம்மிடையே இல்லாதவர்களைப் பற்றி அவதூறு பேசுவது, அதுவும் தெய்வமாக ஆனவர்களை விமர்சிப்பது நாகரீகத்தின் எல்லயைக் கடக்கிறது.

என்னுடைய செய்திதொகுப்பிலிருந்து எடுத்துவிட்டேன்.
இனி இது போல செய்திகளைப் படிக்காமல் இருக்க வேண்டியதுதான்.
நன்றி கண்ணா.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா இதெல்லாம் மனப்பக்குவப்படாதவர்களின் பேச்சு. அறிவிலிகள் என்றே எனக்குத் தோன்றும். வெளியில் நடக்கும் வார்த்தைகள் தடித்து அடித்துக் கொள்கிறார்களே அவர்களைச் சொல்லுகிறேன். விடுங்கள். ஆண்டாளின் தமிழ் அருமையான தமிழ் அதை விட்டு இங்கு அநாகரீகமான தமிழ்ச் சொற்களால் இவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது. அத்தமிழைக் கற்க இவர்கள் முயலவில்லை...இப்படி அநாகரீகமாக அடித்துக் கொள்வது முட்டாள்தனம். இவர்கள் சொல்லுவதால் ஆண்டாளின் தமிழோ தெய்வீகப் பக்தியோ ஒன்றும் பாதிக்கப்படப் போவதில்லை. அது எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும். ஆண்டாளை அப்படிச் சொல்பவர்களின் நதிமூலம் ரிஷி மூலம் ஆராய்ந்தால்?!!!!! அவர்களை விடுங்கள் நம் நதி மூலம் ரிஷி மூலத்தை ஆராய்ந்தாலும் எல்லாம் முடியப் போவது ஒரே புள்ளிதான்...ஆண்டாளின் பாடல்களை, தமிழை ரசிப்பதை விட்டு என்னென்னவோ பேசி அலைகிறார்கள். பக்தியை விடுங்கள்..அது நம்பிக்கை...மொழி? அந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பெண்ணின் தமிழ்மொழி ஆளுமை!! ஆட்சி?!! எப்பேற்பட்டது!! அதை ரசிப்பதை விட்டு..ம்ம்ம் இவர்கள் எல்லாம் தமிழ் பற்றுடையவர்கள்....தமிழ் மீது காதல் என்பார்கள். தமிழ் கற்றவர்கள் என்பார்கள்... இதை எல்லாம் கண்டு கொள்ளாது கடந்து செல்ல வேண்டும்...வல்லிம்மா..

கீதா

Bhanumathy Venkateswaran said...

எல்லாவற்றையும் எல்லோருக்கும் புரிய வைக்க முடியாது. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுபவர்களின் பேச்சு மனதை கஷடப்படுத்தத்தான் செய்கிறது. ஹ்ம்ம்!

வல்லிசிம்ஹன் said...

பிரபலமாக இருந்த பெண் எழுத்தாளர், ஒரு விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு
இது போல எழுதிவிட்டாரோ என்று தோன்றுகிறது
துளசிதரன், கீதா.

அவர் எடுத்துக் கொண்ட சப்ஜெக்ட் சரியில்லை.
கோதை நாச்சியார்க்குப் பரிந்து பேசுவது போல்
மற்றவர்கள் கண்டபடி ஏசிக்கொள்வதையும்
மத வேஷம் பூண்டு தகாத வார்த்தைகள் சொல்வதும் அந்தப் புனிதத்திற்கே
தீங்கு இல்லையா.
மிகுந்த புரிதலோடு பதில் எழுதி இருக்கிறீர்கள்.
நன்றியும் வாழ்த்துகளும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமதி வெங்கடேஸ்வரன்,
இப்பொழுது இலக்கியம் என்று வரும் சில எழுத்துகளில் காதலுக்குப் பதில் காமம் இருக்கிறது.
மனவிகாரப் பட்டுப் போன பிறகு யாரைக் குறிவைக்கலாம் என்று தேடுகிறார்களோ.
அவரவர் நதி மூலம்,ரிஷி மூலம் கேட்க ஆரம்பித்தால் காணாமல் போய்விடுவார்கள். போகட்டும். ஆண்டாள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுராதா ப்ரேம் குமார், மிக நன்றி.
உண்மைதான், கடவுளைரைக் காக்க நாம் யார்.

ஜீவி said...

//நாயக bhaவத்தில் அமைந்தே திகழ்கின்றது..//

'bha'த்தில் ரசித்தேன். பாவத்தில் 'பா'வை மட்டும் கொட்டை எழுத்தில் போட வேண்டுமானால் HTML tag என்று அவ்வளவு தெளிவாக வருவதில்லை.