Blog Archive

Wednesday, January 03, 2018

படித்ததில் பிடித்தது

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Whatsapp  passing to Blog.
எனக்கு நடந்தது நாளைக்கு உங்களுக்கு நடக்கலாம். உங்கள் ஓர்ப் படி, நாத்தனார், மச்சினீ ஆத்தில் நடக்கலாம்.

2கப் திருவாதிரை களி, 3கப் கூட்டு சாப்டுட்டு நல்ல தூக்கம். மூணு மணிக்கு எழுந்து காபி போடிகிறென்னு போய்டு இங்கெ உடனெ வாங்கொனு ஒரு குரல். அடிச்சு பிடுச்சு போய் பார்ர்தால் காபி பில்டரை பிரிக்க முடியலெ. தொடவும் முடியலெ. ஓரெ சூடு.

ஆளாளுக்கு மாத்தி மாத்தி டிரை பண்ணினால் ஒண்ணும் நடக்கலை. எனக்கோ ஒரு பக்கம் வீட்டை விட்டு ஒடிடலாம்னு தோன்றது. காபி கிடைக்காதது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் இதை கூட எடுக்க முடியாத ஜன்மம்னு ரெண்டு நாளைக்கு பெசுவா. கிடுக்கி, கட்டிங்க் ப்ளெயர், எல்லாம் ட்ர்ய் பண்ணி பார்த்தாச்சு. பேசாமல் டீ குடிக்கலாமா அப்பிடின்னு கேட்டதற்க்கு ஒரு லூக் விட்டா, அதை நீங்க பார்த்திருக்கணும்.

நடந்ததை னேரில் பார்திருந்தா ஒரு violent நலங்கு மாதிரி இருந்திருக்கும். பட்டு பாய் விரித்து யெல்லாரும் சுத்தி உட்கார்ந்து பார்காதது தான் மிச்சம்.

Sometimes she is gripping the bottom portion with a cloth while I use a cutting-player to pull the top, then we reverse roles and I do the holding and she pulled. We even tried she sitting on floor and me standing and pulling. She got up holding the filter but the top and bottom never separated.

எங்களை போலவே அப்புடி ஒரு attachment பாருங்கோ!

போட்ட டிகாக்ஷன் சிதர கூடாது, ஃபில்டரும் உடைய கூடாது. காய்சின பாலும் ஆறிண்டு இருக்கு, லேசா தலை வலிக்ற மாதிரியும் இருக்கு.

We decided to put a hard stop to Nalangu games.
By now all decoction has collected at the bottom. We spooned out the wet coffee powder from the top of the filter into another container. 

அப்பிடியே சாய்து பிடித்தால் சூபெர் டிகாக்ஷன் சின்ன சின்ன துவாரம் வழியா கிடைத்தது. நிம்மதியா காபி குடிச்சாச்சு.

For some strange reason, this coffee tasted devine.
காலியான ஃபில்டெர் கூல் ஆன உடனெ ஈசியா பிரிஞ்சு வந்துடுத்து.

14 comments:

Avargal Unmaigal said...


காபியும் காபி பவுடருமாக சேர்ந்து இருந்ததை தனித்தனியாக பிரித்துவிட்டீர்களே..... நல்லா கவனிச்சீங்களா காபியும் பவுடருமாக சேர்ந்து இருந்த போது எளிதில் பிரிக்க முடியவில்லை . ஆனால் காபிபவுடரை தனியாக பிரித்தவுடன் அதை மிக எளிதாக பிரிக்க முடிந்தது..... இது போலதான் மனித வாழ்விலும் சேர்ந்து இருந்தால் எளிதில் பிரிக்க முடியாது

நெல்லைத் தமிழன் said...

இது ஒரு பெண் பதிவருடைய (நான் முன்பு அவர் தளத்தில் படித்த Flow) எழுத்து மாதிரி தெரியுது. அப்படியா?

ஸ்ரீராம். said...

நல்ல அனுபவம், பாடம். ஆனால் அப்படிக் கூட பிரிக்க முடியாமல் போகுமா? ஏனோ?

வல்லிசிம்ஹன் said...

நான் படித்தது whats app la vanthathu.
யாருடைய எழுத்துனு பிடிபடலை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கோ.
அன்பு நெல்லைத்தமிழன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்., எனக்கே ஆகி இருக்கிறது.
ஹஹா.

வல்லிசிம்ஹன் said...

வாழ்க்கைத் தத்துவமே அதுதான் துரை.
கெட்டியாகக் கலந்துவிட்டால் பிரிவது ஏது.

வெங்கட் நாகராஜ் said...

நீங்கள் ரசித்ததை நானும் ரசித்தேன்மா....

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: வீட்டில் காஃபி அனுபவம் இல்லையே இங்கு சாயா...காஃபி கூட ஃபில்டர் வைத்துப் போடுவதில்லை எங்கள் வீட்டில். சூடு தண்ணீரில் போட்டுக் கொதிக்கவிட்டு வடிகட்டித்தான்...சென்னைக்கு வரும் போதுதான் ஃபில்டர் காஃபி..

கீதா: ஆஹா!! எனக்கும் இப்படி நேர்ந்ததுண்டு ஆனால் கடைசியா எப்படியோ ப்ரிச்சிருவேன்....அதற்காகவெ நான் மேல் பாத்திரத்தை டைட்டாக வைக்கவே மாட்டேன் லைட்டாக வைத்துவிடுவேன். அமுக்கி அழுத்தி வைப்பதில்லை...மேல் பாத்திரத்தைக் கீழ் பாத்திரத்தோடு.. சில சமயம் சரிந்து இருக்கும் போனால் போகுது என்று விட்டுடுவேன்.

அப்படி அடைத்துக் கொள்வதற்குக் காரணம் சூடாகத் தண்ணீர் ஊற்றும் போது அடியிலும் சூடாக டிக்காக்ஷன் இறங்கும் அப்போது மூடி இருப்பதால் ப்ரெஷர் ஃபார்ம் ஆகும்....அதான் காரணம்...ஆறியதும் ப்ரெஷர் ரிலீச் ஆகிடும் அப்போ ஈஸியா வந்துரும்...எல்லாம் குக்கர் கான்செப்ட் தான்...

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லை அண்ட் வல்லிம்மா இப்போ எல்லாம் ஃபேஸ்புக் பதிவுகள், வலைத்தளப் பதிவுகள் எல்லாம் யார் எழுதியது என்ற பெயர் கூட கர்ட்டசிக்குக் கூடப் போடாமல் வலம் வர வைத்துவிடுறாங்க...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மதுரை நல்ல தத்துவம்...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
பழைய வாழ்க்கையில் ஒரு பக்கம் படித்தது போல இருந்தது.
நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். துளசிதரன். எனக்கும் அந்தக் காப்பி குடித்த நினைவு
இருக்கிறது. காப்பித்துணி என்று ஒன்று இருக்கும்.
அதில் வென்னீரை கொதிக்க விட்டு விடுவார்கள்.
டிகாஷன் இறங்கும். சமையலறை முழுவதும் காப்பி மணம் இருக்கும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
காப்பி ஃபில்டரின் முதல் நாட்களில்
இந்த அனுபவங்கள் உண்டு.
பிறகு தீர்ந்த அனுபவசாலி ஆகிட்டோமே.

நானும் அழுத்தி வைக்க மாட்டேன் அம்மா. முதலில்
ஒரு ஸ்பூன் சர்க்கரை,பிறகு நாலு டீ ஸ்பூன் காப்பி பவுடர்

just sprinkling around in the filter,
கொதிக்கும் வென்னீர் கெட்டிலிலிருந்து
மெதுவாகப் பொடியின் மேல் விட வேண்டும்.
ட்ரிப் ட்ரிப்.
ஆஹா . காப்பி டிகாக்ஷன் ரெடி.
சாப்பிடலாமா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா, எனக்கும் இந்தக் குறை உண்டு. அழகாக எழுதியவர்களைப் பாராட்டலாமே என்று தோன்றும்.