Blog Archive

Thursday, January 04, 2018

Margazhi 20.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மார்கழி 20 ஆம் நாள் பாசுரம் முப்பத்து மூவர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்.
செப்பமுடையாய் திறலுடையாய் துயிலெழாய்
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்.
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
+++++++++++++++++++++++++++++++++++++

அமரர்களுக்குத் துன்பம் வரும்போது கை கொடுத்து விடுவிப்பவன்,
தன் சிந்தைக்கு மாறாய்ச் சிந்திப்பவர்களுக்கு
வெந்தணல் எனக் கோபம் காட்டுவான்.
கண்ணா நீ வாழ்க. உனக்கு  வந்தனம்.
அம்மா, திரு மகளின் மறு பிறப்பே நப்பின்னைப் பிராட்டித் தாயே, நீயும் தூக்கம் விட்டு எழுந்து வா.
 உன் மணாளன் கண்ணனை  எங்கள் மார்கழி நீராட்டத்துக்கு
அருள முகம் பார்க்கும் கண்ணாடி ,விசிறி மற்றும் மங்கலப் பொருட்களுடன்
எங்களிடம் அனுப்பி வைப்பாயாக.

2 comments:

ஸ்ரீராம். said...

"எழுந்து வாங்கப்பா... குளிக்கப் போங்க" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் மாதம்!

வெங்கட் நாகராஜ் said...

நன்றிம்மா