Blog Archive

Monday, January 01, 2018

. மார்கழி 18ஆவது பாசுரம் உந்துமதக் களிற்றன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Add caption
உந்துமதக் களிற்றன்
+++++++++++++++++++++++++++++++
ஸ்ரீ ராமானுஜரும் ஆண்டாளும் நிறைவேற்றும்
அழகான காவியம்.
 சீரார் வளை ஒலிப்ப என்று கைத்தாளம் போட்டுக் கொண்டு
பாடிவரும் ஸ்ரீராமனுஜருக்குக் கதவைத் திறக்கும் சிறுமி
ஓடிவரும் வேகத்தில் கைவளையல்கள் ஒலிக்கவும்,

நப்பின்னையைக் கண்ட  பிரமையில் மயங்கி விழுகிறார்.
அத்துழாய்  தன் தந்தையை விளிக்க,
நிலைமையைச் சட்டென்று புரிந்து கொண்ட நம்பி
இளையாழ்வரை ஆஸ்வாசப் படுத்துகிறார்.
விழித்து எழும் ஆச்சார்யருக்குக் க்ண்களில் நீர்.
தனக்காகவே வந்தாளோ நப்பின்னை நாச்சியார் என்று உருகுகிறார்.
அத்துணை பெருமை இந்தப் பாசுரத்துக்கு.
எட்டு வரிகளில் எத்தனை சம்பவங்களைக் கோர்க்கிறாள்
கோதை. அதி அத்புதம். ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள்  திருவடிகளில் சரணம்.

உந்து மதக் களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கம்ழும் குழலி கடைத்திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்..மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார்விரலி உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்......
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 பக்தியைப் பரப்ப, பரமனிடம் அடைக்கலம் புக எண்ணும்போது முதலில் பட்சிகளைத் தூது விடுகிறாள்  கோதை, பிறகு பாகவதர்களான தோழிகளை அழைத்துக் கொண்டு நந்த கோபாலன் அரண்மனைக்கு வந்து,
துவார பாலர்களிடம் வேண்டிக்கொண்டு,
யசோதை நந்தகோபாலனை வணங்கிக்
கடைசியாக நப்பின்னையின் அறைவாசலில்
வந்து நிற்கிறாள்.
தாயார் வழியே பகவானை அணுக வேண்டும் என்பது வைணவ வழிமுறை.
அதை அப்படியே பின்பற்றுகிறாள்.

நாச்சியார் திருவடிகளே சரணம்.

5 comments:

ஸ்ரீராம். said...

__/\__

நெல்லைத் தமிழன் said...

ரசித்தேன். இராமானுசர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியைக் கொண்டுவந்தது சிறப்பு. கண்ணன் படமும் மனதைக் கவர்ந்தது (சிறுபிள்ளைத் தோற்றம்)


மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னைப் பிராட்டியே! வாசனை உடைய கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கதவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.
முன்னெப்பதையும் விட குளிர் மிக வாட்டுகிறது.
வெளியில் சென்று வந்த மறுகணம் தலை கனக்கிறது.
இருந்தும் சக மனிதர்களோடு உறவாடாமல் என்ன மார்கழி என்றும் நினைவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன் எப்பவோ கேட்ட பிரவசனங்களில்
நினைவில் உள்ளதைத் தொடுகிறேன்.
நீங்கள் சொல்லி இருக்கும் அழகு வியக்க வைக்கிறது.

அங்கிருக்கும் போது கேட்ட ஸ்ரீ வேளுக்குடியின் வசனங்கள் நினைவுக்கு வருகின்றன.
அந்த நாள் சீதை,தன்னை தசரதன் மருமகள் என்றே சொல்லி அறிமுகப் படுத்திக்
கொள்வாளாம். இங்கு ஆண்டாளும் நப்பின்னையை நந்தகோபாலன் மருமகளே என்றே விளிக்கிறாள்.
இப்போது நடக்குமா தெரியவில்லை.
நன்றி மா

வெங்கட் நாகராஜ் said...

ரசித்தேன் மா.