Thursday, December 07, 2017

கேசவன் ராதையின் குடும்பம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


https://youtu.be/e3RiMIAZ1vY

1960 களில் மும்பையில் அழகான குடித்தனமாக ஆரம்பித்தது
கேசவன் ராதையின் குடும்பம்.
28 வயது கேசவன் 20 வயது ராதையைப் பெண் பார்த்து
மனம் ஒப்பி சரி சொன்னதும் திருமணம் நடைபெற்றது
அவர்களது மாம்பலம் பங்களாவில்.
மூன்று நாள் கல்யாணம். அப்போது ஒரு நாள் கச்சேரிக்கு எம்.எல்.வசந்தகுமாரி.
மறு நாள் நாட்டியக் கச்சேரி ராதா வசந்தி பிரபல நாட்டியக் கலைஞர்கள்.
மூன்றாம் நாள்  அனந்தராம தீக்ஷிதரின் சுந்தர காண்டம் பிரவசனம்.
திருமண ஜோடியைப் பார்த்து வியக்காதவர்களே  இல்லை.
அவ்வளவு பொருத்தம்.
பெயருக்கேற்ற மாதிரி கேசவன் களையான முகம் . ஆண்மையோடு கலந்த கம்பீரம்.
மா நிறம். எப்போதும் சிரித்த முகம்.ராதை பால்வண்ணம். .படித்த களை, நாட்டியம்
கற்றுக்கொண்டு மெருகேறிய உடல் வாகு என்று அழகாக இருப்பாள்.
கேசவனுக்கு மும்பையில்  ஆங்கிலேயர்கள் கம்பெனி ஒன்றில்
சேல்ஸ் மானேஜர் வேலை. தினம் தன்னுடைய ஃபியட் வண்டியில் சர்ச்கேட்
போய்வருவான். காலை எட்டு மணி மாலை 5 மணி அவனுடைய வேலை நேரம்.
திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் கேசவனின்  அம்மா கோதை மணமக்களுடன்
மும்பை வந்தாள்.
   இவர்களை மாடுங்காவில்
குடி வைத்துவிட்டு,கோவில்,கடை கண்ணி எல்லாம் சுற்றி
ராதைக்குத் தன வழியில், சில உறவினர்களையும் அடையாளம்,அறிமுகம்
செய்து வைத்தார்.
ரத்தன்BAAG  என்ற பெயருக்கேற்ற அழகான் மூன்றடுக்கு மாடிகள்
கொண்ட கட்டிடத்தில் பெரிய விசாலமான அபார்ட்மெண்ட்.
நான்கு  பெரிய பெரிய அறைகள். காற்றோட்டமான பால்கனி, சமையலறை ஒரே ஒரு வேளை,
உதவிக்கு வரும் தாயி என்று அமைப்பாக ஆரம்பமானது வாழ்க்கை.கேசவனுடைய  இரட்டையான கோவிந்தனுக்கு  வெள்ளைக்காரனைப் போல
ஒரு வண்ணம். சரியான அரட்டை மன்னன்.
அவன் சென்னையில் அப்பாவுடன் தங்கி
அவருடைய புத்தகக் கம்பெனியில்  , விளம்பரங்கள்,விற்பனை,
ஆசிரியர்களைச் சந்திப்பது போன்ற சுற்று வேலைகளைக் கவனித்துக் கொண்டான்..
அவனுக்கும் திருமணத்திற்காகப் பெண் தேடும் படலம் தொடங்க வேண்டும்.

ஒரு மாதம் இருந்த கோதை ,,
இருவரின் ஒற்றுமையும் குடும்பம் நடத்தும் பாங்கும் கண்டு
மகிழ்ச்சியுடன் சென்னை திரும்பினாள். புது வருடம் பிறந்து தைமாத ஆரம்பத்தில்
கோவிந்தனுக்கு ஜாதகம் எடுத்துப் பெண் பார்க்கும் வேலை
ஆரம்பிக்க வேண்டும் ,. இப்போது புரட்டாசி ஆரம்பம்.
வீட்டைப் புதுப்பிக்கும் வேலை நடக்கிறது.
ஐந்து மாத இடைவெளியில் உறவுகளில்  சொல்லி வைத்து
நல்லதொரு பெண் தேட வேண்டியது.
 கோவில், நவராத்திரி சமயம் என்று கண்ணில் படும்
பெண்களைப் பார்த்துத் தேர்ந்தெடுத்து,
தையில் ஆரம்பித்தால் சித்திரையில்  திருமணம்
நடத்தலாம் என்று  சிந்தனைகளோடு சென்னை வீட்டிற்கு
வந்து சேர்ந்தாள் கோதை.........தொடரும்.