Blog Archive

Wednesday, December 06, 2017

ராதையை மன்னித்த கேசவன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


  1960
+++++++++++++++++++++++++++++++++++++ 
எங்கள் ப்ளாகில் ராமனை மன்னித்த சீதை தொடர்
பல மாதங்களாகப் போய்க் கொண்டிருக்கிறது. வித விதமான நவீன
சீதைகள்,நவீன ராமன்கள்.

அப்படிப் பார்க்கப் போனால் ,இந்தக் கால சீதைகள் தவறே
இழைப்பதில்லையா.

என் பழைய கதைகளில் ராஜி ,சந்திரன் என்ற இரு பாத்திரங்கள் வருவார்கள். சமீபத்தில் கேள்விப்பட்டது இருவருமே இப்போது உலகில்   இல்லை.

எதுவுமே நிலை இல்லை என்கிற போது ஏன் இந்த மன்னிப்பு
வருகிறது. மன்னிக்காவிடில் வாழ்வு இல்லை. தம்பதிகள்
பொருமிக் கொண்டே குடித்தனம் என்ற ஒன்றை நடத்த முடியுமா.
 குழந்தைகள் பாடு என்னாவது. காலத்துக்கும் இறுகிக் கிடக்கும் பெற்றோரைப்
பார்த்துக் குழந்தைகளும் இறுகி விடாதா.
ஒரு குழந்தை இறுகினால், மறு குழந்தை வீட்டை விட்டுப் போனால் போதும்
என்று கிடைத்த வாழ்வைப் படித்துக் கொண்டு துன்பமோ
இல்லை நல்வாழ்வோ வாழ்ந்து சாதிக்கத் துடிக்கும்.
ஆண் பிள்ளையாக இருந்தால் அவனும் வாழ்வில்
தவறிப் போக வழி இருக்கிறது.

  எல்லோருமே அலங்காரத்தை அங்கீகரித்த கோதண்டபாணி ஆக முடியுமா.
தி.ஜானகிராமன் கதையில் முடியும்
  வாழ்வில் அது போல மனைவியை மன்னித்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.
நல்ல வேளை யாரும் இப்போது இல்லை.
   அவர்களெல்லாம் ராமனாக இருந்தவர்கள் தான்.
 மனைவியை மன்னிக்கும் மாண்பு இருந்தது.  மும்பையில்
நடந்த சம்பவம்  தில்லியில் நற்குடும்பமாகச் செயல் பட ஆரம்பித்தது.
 // வாய்மை எனப்படுவது யாதெனில்
யாதொன்றும் தீமை இலாத சொலல்.//
வள்ளுவர் வாக்கு. அதற்கு  ஏற்றபடி இந்தக் கதையை எழுதலாமா
வேண்டாமா என்னும் முடிவை  என் நண்பர்களிடம் விடுகிறேன்.



13 comments:

Angel said...

எழுதுங்கள் வல்லிம்மா ..உங்கள் பார்வையில் உங்கள் எழுத்துக்களை வாசிக்க ராதையை மன்னித்த கேசவனை நாங்களும் சந்திக்க ஆவலாக இருக்கு

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
தவறு நடந்தது என்று தெரிந்தும்
மனதார மன்னித்த அந்த மாமனிதர்
நான் நிறையத் தெரிந்து கொள்ளத மனிதராக இருந்து விட்டார்.
இப்பொழுது அந்தப் பெருந்தன்மையை

நிறைவோடு நினைக்கிறேன். நன்றி மா. மற்றவர்கள் கருத்தையும் கேட்போம்.

ஸ்ரீராம். said...

எழுத வேண்டாம் என்று சொல்லத்தோன்றுமா அம்மா? கட்டாயம் எழுதுங்கள். காத்திருக்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
எழுதுகிறேன். நெடு நாள் மனதில் உலவிய சம்பவம்.
சில பேருக்குப் பிடிக்காமல் போகுமோ என்ற பயம்.
பரவாயில்லை அந்த நல்ல மனிதரை நினைத்துப் போற்ற
ஆசை.

நெல்லைத் தமிழன் said...

சீதையாவது ராமனாவது.. உலகில் தவறு செய்யாத பெண் அல்லது ஆண் உண்டா? இறைவன் அருளால், ஒரு வீட்டில், கணவனோ அல்லது மனைவியோதான் தவறு செய்பவர்களாக அமைந்துவிடுகிறார்கள். மற்றவர்கள், 'வாழ்க்கை' என்னும் படகு நிலையாக ஓடவேண்டி, தவறை மன்னித்துவிடுகிறார்கள்.

எழுதுங்கள் நீங்கள் பார்த்த கேள்விப்பட்டவைகளை. படிக்கிறோம்.

பூ விழி said...

எழுதுங்கள் சிஸ் காத்திருக்கிறேன் ஆவலுடன்

Geetha Sambasivam said...

காத்திருக்கோம், எழுதுங்க வல்லி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத் தமிழன், உண்மைதான்.
தவறு செய்யாதவர்கள் சொல்பமே.
இத்தனை அருமையாகச் சொல்லும்போது
உங்கள் எண்ணத் தெளிவைப் பார்த்து சந்தோஷப்படுகிறேன்.
விவரங்களைச் சரியாகக் கணித்துக் கொண்டு எழுத
ஆரம்பிக்கிறேன்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பூவிழி. உங்க சொல்லுக்கு மாற்றுச் சொல் இல்லை . எழுதுகிறேன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா.
இன்று செக் அப் போய் வந்த பிறகு எழுதுகிறேன்

வெங்கட் நாகராஜ் said...

எழுதுங்கம்மா... படிக்கக் காத்திருக்கிறோம்.....

வல்லிசிம்ஹன் said...

EzhuthukiREn Venkat. thank you ma.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிமம எப்படியோ உங்கள் போஸ்ட் மிஸ் ஆகி விடுகிறது. ப்ளாகரில் நான் சரியாகப் பார்ப்பதில்லை போலும்...

வல்லிமா எழுதுங்களேன். கணவன் மனைவி இருவருமே தவறு செய்பவர்கள்தானே!! விட்டுக் கொடுத்தலில்தானே வாழ்வே இல்லை என்றால் நீங்கள் சொல்வது போல் பொருமிக் கொண்டே உள்ளே எரிமலை எப்போது கனன்று வெடிக்குமோ என்ற ஒரு பயத்தில்தான் வாழ்க்கை ஓடும்...

கேசவன் ராதையை மன்னித்ததையும் வாசிக்க ஆவல்...எழுதுங்கள் வல்லிம்மா

கீதா