Blog Archive

Monday, December 04, 2017

ஆகாயத்தில் ஆரம்பம்.....

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 எங்கள் ப்ளாக் வலைப்பூவில் இந்தக் கதை அனுப்ப ஆசை.

நம்ம ஏரியாவில்  வெளியாகிவிட்டதாக  இன்று காலை தகவல் கொடுத்துவிட்டார்  ஸ்ரீராம். வாழ்க வளமுடன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
க க க  போ  5  நம்ம ஏரியா க்கு ஒரு கதை.
++++++++++++++++++++++++++++++++++++++++
 விமானத்தில்
Sutton, London
ஆரம்பித்து பாட்டி வடை சுட்டுக் கொடுக்கும் செண்டி மெண்டல் விளம்பரம். Fueled by Love
Thames shore

  BA  பிசினஸ் வகுப்பில் சேவை... சர்விஸ்மிக நன்றாக இருக்கும்.
அதான் பாட்டியுடைய மகன்  இந்தியாவுக்கு இந்த
வகுப்பில் பறக்க ஏற்பாடு செய்கிறான்.
தனியாக வரும் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படும் பிரிவுத்துயர்,
இன்னோரு மகனைப் பார்க்கப் போகும் ஆவல் எல்லாமே உண்மை.
அழகாக எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் மிகையானது தான். ஆனால்
விளம்பரம் அப்படித்தானே இருக்கும். நன்றியும் வாழ்த்துகளும்  எங்கள் ப்ளாக்   குழுமத்துக்கு.
++++++++++++++++++++++++++++++++++++++++++
இனி கதை.
 ஞானம் , பெட்டியைத் தயார் செய்கையிலியே, சென்னையிலிருக்கும்
பேரன், பேத்திக்கு  வாங்கிய உடைகள், மருமகளுக்கு  வாங்கிய  பச்சை ப்ரேஸ்லெட், மகனுக்கு வாங்கிய புது ஐபாட் என்று அழகாகக், கலர் வண்ணத்தாள்களில்
 சுற்றி  மென்மையான கைகளால் அடுக்கிவைத்தார்.
பின்னால் வந்து பார்த்த சின்ன மகன் மகேஷ், போதுமாமா,
இன்னும் குக்கீஸ்,  சாக்கலேட் என்று வாங்கிக் கொள்கிறாயா.
   தார்ண்டன் சாக்லேட் யம்மியாக  இருக்கும். மாகிண்டாஷ் வாங்கிண்டு போறியா.//
என்றெல்லாம் பேசிக்கொண்டே வந்தான்.
மகனை அன்புடன் அணைத்த ஞானம் , டேய் போறுண்டா.
ஒழுங்கா சாப்பிடு. சில்லுனு குளிர் ஆரம்பித்தாச்சு.
ஹீட்டர் சரியா வேலை செய்யலைன்னு நினைவு வச்சிக்கோ. லாண்ட்லார்ட்
கிட்டே உடனே பேசு. லண்டன் குளிர் மோசமானது. அனாவசியமா சளித்தொல்லை வரவழைத்துக் கொள்ளாதே.

 இன்ன பிற பலகாரங்கள்,  எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாச்சு.

அம்மா உனக்கு எப்ப வரணும்னு சொல்லு திரும்பி வந்துடு என்னும் மகனை ஆழ்ந்து பார்த்தாள் ஞானம்.
உனக்கு ஒரு மனைவி வரட்டும்டா. அப்புறம் வரேன்.
தனியா உன்னை விட்டுப் போவதில்
ரொம்ப வருத்தமாக இருக்குடா.
யாரை வேணுனாலும் திருமணம் செய்துக்கோ.
எனக்கு  மறுப்பே கிடையாது. மனப் பொருத்தம் போதும்.//
அம்மா என்று அணைத்துக் கொண்டவன் கண்ணிலும் நீர்.

அடுத்த நாள் ஹீத்ரோ , பகல் 12 மணிக்கு  வந்தாச்சு. ஞானம் இரவு
விழித்து மகனுக்குப் பிடித்த உணவுகளைத் தயார் செய்து Fridjedair
வைத்திருந்தாள்
செக்கின் செய்து லௌஞ்சில் அமர்ந்தார்கள். அம்மாவுக்குப் பிடித்த
நல்ல காப்பியை வாங்கிக் கொடுத்தான்.
அம்மாவிடம் எல்லா உணவுப்பொட்டலங்களுக்கும் நன்றி சொன்னான்.

கையசைத்து பிசினஸ் வகுப்பு பயணிகளுடன் சேர்ந்து கொண்டாள்.
விமானம் கிளம்பியதும் ஆயாசம் மனதைக் கவ்வியது.

சென்னையில் முடிந்திருக்க வேண்டிய மகேஷின் திருமணத்தை நினைத்தாள்.
எல்லாப் பொருத்தமும் இருந்து நிச்சயம் செய்யும்  நாள் வரும்போது
அந்தப் பெண் லண்டன் வர மறுத்துவிட்டது. மென்மையான 
மகேஷ் சஞ்சலம் அடைந்துவிட்டான். அம்மாவை அழைத்துக் கொண்டு இங்கிலாந்து வந்துவிட்டான்..  முகத்தில் சிரிப்பைப் பார்ப்பதே அதிசயமாகிவிட்டது.....

 ஏதாவது சூடான பானம் வேண்டுமா என்று கேட்ட
பெண்குரல் அவளை எழுப்பியது.
 என்ன அழகான  பெண். எத்தனை மரியாதை. .இன்னும் ஊன்று கவனித்தாள்,
இந்தியக் களை தெரிகிறதே. நிலம் பெயர்ந்து குடியேறிய வம்சமோ
  என்று புன்னகையோடு அவளது உபசரிப்பை ஏற்றுக் கொண்டாள்.
கையில் கொண்டு வந்த புத்தகத்தைப் பிரித்தவுடன் ,
மகன் நினைவுதான். திரும்பிப் போயிருப்பான்  தன் வீட்டுக்கு.
  மீண்டும்  சாப்பாடு பற்றிய குறிப்புகளோடு வந்த பெண்ணின் பெயரைக் கவனித்தாள்
பரிபூர்ணா அனந்தன்.
 தனக்கு வேண்டும் மெனுவைச் சொல்லிவிட்டுக் காத்திருக்கும் வேலையில்
சென்னைக்குச் சென்று செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்துக் கொண்டாள்.
சாப்பிட்டுப் படுத்ததுதான் தெரியும்
திடீரென்று ப்ளேன்  ஏர் பாக்கெட்டில் விழுந்து எழுந்ததில் விழித்தாள்.
 அந்தப் பெண் வந்து சீட் பெல்ட் போட்டுக் கொள்ளச் சொல்லி, அட்லாண்டிக்
காற்று வேகம் அதிகம் அம்மா.  பொறுத்துக் கொள்ளூங்கள்
என்று சொல்லும்போதே விமானம் மீண்டும் குலுங்கியது.
நிலை குலைந்த ஞானம் பக்கத்து தடுப்பில் மோதியதில் தலையில்
சிறிய அடியும் கீறலும்.
பதறிப் போன  பூர்ணா, உடனே பக்கத்தில் உட்கார்ந்து,
ஞானத்தை அணைத்துக் கொண்டு முதல் சிகித்சை செய்தாள்.

ஏன் மா இவ்வளவு அக்கறையோடு செயல் படுகிறாயே
  அடிக்கடி இது போல ஆகுமா என்றவளுக்கு
முதல் தடவையாக,
 தமிழில் பதில் சொன்னாள் அந்தப்
பெண்.  என் அம்மா உங்களை மாதிரியே இருப்பார் மேம்.
 எனக்குதான் கொடுத்து வைக்கவில்லை.
 மனம் கசிந்தது ஞானத்துக்கு.
சென்னை இறங்கும் நேரமும் வந்தது.
 தலையில் அடிபட்ட வலியில் , உடல் தன் வசமில்லாதது போல உணர்ந்த
ஞானம் தனக்கு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டாள்.
 சட் சடென்று ஏற்பாடுகள் நடக்க பூர்ணாவின் துணையோடு சென்னை நிலையத்தில் தன் மகன்
சங்கரிடம் வந்து சேர்ந்தாள்.
 விடைபெற வந்த பூர்ணாவிடம் லண்டன் முகவரி வாங்கிக் கொண்டாள்.
தன் மகன் மகேஷின் ஈமெயில் ஐடியும் கொடுத்து
 தன்னுடைய  மீள் வருகையின் போது  வந்து பார்ப்பதாகச் சொல்லி
விடை பெற்றாள்.
வீட்டுக்கு வந்து குழந்தைகளுடன் கொஞ்சி, மருமகள் சமையலை அனுபவித்து
அயர்ந்து உறங்கி விட்டாள். மகேஷ் நினைவு வந்ததும் ,
ஃபேஸ் டைமில் அவனை அழைத்து தன் பிரயாண விவரத்தை
சொல்லும்போது பூரணா நினைவு வர , அந்த அன்பை மிக மெச்சி அவனிடம்
சொன்னாள்.
   அது அவர்கள் கடமை  அம்மா. அந்தப் பெண்ணுக்கு எழுது
என்று வேறு பேச்சு ஆரம்பித்தான்.
  ஞானம் மனம் சுறுப்பாகச் செயல் பட்டது.
இது நிறைவேறினால் முதல்  காணிக்கை லண்டன் வினாயகருக்குத் தான் என்று முடி
போட்டாள்.
 அவர் காதில் விழுந்து விட்டது போலிருக்கிறது.
மகனிடம் இருந்து ஃபோன் கால். அம்மா ப்ரிடிஷ் ஏர்வெசில் நீ
   நழுவவிட்ட பார்சல் ,எனக்கு அனுப்பப் படுவதாக
ஒரு பெண் சொன்னார்.
நீ அதைப் பார்க்கவில்லையா என்றான்.
 ஆஹா ,கைப்பயில் வைத்திருந்த பச்சை ப்ரேஸ்லெட் டா அது.
நான் திண்டாடிக் கொண்டிருந்தேன்.
கவலைப் படதேம்மா பத்திரமாக வந்துவிடும்.
 ப்ரேஸ்லெட்டும், அதைக் கொண்டு வந்து கொடுத்த தமிழ்ப் பெண்ணும்
மகேஷுக்குப் பிடித்தது  இன்னோரு விஷயம்.
 அவன் அவர்கள் வீட்டிற்கு விருந்துக்குப் போனது அடுத்த நடப்பு.
சென்னை வந்த ஒரே மாதத்தில், ஞானம் லண்டனுக்குக் கிளம்பினாள்.
அதே ப்ரிடிஷ் ஏர்வேய்ஸ்.
  பயணம் இனிதாக அமைந்தது.
வரவேற்க வந்திருந்த பரிபூரணாவையும், மகேஷ்  மற்றும் சம்பந்தி ஆகப் போகும்
  அனந்தன். கண்களால் அணைத்துக் கொண்டாள்.
 எளிதாக இனிதாக வினாயகர் முன்னிலையில்
திருமணம் நடந்தேறியது. வாழ்வின் இன்னோரு கடமையை முடித்த ஞானம்
சென்னை திரும்பினாள். சுபம்.


11 comments:

ஸ்ரீராம். said...

நெகிழ்வான கதை வல்லிம்மா. தமிழில் விக்ரமன் என்றொரு திரைப்பட இயக்குநர் இருக்கிறார். சுபமாகவும், கஷ்டம் இல்லாத கதைகளாகவும் மட்டுமே படம் எடுப்பார். அதுபோல, எல்லோரும் இனியவர்களாக இருந்து விட்டால்? சுகம்தான். ஆனால் கொஞ்சம் போரடிக்குமோ!​

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் நிறையவே போரடிக்கும்.
ஆனால் பல காலங்கள் ,சலித்து நடந்து ஒரு பாலைவன சோலை
கிடைக்கும் காலமாக இந்த நிகழ்ச்சியை எழுதினேன்.
ஞானம் அம்மாவுக்குப் பிள்ளைகளின் மகிழ்ச்சி முக்கியம்.
இது ஒரு சிறு டைம் ஃப்ரேம். அதர்கப்புறம் நிகழ்வது காலத்தின் கையில்.

வெங்கட் நாகராஜ் said...

நம்ம ஏரியாவிலும் படித்தேன் மா...

இப்படி அன்பு சூழ் உலகமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

பாராட்டுகள் மா.

எனக்கும் அந்த விளம்பரம் பிடிக்கும் - என்னதான் சினிமாட்டிக் ஆக இருந்தாலும்! சில விளம்பரங்கள் நம் மனதை விட்டு அகல்வதே இல்லை.

Anuprem said...

ரொம்ப அன்பான கதை அம்மா...

படிக்கும்போதே மனதிற்கு ஒரு இதம் வருகிறது...

நெல்லைத் தமிழன் said...

ஸ்ரீராம் - நீங்க சொன்னதுல எனக்கு உடன்பாடுதான். நம்ம வாழ்க்கைல பாலைவனச் சோலை மாதிரிதான் சந்தோஷம் வருது. மற்றபடி தினப்படி டென்ஷன் அது இது என்று நம்மளை ஆக்கிரமிக்கிறது. அப்படி இருக்கறப்போ, கதையோ அல்லது திரைப்படமோ, ரொம்ப டென்ஷனாகவும், சோகமாகவும் நகர்ந்தால், அல்லது எதிர்மறைச் சிந்தனைகளையே நிரப்பியிருந்தால், எப்படிப் பார்க்கமுடியும்? நான் சோகப் படம்னா, அந்தத் திசைக்கே 30 வருடங்களுக்கு மேலாக போகவே மாட்டேன்.

வல்லிம்மா - இந்தக் கதை நல்லா இருந்தது. இதைப் படித்துவிட்டு, பையனைப் பெற்ற அம்மாக்கள், ஏர்ஹோஸ்டசை முழித்து முழித்துப் பார்க்காமல் இருந்தால் போதும் :-)

கோமதி அரசு said...

அம்மாவுக்குப் பிள்ளைகளின் மகிழ்ச்சி முக்கியம்.
இது ஒரு சிறு டைம் ஃப்ரேம். அதர்கப்புறம் நிகழ்வது காலத்தின் கையில்.//

நீங்கள் சொல்வது 100க்கு 100 உண்மை.
குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க பார்த்து பார்த்து மணமுடிக்கிறார்கள் பெற்றோர்கள்
அதுக்கு பின் நிகழவது காலத்தின் கையில் தான்.

அங்கும் என் கருத்தை சொல்லி விட்டேன்.
அருமையான அன்பான கதை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
உங்களுக்குப் பிடித்திருந்தது என்பதே எனக்கு மகிழ்ச்சி.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனு,
இது அம்மா சாம்ரஜ்யத்தில் பையனுக்கு செய்ய முடிந்த நன்மை. நன்றாகத்தான்
இருக்கும் . நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

ஹாஹா. நெல்லைத்தமிழன். இது போல ஏற்கனவே நடந்ததாம். ஒருவர் எழுதி இருந்தார்.
நல்ல பெண்ணாக இருந்தால் திருமணம் செய்வதில் இருவருக்கும் லாபம்.

நடக்கட்டுமே. நானும் சோக முடிவு அழுகை எல்லாம் பிறந்ததிலிருந்தே போவதில்லை.
மனசில் அந்த அழுத்தம் ஏறி உட்கார்ந்து கொண்டு விடும் ஆளை விடுங்கப்பான்னு தோணும்.

ஸ்ரீராம். said...

நெல்லை.. நானும் சோகப் படங்கள் பார்ப்பதில்லை. சிரிக்க வைக்கும் படங்கள் மட்டுமே பார்க்கிறேன். இப்போதெல்லாம் ரொம்ப சஸ்பென்ஸ் வந்தால் கூட தாங்குவதில்லை. கதையை குறை சொல்லவில்லை. தினசரி வாழ்வின் இயல்பைச் சொன்னேன்!

வல்லிசிம்ஹன் said...

நாமெல்லாம் சேர்ந்து நல்ல படங்களைப் பற்றிப் பேசலாம் ஸ்ரீராம்.
சோகமே வேண்டாம்.