Blog Archive

Saturday, December 30, 2017

Ambi, Manni, and I அம்பி மாமா 3.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
++++++++++++++++++++
அம்பி மாமாவும் ராமு மாமாவும் என் ஆத்மார்த்த தோழர்கள்.
என்ன வேண்டுமானாலும் அவர்களுடன் விவாதிக்கலாம்.
இருவரும் தங்கள் மனைவியின் பால் வைத்திருந்த அபரிமிதமான
அன்புக்கு  எல்லையே இல்லை.
அவர்களின் துணைவிகள் அது போல் அந்த நேசத்தை என்னிடம் காட்டியதுதான் இன்னும் விசேஷம்.
ஏதோ, சின்னப் பெண் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை அவர்கள்.

அம்பி,மன்னி திருமணம் குண்டூர் ,ஆந்திர மாநிலத்தில் நடந்தது.
மன்னியின் அப்பா. ஆழ்வார் மாமா,எங்கள் அனைவருக்கும்
குண்டூர் செல்ல ரயிலில் டிக்கெட் எடுத்திருந்தார்.
மாமாவின் தோழர்கள் குண்டூரு போகலாமடா மாப்பிள்ளே என்று அவரைக் 
கலாட்டா செய்து பாடியது நினைவுக்கு வருகிறது
ஒரு இருபது ,முப்பது நபர்கள் போனது போல நினைவு.
மன்னியின் கூடப் பிறந்தவர்கள் இரண்டு தம்பிகளும் 
நான்கு சகோதரிகளும்.
அருமையான  குடும்பம்.
ஒரு விதத்தில் நெருங்கிய உறவினரும் கூட.
நல்ல வேலையில் இருந்த ஆழ்வார் மாமா, செயல் வீரரும் கூட. எப்பொழுதும் 
சிரித்த முகம். கும்பகோணத்து மிராஸ்தார் போல இருப்பார்.
அவர் மனவியோ பொறுமையின் பூஷணம் அசரவே மாட்டார்.
மிக மென்மையான குரலில் அத்தனை மனிதர்களையும் அணைக்கும் குரலில்
அவர் பேசுவது ஒரு தனித்தன்மை.

அம்பி மாமாவை மென்மையாக்கினது மன்னிதான்.
வாய்க்கு ருசியான பண்டங்கள். இதமான வரவேற்பு.
நிறைய படித்து, அதைத் தன் வாழ்வு முறையிலும்
கொண்டு வந்த அழகி என் மன்னி.

அவர்களின் தில்லி வீட்டுக்கு வந்தவர்களின் கணக்கு
எண்ணிக்கையில் அடங்காது.
வந்தவர்கள் அங்கேயே தங்கிப் படிப்பார்கள் வேலைக்குப் போவார்கள். 
வாழ்வில் முன்னேறிய பிறகு தான் 
அவர்களை மாமா வெளியே அனுப்புவார்.
பின்னாட்களில் உதவியாக இருந்தவர்களும் அவர்களே.
பாட்டி இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தில்லி சென்றுவிட்டு
 வெகு நாட்கள் கழித்தே திரும்புவார்.
அந்த தில்லி உறை குளிரிலும் அசராமல் உழைத்த குடும்பம்.
மன்னி வாயிலிருந்து கஷ்டம் என்ற சொல்லே வந்ததில்லை.
தொடரும்.
பானக நரசிம்மர் மங்களகிரி ,குண்டூர் பக்கத்தில்.

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல மனம் கொண்ட அம்பி மாமா....

தில்லியில் வரும் தமிழர்கள் பலருக்கு இப்படி இடம் கொடுத்த ஒருவரை நான் அறிவேன். அசராமல் வாரிக்கொடுக்கும் தம்பதியர்....

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,

இதைக் கேட்க எத்தனை ஆனந்தம்.
ஒரு சாதாரண் நிலையில் உள்ள குடும்பத்துக்கு
இது எத்தனை பாரமாக இருந்ததோ தெரியாது.
ஆனால் மகிழ்ச்சியாகச் செய்தார்கள்.

ஸ்ரீராம். said...

நல்ல மனம் வாழ்க.. தொடர்கிறேன்மா.

Geetha Sambasivam said...

நல்ல மனிதர்கள். சென்னையில் திநகரில் என் சித்தப்பா (அசோகமித்திரன்) குடும்பம் இப்படித் தான்! அனைவரையும் வரவேற்று உபசரணைகள் செய்த குடும்பம். அங்கே இருந்து பின் வாழ்க்கையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளாதவர்களே இல்லை எனலாம்.

அம்பிமாமா பற்றி அறிய அறிய மனதுக்கு இனிமை!

நெல்லைத் தமிழன் said...

தொடர்ந்து படிக்கிறேன். நல்ல மனம், எல்லாக் கஷ்டங்களையும் தாங்கி பிறருக்கு உதவியாக இருக்கிறது.

பொருத்தமாக பானக நரசிம்ஹர் படம்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்பி மாமாவைப் பற்றி முந்தைய பதிவும் வாசித்து இங்கு வந்தேன் வல்லிம்மா...

எவ்வளவு உயர்ந்த மனம் இல்லையா...கஷ்டங்கள் நடுவில் அன்புடன் வாழ்வது என்பது மிகப் பெரிய விஷயம்!

என் மாமாக்கள் மாமிகள் கூட என்னிடம் மிகவும் அன்புடன் இருப்பார்கள். இப்போதும் தொடர்பில். நான் பேசவில்லை என்றால் உடன் எனக்கு ஃபோன் வந்துவிடும்...ஏன் வீட்டிற்கு வரவில்லை, ஏன் கூப்பிடவில்லை என்று....பெரிய மாமா மட்டும் தான் இருக்கிறார். அவரும் நான் கூப்பிடவில்லை என்றால் அவருக்குக் காது கேட்காது என்பதால் ஃபோனில் பேச மாட்டார் ஆனால் எனக்கு போஸ்ட் கார்டு வந்துவிடும் நலமா என்று கேட்டு...உங்கள் பதிவு என் நினைவுகளை எழுப்பியது..தொடர்கிறேன் வல்லிம்மா.

கீதா