Blog Archive

Saturday, December 16, 2017

மாறும் காலம் 8

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

     வண்டியை விட்டு இறங்கிய ராதை வீட்டுக்குள் பாடியபடி விரைந்தாள். பின்னாலயே வந்த
நவீன், கூடத்தில் உட்கார்ந்திருந்தவர்களைக் கண்டு அதிர்ந்து போனான்.

அடுத்த அரை மணி நேரம் வீடு அமளிதுமளிப் பட்டது.
ராதை மட்டும் அமைதியாக இருந்தாள்.

அவளின் அம்மா ,அப்பா  அதிர்ச்சியுடன் அவர்கள் பேசுவதைப்
பார்த்துக் கொண்டிருந்தார்கள், நவீன் ஏதோ அவர்கள் மொழியில் கெஞ்சுவது
தெரிந்தது.
ராதையைக் கேட்டால் மௌனம் சாதித்தாள்.
அவளுக்கும் இந்த விஷயம் தெரியும் என்று உணர்ந்தனர்.

பெண்ணைப் பெற்றவர், அவரிடம் வந்து நாங்கள்
இதை எதிர் பார்க்கவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்
 கல்யாணம் ஆயிற்று.
  என் மகள் கர்ப்பம் தரித்து ,,இரண்டு மாதங்களில்
இங்கே வேலை கிடைத்து வந்தான்.

இது போல அனியாயம் நாங்கள் கண்டதில்லை.
 வருடம் ஒரு முறை வந்தானே.
ஒன்றும் எங்களுக்குத் தோன்றவில்லையே.
 உங்கள் பெண்ணும் மணமானவள் ஆமே. இந்த
உறவை எப்படி அனுமதித்தீர்கள்.
நாங்கள் தென்னாட்டுக்காரர்கள் பண்பாடு மிக்கவர்களாகத்தான் எங்கள்
ஊரில் பார்த்திருக்கிறோம்.
 இந்த அவமானம் எங்களால் தாங்க முடியாது.
இந்த மாப்பிள்ளையும் எங்களுக்கு வேண்டாம்
என்று வெளியே நடந்தார்.
அவரது மனைவி ராதையைப் பார்த்து அவர்கள் மொழியில்
அழுதுகொண்டே  ,கதறினாள்.
பின் கணவனைப் பின் பற்றினாள்.
நவீன் ,ராதையைப் பார்க்க அவள் தன் அறைக்குள்
புகுந்தாள் .அவனும் பின் தொடர
அதற்குப் பின் நடந்த ரசாபாசம் ,அவர்கள் வீட்டு சமையல் வேலை செய்யும் அம்மா
 மூலம்
பாட்டிக்கு வந்தது.  தொடரும்.

10 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பாட்டி மூலம் நல்ல தீர்வு கிடைத்ததா?

நெல்லைத் தமிழன் said...

என்ன அநியாயம். அழக்கொண்ட எல்லாமும் அழப்போகுமல்லவா? இதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை.

ஸ்ரீராம். said...

கேட்பதற்கும் படிப்பதற்கும் சங்கடமான இடங்கள்.

ஸ்ரீராம். said...

ராதைக்கு நவீனுக்கு ஏற்கெனவே மணமாகியிருப்பது தெரிந்திருக்கிறது என்பது ஒரு அதிர்ச்சிதான்.

Angel said...

தெரிந்தே தவறு செய்திருக்கிறார்களே :( ..இவர்களின் பேராசைக்கு தவறான வாழ்க்கைக்கு பலியானது கேசவன்குழந்தைகள் மற்றும் அந்த நவீனின் மனைவி குழந்தை ..பாவம்

வல்லிசிம்ஹன் said...

கோதைப் பாட்டியும் ,என் பாட்டியும் கூடப் பிறவாத சகோதரிகள்
ஒரு ஊர்க்காரர்கள்.
ஒரே போல எண்ணங்கள் கொண்டவர்கள்.

இவர்கள் இருவருமே தலையிடவில்லை.
யார் யார் குழப்பத்துக்குக் காரணமாக இருந்தார்களோ
அவர்களே தீர்த்துக் கொண்டார்கள். ஐயா. திரு .ஜம்புலிங்கம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன்.
அது நடந்தது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை
ராதையின் அழுகை தன்னை நினைத்தே ஒழிய,
தான் தவறிழைத்ததை எண்ணி இல்லை.
பெற்ற மகன் ஏசும்போது மனது நொந்து இறந்தார்.

வல்லிசிம்ஹன் said...

அதுதான் எல்லோரையும் வருத்திவிட்டது. ஸ்ரீராம். அந்த
நேரத்தில் பெரிய விஷயம். ஏன் எந்த நேரத்திலும்
இது தப்புதான் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

மார்கழி பிறப்பத்ற்கு முன் முடிக்க நினைத்தேன்.
நல்ல நினைவுகள் மட்டுமே மந்த்தில் இருக்க வேண்டிய மாதம்.
நடுவில் வந்த உடல் நலக் குறைவால் தாமதமாகிவிட்டது.

நீங்கள் சொன்ன உண்மைகளே என்னை வருத்தின.
இப்போது வெளி நாடுகளில் வசிக்கும் அந்தக் குழந்தைகளுக்கே பேரன்,பேத்திகள் இருக்கிறார்கள்.
இறைவன் காத்தான்.

Thulasidharan V Thillaiakathu said...

ஓ ராதை தெரிந்தேதான் தவறு செய்திருக்காளா?!!! தன் குழந்தைகள் மீதுமா பாசம் இல்லாமல் போனது??!! குழந்தைகள் கூடவா அவள் கண்ணுக்குத் தெரியவில்லை. நான் அவள் திருந்திடுவாள் நவீனும் திருந்தி மன்னிப்பு கேட்பான் என்று நினைத்துத்தான் முந்தையா பகுதியில் முந்திரிக்கொட்டையாக எதிர்பார்த்ததைச் சொல்லியிருந்தேன் அம்மா...ஆனால் வேறு போல இருக்கே..ம்ம் மனம் சங்கடப்படுகிறது..

கீதா