Blog Archive

Friday, December 29, 2017

அம்பி மாமா 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  அம்பி மாமா 2
+++++++++++++++++++++++++
1954 அம்மாவுக்கு அல்சர் வந்து மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
வரும் நேரம் கூட வந்த துணை அம்பி மாமா.
தாத்தா மறைந்த நிலையில் குடும்பத்தைத் தோளில் நிற்க வைத்தது
நிலைமை.
 இன்னோரு தம்பி அப்போது படித்து முடித்த நிலைமையில்
விசாகப் பட்டணம் நகருக்குப் பயிற்சி பெற பி அண்ட் டி
போஸ்ட்ஸ் ஆண்ட் டெலகிராப் ஆபீஸில் பயிற்சி.

அப்போது மற்ற மாமாக்கள் வயதில் சிறியவர்கள்.
இல்லை என்ற சொல்லே இல்லாமல்
குடும்பம் நடக்கும்.எப்போதும் வளம்.
அவர்கள் குடியிருந்த குடியிருப்பில்
அத்தனை பேருக்கும் இந்த வாலிபர்களின் மேல் அத்தனை மரியாதை.
அப்பா இல்லாமல் வளரும் விதம் கண்டு அதிசயிப்பார்கள்.
எனக்குத் தெரிந்து க்ளாக்ஸோ கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து
டைப்பிங்க் ,ஷார்ட் ஹாண்ட் என்று எல்லாவிதத்தில் முதன்மையாக
 வெற்றி பெற்றவர்.
பிற்காலத்தில் டெல்லி செல்லும்போது
அவர் தட்டச்சு செய்யும் வேகம் கண்டு
அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள்.
ஒரு நிமிடத்தில் 147 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வலிமை படைத்தவர்.
கடின உழைப்பால் முன்னேறி தன் டிபார்ட்மெண்ட் தலைமைப் பொறுப்பை
 ஏற்று ,ஒரு மதராஸி என்ற வகையில் அவர்
முன்னேறியது அனைவருக்கும் அதிசயமே.
எந்த நிலையிலும் அசரவே மாட்டார்.
1957இல் அவருக்கு வாய்த்த மனை நலம் மிக்க நல்ல பெண்ணாக
ஜெயலக்ஷ்மி என்னும் என் ஜெயா மன்னி
குடும்பத்தையும் அரவணைத்துக் கொண்டவனையும் காத்தவர்.
என் பாட்டியின் அன்புக்குரிய மருமகள்.
சந்தோஷக் காலங்கள் தொடர்ந்தன.
அவர்கள் சென்னை வரும் நாளில்
நாங்கள் செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு
ஒரு மணி நேரம் முன்னதாகவே போய்விடுவோம்.
வாய் கொள்ளாத சிரிப்புடன் தம்பதியரும் குழந்தைகள் இருவரும் இறங்குவது
இன்னும் நினைவில் இருக்கிறது.
ஒரு டெல்லி மண் கூஜா, நிறைய பாதுஷா, பிஸ்கட்,தேன் குழல்
என்று பெரிய டாக்சி நிறைய பொருட்கள் வரும்.
பரந்த மனம் கொண்ட தம்பதியரின்
குடும்பம் சிறிய வருமானம் கொண்டததுதான்.
இருந்தும் வள்ளல்கள்
போல நடந்து கொள்ளும் பெருந்தன்மை. தொடரும்.

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்மனம் கொண்ட மாமா. தில்லி மண் கூஜா இப்போது பார்க்கக் கூட கிடைப்பதில்லை மா.

ஸ்ரீராம். said...

சிறந்த மனிதர் பற்றிய தொடர். தொடர்கிறேன்மா.

Geetha Sambasivam said...

அந்தக் காலத்து மனிதர்கள்! நினைக்கவே ஆனந்தம்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் , அப்படியா, தில்லியின் மோடாக்களும், அந்த மூக்கு வைத்த கூஜாக்களும் மறக்க முடியாத நினைவுகள்.
மாமாவுக்கு கரோல் பாக், சரோஜினி நகர் என்று அத்தனை
இடங்களும் அத்தனை பழக்கம். மன்னியும் வருபவர்களை எல்லாம்
அழைத்துச் சென்று ,காண்பிப்பார்.
நான் ஒருத்திதான் தில்லி சென்றதில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். அவர் இருக்க விரும்பவில்லை. அதனால் இது அவருக்கு நல்ல முடிவுதான்.
அவருடைய பெண்ணைத்தான் என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா மா,
உண்மையில் நான் மிகக் கொடுத்து வைத்தவள் .இத்தனை நல்ல மனிதர்களின் உறுதியான
துணை எனக்கு இருந்திருக்கிறது.
இப்போது நீங்கள் எல்லோரும் இருப்பது போல.

பூ விழி said...

இனிய குடும்பம் ,நினைவுகளை தொடர்கிறேன் வல்லிமா வள்ளலாய் இருப்பதெல்லாம் வரம்.