Blog Archive

Tuesday, September 19, 2017

ஒரு இருமலின் கதை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


+++++++++++++++++++++++
1995 இல்  அம்மாவின்  ஒன்றுவிட்ட சகோதரியின் கணவருக்கு ஓயாத இருமல்.
நெஞ்சில் கபம். சின்ன வயதில் நிமோனியா வந்ததிலிருந்து வெகு ஜாக்கிரதையாக இருப்பார்.
ஒரு பெண்ணும் ஒரு மகன் என்று செழிப்பான குடும்பம். இந்திரா நகரில் வசதியான பங்களா.

எல்லோரும் ஒவ்வொரு அடுக்கில் குடி இருப்பது போல அந்த நாளிலியே 
  வாசு கட்டி வைத்திருந்தார்.
பெண் மட்டும் டெல்லியில் வாசம்.  
குழந்தைகள். பேரன் பேத்திகள். என்று ஆளுக்கு இரண்டு
வாசு என்கிற வாசுதேவன் நல்ல உயர் பதவியிலிருந்து ரிடயர் ஆகி,
சென்னை ரொடீனுக்கு செட்டில் ஆனார்.
ப்ரிட்ஜ் க்ளப், நடைப் பயிற்சி, அளவான  சாப்பாடு
என்று கம்பீரமாக இருப்பார். எப்பொழுதும் ஒரே போல இருந்தால் வாழ்க்கை என்று எப்படி அழைப்பது
சோதனையாக சௌந்தரம்,,அம்மாவின் கசின் 
கீழே விழுந்து முழங்காலில் முறிவு என்று ப்ளாஸ்டர்...போடும்படி ஆச்சு.
 மாடி ஏறிப் போய்ப் படுக்க முடியாது. கீழேயே 
Day bed ஒன்று வாங்கி அங்கிருந்தே குளியல் அறை,சாப்பாடு எல்லாவற்றையும் அமைத்துக் கொண்டார். துணைக்கு சமையல் செய்யும் அம்மாவும் இருந்ததால் 
எல்லாம் சௌகர்யமானது.
ஒரு பிரச்சினை, வாசுமாமாவுக்குச் சரியாகக் கவனிப்பு இல்லை.

மனைவி இல்லாமல் அவருக்கு ஒன்றும் செய்ய ஓடாது.
போதாதற்கு சளி,ஜுரம் எல்லாம் வந்தது.
பிள்ளைக்கோ ,மருமகளுக்கோ
நின்று நிதானித்துக் கவனிக்க முடியவில்லை.
அவர் குணமும் அப்படித்தான். சௌந்திரம் என்று 
குரல் கொடுத்த வண்ணம் இருப்பார்.
காய்ச்சலுக்கு வைத்தியரிடம் போய் வந்து மருந்து எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள்.
காய்ச்சல் சரியானாலும் இருமல் நிற்கவில்லை.
 காலை எழுந்ததும் இருமல் ஆரம்பிக்கும்.
அதுவும் காலைக்கடன் களைக் கழிக்க அவர் செய்யும் சப்தம்
கீழே சௌந்திரத்துக்குச் சிரிப்பு வரவழைக்கும்.
வீடே அதிரும் அந்தப் பல்லைத்தேய்த்து விட்டு வருவதற்குள்.
கீழே வந்து  முதல் டிகாக்ஷன், புதுசாக் காய்ச்சின பால், அளவாகக் கலந்து 
 சௌந்திரம் மேற்பார்வையில் சமையல்கார மாமி
கொடுத்தால் தான் அவருக்குச் சரிப்படும்.
அன்று அவரிடம் கேட்டுப் பார்த்தாள் சௌந்திரம். நீங்களும்
கீழேயே படுத்துக் கொள்ளலாம். லைப்ரரி இருக்கும் இடத்தில் உங்கள் கட்டிலைக் கீழே கொண்டுவந்து போட்டுக்கலாம். ஒவ்வொரு நாளும் நீங்கள் இருமும் போது
எனக்கு சிரமமாக இருக்கு. ஏதுவும் உதவி செய்ய முடியவில்லையே என்று தோணுகிறது
என்றாள் மெதுவாக.
 அதெல்லாம் என்னால் முடியாது. கீழே எனக்குத் தூக்கம் வராது என்றவரை அயற்சியுடன் பார்த்தாள் சௌந்திரம்.
அடுத்த நாள் கீழே இறங்கி வந்த மருமகள் முகத்தைப் பார்த்து
என்னமா உடம்புக்கு முடியலையா என்றாள்.
அப்படி இல்லைமா, காலையில் எழுந்திருக்கும்போதே
அப்பா இருமல்தான் குழந்தைகளையும் என்னையும் எழுப்புகிறது.
மெதுவாகப் பல் தேய்க்கக் கூடாதாம்மா.
எதுக்கு இத்தனை சத்தம்.என்றாள் மருமகள்.
சௌந்திரத்துக்குப் பிரமிப்பானது. தொடரும்.😃😃😃

14 comments:

Avargal Unmaigal said...

இருமல் வந்தால் உடனடியாக போகாமல் தொடர்வது போல இந்த இருமலின் கதையும் தொடர்கிறதே...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். உங்களுக்குத ்தான் தெரியுமே. என்னால் எதையும் சுருக்கமா சொல்லத் தெரியாது என்று.:) அடுத்த பதிவில் முடித்து விடலாம்மா.

நெல்லைத் தமிழன் said...

உடல் நலமே பெரிய சொத்து என்று சும்மாவா சொன்னார்கள்? வயதானவர்கள் சிறு குழந்தை போலத்தான், இருந்தாலும் குழந்தையை பொறுமையாகவும் ஆவலோடும் கவனிக்கும் அளவு முதுமையில் பெரும்பாலும் ஆதரவு கிட்டுவதில்லை. தொடர்கிறேன்.

தி.தமிழ் இளங்கோ said...

// வல்லிசிம்ஹன் said... ஆமாம். உங்களுக்குத ்தான் தெரியுமே. என்னால் எதையும் சுருக்கமா சொல்லத் தெரியாது என்று.:) அடுத்த பதிவில் முடித்து விடலாம்மா. //

இருமல் பற்றிய பதிவாக இருந்த போதும்,படித்தவுடன் என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். தொடர்கின்றேன்.

ராஜி said...

இருமல் தொடர்வதுப்போல ஒஇருமலின் கதையும் தொடருது...

ஸ்ரீராம். said...

இது ஒரு இருமலின் கதையா! தொடர்கிறேன். தேவை தீரும்போது மதிப்பும் குறைந்து விடுமோ? பயமாகத்தான் இருக்கிறது!

ஏகாந்தன் ! said...

உங்கள் பதிவுக்கு வருகிறேன் இன்றுதான். பொருணைக்கரையின்பக்கமும் கொஞ்சம் போய்வந்தேன்.

பெரிசுகளின் பாடு, பெரும்பாடுதான் வீட்டில். என்னதான் ஜாக்ரதையாகப் பார்த்துக்கொண்டாலும், உடம்பு ஏதாவது சீண்டாமல் இருப்பதில்லை. பெரியவர்களின் சத்தங்களை (பழக்கதோஷத்தினால் வந்தாலும்) சிறிசுகள் அட்ஜஸ்ட் செய்துகொள்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. நான் அவர்களின் கோணத்திலிருந்தும் பார்க்கிறேன். இருந்தும் தொடரும் இருமல்... தொடரும் வாழ்க்கை...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடரும்...காத்திருக்கிறோம்.

நெல்லைத் தமிழன் said...

ஆமாம் ஶ்ரீராம், பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் சட்டென நீங்கள் எழுதியதைப் படிக்கும்போது கலக்கம் வருவது நிஜம்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜி, எல்லோர் வாழ்க்கையிலும் உண்டானது தானே. வந்ததுக்கு நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
எங்க தலைமுறைக்குப் பெரியவர்கள் எது செய்தாலும்
அவர்கள் நன்றாக இருக்கணும்னு மட்டும் தான்
நினைப்போம்.
வித்யாசம் கிடையாது.
இப்ப எல்லாம் சுத்தம், நாசூக்கு, எல்லாம் கற்றே வருகிறார்கள்.
அவர்களைச் சொல்லிப் பயனில்லை.
நாம் ஒதுங்கி விடணும். ரெண்டு பக்கமும் நன்மை.
பயம் வேண்டாம் ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏகாந்தன்,
முதல் வருகைக்கு மிக நன்றி மா. இரு பக்கமுத்துக்கும் இதமான தீர்வு
எலிப்பாழ் ,தனிப் பாழ் கதைதான்.
உங்கள் கதையில் வரும் அகிலா ஸ்ரீதர் காலம் மாதிரி இதுவும் பீரியட் கதை.
உறவும் கலந்திருந்தது.
எனக்கும் பின்னால் இருக்கும் சந்ததி தப்பாகப் புரிந்து கொள்ளக் கூடாது இல்லையா.
ஏனெனில் எங்க வீட்டுக்காரரும் இருமல் மன்னன்.
உங்கள் கதையை இனிமேல் தான் படிக்க வேண்டும். சொல்வனத்தில்
கண்டுபிடிக்க முடியவில்லை.படித்துப் பின்னூட்டம் செய்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா, வருகைக்கு மிக நன்றி.
இரு நாள் தலைவலியில் போய்விட்டது.
இன்று எழுதிவிடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன், எதுக்குமா பயம். எதிர்பார்ப்புகள் குறைந்தால் ஏமாத்தம் இல்லை.
பயப்படவே கூடாது.