Blog Archive

Friday, August 18, 2017

வத்தக் குழம்பும் வெந்தியக் குழம்பும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வத்தக் குழம்பும்  வெந்தியக் குழம்பும்
***************************************************************
இரண்டும் ஒன்றல்ல.
வத்தல் போட்டுத், தானில்லாத குழம்பை நாங்கள் வத்தக் குழம்பு என்போம்.
மெ...வெந்தியக் குழம்பில்  பருப்புகள் கலவை சேரும்.
குழம்புப் பொடியும் உண்டு.
புளிக்கரைசலோடு உப்பு, குழம்புப் பொடி,தனியாப் பொடி கரைத்து வைத்துவிடுவேன்.
பிறகு நாலு கரண்டி நல்லெண்ணெய் விட்டு,
மெந்தியம் இரண்டு ஸ்பூன்
அது சிவந்த பிறகு கடுகு, வெடித்த பிறகு,
துவரம் பருப்பு,கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு
எல்லாம் போட்டுச் சிவந்தவுடன் நறுக்கிய, வெங்காயம், வேணும்னால் இரண்டு பூண்டு
போட்டுப்
புளிக்கரைசலை அதன் தலையில்
சேர்க்க வேண்டும். ஒரு கட்டிப் பெருங்காயம் போடலாம். சுண்டைக்காய்
அளவு சொல்லலாம்.
கொதிக்க விட்டுக் கொஞ்ச நேரமானதும்
எண்ணெய் பிரியும் நேரம் கருவேப்பிலை ,கொத்தமல்லி சேர்க்கலாம்.
பூர்த்தியாகிறது வெ..மெ குழம்பு..

இதையே, வறுத்த பருப்புகளை அரைத்தும் சேர்க்கலாம். இந்தக் குழம்புக்கு, நிலக்கடலையை வறுத்துப் போட்டால் அமிர்தம்.

அப்பளம்  பொடித்துப் போடுவதும் உண்டு.

9 comments:

ஸ்ரீராம். said...

அமிர்தம்.

நெல்லைத் தமிழன் said...

மெந்தியக் குழம்புக்கு கருவேப்பிலை வாசனையே எதேஷ்டமாச்சே. கொத்தமல்லி நல்லாருக்புமா? இதுவரை மெந்தியக்குழம்புக்கு வெங்காயம் சேர்த்ததில்லை.

Anuprem said...

வெ குழம்பு...ம்ம் நல்லா இருக்கு அம்மா...

படமும் போட்டு இருக்கலாமே...


இன்றைக்கு வத்த குழம்பு ஸ்பெஷலா..

உங்க தளத்தில், துளசி அம்மா தளத்தில் எல்லாம் குழம்பு மணக்குது..

Anuprem said...

போன பதிவுக்கு போய் படமும்....

மெ...வெ குழம்பின் காரண பெயரும் அறிந்துக் கொண்டேன்....

வல்லிசிம்ஹன் said...

Thanks Sriram. you will make a much more nicer version I know.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன்,
அம்மா,பாட்டி செய்யும் மெந்தியக் குழம்பில் வெங்காயம் இருக்காது, கொத்தமல்லியும் இருக்காது. எங்கள் எஜமானருக்கு எல்லாம் வேண்டும். அதுதான் இங்க ஸ்பெஷல்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனு மா, எனக்கே ஆச்சரியமா இருந்தது. கீதா சாம்பசிவமும் எழுதி
இருந்தார்கள். ஒரே அலைவரிசை என்று தான் சொல்ல வேண்டும்.
தொடர்ந்து நீங்கள் அனைவரும் படிப்பது எனக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி.
நன்றி ராஜா.

Thulasidharan V Thillaiakathu said...

மணக்கிறது!! கறிவேப்பிலை மட்டுமே போதுமோ...கொத்தமல்லி மணத்தைத் திசை திருப்பிவிடாதோ வல்லிம்மா

கீதா

மாதேவி said...

சுவை.