About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, July 27, 2017

சீதை, ராதை,கோதை, மீரா இன்னும்.....

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
முதல் இருவரும்   புராண நாயகிகள் முறையே ராமனுடனும் , கண்ணனுடனும்   கூடும்  அனுபவங்களை படித்திருக்கிறோம்.
நம் ஆண்டாளோ, நினைவிலேயே திருமணம் செய்து ,கனவிலேயே  காளை யைக் கண்டு,  அரங்கனை அடைந்தாள்.
மீராவும் அதே போல  உருகி உருகிக் கண்ணன் தாள் அடைந்தாள்.
என்ன ஒரு மன உறுதி.
எத்தனை எதிர்ப்புகளையும், கேலிகளையும், பழிப்புகளையும் சந்தித்தார்களோ.
இப்பொழுதோ, இந்த நாளில்  திரு ஆடிப்பூர மங்கைக்கு நிகர் வேறு யார்.
எந்த விதை இப்படி ஒரு ஆல  விருட்சமாக
அவர்கள் உள்  புதைந்தது.

என்ன ஒரு வலிமையான எண்ணம் இருந்தால், மானிடர்க்கென்று வாழ்க்கைப் படேன்  என்று சொன்ன வண்ணம் செய்தாள்  கோதை. ஆச்சர்யமான அதிசயமான பிறவி.
திருவிடந்தை கோவில் சென்ற பொது மனதில்  உலாவியவள் கோதை தான்.

பூமா தேவி திருமால் புகழ்  பாட வில்லிபுத்தூர் வந்தாள்  என்று முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ஹ சுவாமிகள் சொல்வார்..
அதைக் கண்கூடாக மட்டப்  பள்ளி   க்ஷேத் ரம்   சென்ற பொது பார்த்தோம்.  அந்த ஊர் மக்களுக்குத் தமிழ் தெரியாது. ஆனால் கோதையைத் தெரியும்.
தினம் அவளைத்  தோளில்  ஏற்றி க்  கொண்டு பாவைப் பாடல்களை பா டிக் கொண்டாடிய அழகே அழகு.
அவர்கள் பக்தி கோதையின் பக்திக்கு குறைந்ததில்லை.
கோதை  தன்  பாசுரங்களில் கறவைகள் பின் சென்று கானம் சென்று உண்ட மகிமையை அவர்கள்  நேரிலேயே  செய்து காண்பித்தார்கள்.
அம்மா கோதா , உன்னை எட்டு வயது வரை த் தரிசனம்  செய்யும்
பேறு
 கிடைத்தது. உன் மண்ணில் விளையாடும் புண்ணியம் கிடைத்தது. உன் தேரில் ஏறிக்  குதித்துப் புரண்டோம். உன் கண்ணன் மேய்த்த பசுக்களின் பாலின் சுவையில் வளர்ந்தோம்.

அனைத்திற்கும் பூர்வ ஜென்ம புண்ணியமே காரணம். நீக்கமற நிறைந்திருக்கும் பூங்கொத்தாய் எந்நாளும் எங்கள் இதயத்தில் இருந்து  வழி நடத்து.  ஆண்டாள் ரெங்கமன்னார் திருவடிகள் சரணம். பெரியாழ்வார், கருடாழ்வார் திருவடிகள் சரணம்.

18 comments:

நெல்லைத் தமிழன் said...

இந்த இடுகை எனக்கு ஆச்சர்யமே. இப்போதுதான் நான் ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிமை வீடியோ (வேளுக்குடி பின்னணிக்குரல், இந்து அறநிலையத்துறை வெளியிட்டது) பார்த்தேன். இங்க வந்தா உங்கள் இடுகை.

மட்டப்பல்லி நரசிம்ஹர் ஸ்தலம் இல்லையோ. அங்க எங்க 'பாவைப் பாடல்கள்' எல்லாம்? அதுவும் இயற்கையாக அமைந்த ஸ்தலம் தானே.

ஸ்ரீராம். said...

ஆடிப்பூரப் பதிவு சிறப்பு அம்மா. நீங்கள் திருவில்லிப்புத்தூரில் இருந்தவர். எனக்கும் எனது பணிக்காலத்தின் ஆரம்பத்தில் கொஞ்ச நாட்கள் அந்தப் பேறு கிடைத்தது.

வெங்கட் நாகராஜ் said...

எல்லோரும் இன்புற்றிருக்க எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்....

நல்ல பகிர்வும்மா...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். நெல்லைத்தமிழன், மட்டப்பல்லி ந்ருசிம்ஹ க்ஷேத்ரம் தான்.
அங்கே கோதை நாச்சியார் சன்னிதியும் உண்டு. ஆந்திராவில் ஆண்டாள் பக்தி மிக அதிகம். ஆமுக்த மால்யதா, கிருஷ்ண தேவராயர் எழுதி இருக்கிறாரே.

அத்தனை பாசுரங்களையும் பாடினார்கள். அதீத பிரேமை. மா. வேளுக்குடி
பேசி இருக்கிறாரா. யூ டியூபீல் இருக்கிறதாமா. கேட்கிறேன். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

ஶ்ரீராம் மதுரை மீனாக்ஷஇயும, வில்லிபுத்தூர் கோதையும் நம்மால் மறக்க முடியுமா.

Geetha Sambasivam said...

ஆந்திராவில் மார்கழி மாதம் தினமும் திருப்பாவையைத் தெலுங்கு உச்சரிப்புடன் பாடிக் கேட்கலாம். :) மற்றபடி நல்ல இனிமையான அழகான பதிவுக்கும் தகவல்களுக்கும் நன்றி ரேவதி.

கோமதி அரசு said...

அருமையான பதிவு. நேற்று பக்கத்து வீட்டு பையன் ஆடிப்பூர தேர் பார்த்து விட்டு வந்தேன் என்று குங்கும பிரசாதம், பால்கோவா இரண்டும் கொடுத்தார்.

Anuradha Premkumar said...

அருமை அம்மா...

ஆண்டாள் ரெங்கமன்னார் திருவடிகள் சரணம்.....

பெரியாழ்வார், கருடாழ்வார் திருவடிகள் சரணம்...

மாதேவி said...

சூடிக் கொடுத்த பூங்கொடியே அருமை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. நாங்கள் மட்டப்பல்லி சென்றதும் ஒரு மார்கழியில் தான்.
நண்பர் திவாகரை நினைத்துக் கொண்டேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, அந்தப் பிள்ளை நலமாக இருக்கட்டும். இந்த நற்செயல்களே நமக்கு ஆதாரம். தேடி வந்த பிரசாதம் எத்தனை புனிதமானது. மிக இனிமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுராதா, ஆண்டாள் நாச்சியார் அருள் எப்பொழுதும் நம்முடன் பெருகி இருக்கட்டும். வாழ்க வளமுடன் அனு.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா மாதேவி, பார்த்து எத்தனை நாட்களாச்சு அம்மா. எப்படி இருக்கிறீர்கள். நலம்தானே. நன்றி மா.

Durai A said...

ரொம்ப அழகாண படம். யார் வரைந்தது?

அப்பாதுரை said...

யார் வரைந்த படம்?

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் துரை. இந்தப் படத்தைக் கூகிளில் தான் கண்டெடுத்தேன். ஸீதா தேவி என்று தேடிய
போது வேறு வேறு படங்கள் கிடைத்தன.
யார் வரைந்தது என்று தெரியவில்லை. ஆரண்ய காண்டத்தில் வரும் காட்சி.

ராமனும் சீதையும் ஆற்றில் நீராடி வெளியே வரும்போது, நெற்றியில் திலகம் இல்லையே என்று ராமன் , அருகில் இருக்கும் ஏதோ பூவின் வண்ணத்தை ,பாறையில் தேய்த்துத் திலகம் வைத்ததாக, அனுமனிடம் சீதை சுந்தர காண்டத்தில் சொல்கிறாள்.
அப்படி இருந்தவர் என்னை எப்படி மறந்தார் என்று வெதும்பி அழுகிறாள்.
என்னிடம் இருக்கும் ராமாயணத்தில் வரும் வர்ணனை இது.

அப்பாதுரை said...

ஆகா.. அருமையான வர்ணனை.. லயமும் நயமும் ரசிக்க வைக்கிறது. வால்மீகில இப்படி இருக்கா இல்லை சக்கரவர்த்தி திருமகன்ல பெரியவரு சேர்த்துக்கிட்டாரா?

வல்லிசிம்ஹன் said...

இது வால்மீகியின் ராமாயணத்தில் வரும் சுந்தரகாண்டப் பதிவு துரை.
மோதிரம் தொலைக்கும் காட்சி ஒன்று வரும்.
எனக்கு சம்ஸ்கிருதம் தெரியாது. அதையே தமிழில் எழுதினார் ஒரு உறவினர். 50 வருடங்களுக்கு முன்னால்.அதில் இந்தக் காட்சி உண்டுமா.