Blog Archive

Friday, May 05, 2017

முதுமை ஒரு வரம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்..      சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.
உண்மை தான். அன்பு வார்த்தைகள் அதிகம் பேசாமல்
முதுமை கழிவது மிகச் சிரமம்.
அதைவிடச் சிரமம்
செய்யாத செயலுக்குப் பழி ஏற்பது.  லக்ஷ்மிப்
 பாட்டி ஒரு தடவை இது போல மாட்டிக் கொண்டார்.
மருமகள்  கணவனிடம் சொல்ல,
  மகன் பாட்டியிடம்  சுடு சொல் சொல்ல
பாட்டி விழித்தார்.
நான் ஒண்ணும் சொல்லலியேப்பா.
 பக்கத்துவீட்டுச் செல்லியிடம் சாதாரணமாகத்தான் சொன்னேன்.
அவளுக்கு ஏதோ மனக்குறை. சரியா சாப்பிட முடியலை. ஒவ்வொரு தடவையும்
அவள் ...மருமகள்
கணக்கு எழுதும்போது நான் ஏதோ தப்பு செய்யற மாதிரி இருக்கு.  இப்படின்னு.,,,,,
 புத்திசாலிதான் அவள். 65 வயதில் இத்தனை கிழடு தட்டிப் போச்சென்னு
வருத்தமாக இருந்தது.

ஆதரவா நாலு வார்த்தை சொன்னேன். அவளுக்கு நாலும் பிள்ளைகள்.
 இரண்டு நாட்கள் அங்கே போய் இருந்துவான்னு.
மத்தபடி இந்த அகத்தைப் பற்றிப் பேசலியே என்று.
   இனிமே அங்கே போகாதே. நீ அவளைவிடப் பெரியவள்.
எத்தனையோ சௌகர்யமாக இருக்கிறாய்,
வாயால் கெடுத்துக் கொள்ளாதே என்று பொரிந்துவிட்டுப் போய்விட்டான்.
  ஆஹா,நமக்கென்று ஒரு நல்ல தோழி இருந்தாள்.
இனி எப்படி என்றவளுக்கு, வரப்பிரசாதம் பேத்தி வழியாகக்
கிடைத்தது. புத்தக சந்தையில் வாங்கியதாக, லக்ஷ்மி கடாக்ஷம்,
 அமரதாரா, கள்ளிக்காட்டு இதிகாசம் எல்லாம்
கொடுத்துவிட்டுப் போனாள்.
  கையில் வைத்துப் படித்தால் கை வலிக்கும் என்று கூடவே
ஒரு அலுமினிய மேஜையும் வாங்கி வந்திருந்தாள்.
  நெல்லுக்கு இறைத்த நீர் பாடல் தான்
நினைவுக்கு வந்தது லக்ஷ்மி பாட்டிக்கு.
  தாளுண்ட நீரைத் தலையால் தரும் தென்னை
போன்ற பேத்தியை ஆதரவுடன் அணைத்துக் கொண்டாள்.

14 comments:

Yaathoramani.blogspot.com said...

பேத்தியால் கிடைத்த வரம்
ஒரு விடிவு
எனக் கூடச் சொல்லலாம்
சொல்லிச் சென்றவிதம் அருமை
வாழ்த்துக்களுடன்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமணி ஜி,
முதியவர்கள் தவறே செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. குழந்தைகள் தப்பு செய்தால் மன்னிக்க மாட்டோமா.
அதே கருணை இவர்களிடமும் காட்ட வேண்டும் என்று தோன்றியது. இப்போ
லக்ஷ்மிப் பாட்டி இல்லை. அதி தீவிர நாவல் ரசிகை. மிக நன்றி மா.

கோமதி அரசு said...

முதுமை ஒரு சிலருக்கு வரம், ஒரு சிலருக்கு சாபம்.
லக்ஷ்மி பாட்டிக்கு செய்யாத தப்புக்கு சுடு சொல் கிடைத்தது வருத்தம்.
இப்போது உள்ள சில முதியவர்களுக்கு பேச ஆள் இல்லையென்றால் இணையம், வானொலி , புத்தகங்க்கள், தொலைக்காட்சி என்று இருக்கிறது அந்தக் கால முதியவர்களுக்கு கதை புத்தகம், சாமி புத்தகங்கள் கோவில் இது தான் அடைக்கலம்.
முதுமை ஒரு வரம் அது நம் கையில் இல்லை என்பதை உணர்ந்து வருகிறேன் இறைவன் அருள்தான் அதை தீர்மானிக்கிறது..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வும்மா.

நெல்லைத் தமிழன் said...

வாழ்க்கையே, என்றைக்கும் கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் அளிக்கிறது. அப்பா வாழ்ந்த கேரக்டருக்கு (குழந்தை பெற்ற வயதில் சிடு சிடு) மகன் வரும்போது, அப்பாவுக்கு பேரன் பாலைவனச் சோலையாக வாழ்க்கையை அனுபவிக்க வைக்கிறான்.

பாட்டியிடம் பையன் கருணை காட்டுவது பொதுவாக சாத்தியப்படாது (அந்த வயதுக்குரிய படபடப்பு). சிலர்தான் exceptionஆக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

அனுபவத்தைச் சொல்லிச் சென்றது ரசிக்கும்படி இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, முன்பு ஒரு விவாதம் வலைப்பதிவில் நடந்தது உங்களுக்கு
நினைவு இருக்கிறதா. கண்மணி டீச்சர் என்று பதிவர்
அப்பொழுது நம் விவாதங்களில் பங்கு கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு நிறைய யோசித்திருக்கிறேன்.
அப்பொழுது துளசி,நான் எல்லாரும் வயதானல் ஓல்ட் ஏஜ்
ஹோம் செல்ல வேண்டும் .சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றே பேசினோம்.
இன்று நிலை மாறி விட்டது.
பலவிஷயங்களில் எண்ணங்களும் மாறிவிட்டன.
சிலபல விஷயங்களைப் பொறுமையாக எதிர் கொள்ள வேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். ,விவரமாக எழுத நினைத்து முடித்துவிட்டேன். அந்தப் பேத்தி நான் தான்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் நெல்லைத்தமிழன். அவரவர் முறை வரும்போது
குணங்களும் அணுகுதலும் மாறுகின்றன. இன்று நீ நாளை நான் கதைதான்.
எங்கள் அப்பா,சித்தப்பா,மாமாக்கள் அனைவரும்
தங்கள் அம்மாக்களை நல்லபடியாகவே வைத்துக் கொண்டார்கள்.
வயதான சமயம் அவர்களின் நடை,பேச்சு எல்லாம் பாட்டிகளிடம் மாறின அளவு தாத்தாவிடம்
மாறவில்லை. இதுவும் பெண்களின் எண்ணங்களைப் பொறுத்தே
அமைந்தன.
பாட்டி பேத்தி, தாத்தா பேரன் உறவு வெகு அழகானது.

ஸ்ரீராம். said...

சொல்லும் கருத்து ஒன்று. புரிந்து கொள்ளப்படுவது வேறு என்பது அடிக்கடி நிகழும் அனுபவம். "நான் சொன்னதற்குத்தான் நான் பொறுப்பு. நீ புரிந்து கொண்டதற்கல்ல" என்று ஆங்கிலச் சொல் ஒன்று உண்டே...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். சொன்ன வார்த்தைகள் சொன்ன விதத்தில்
புரிந்து கொள்ளப் படும் விதம் மாறத்தான் செய்கின்றன.

அலைவரிசை பொருந்துவது சிலரிடமே.
அம்மா பையன் இதில் தனி ரகம்.Thanks ma.

Angel said...

பாட்டிக்கு நல்ல துணை அன்பான பேத்தி வழியாக கிடைத்ததே ..
ஆனால் சில நேரம் எல்லாவற்றையும் சீரியஸாகவும் எடுக்கும் மற்றும் கோள் சொல்லும் சிலரையும் கண்டால் நடுக்கம் வரும் எனக்கும் ..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல், அது போல மனிதர்களின் பழக்கம் நமக்கு வேண்டாம்.
இறைவன் நமக்கு நற்சொல் சொல்வாரோடு இணைத்தால் போதும்.

நாம் தோழமை கொண்டதே அன்பினால் தானே அம்மா.

Geetha Sambasivam said...

ஶ்ரீராம் சொன்னதைப் போல் நானும் பலரிடம் நீ புரிந்து கொண்டதுக்கு நான் பொறுப்பில்லை என்று சொல்வது உண்டு. மிகவும் யோசித்துப் பேசினால் கூடப் பல சமயம் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா. ஏதோ முன்னால் சொல்வார்கள். சந்த்ராஷடமம் என்று.
இப்போது எல்லா நாட்களில்லும் எச்சரிக்கையாக இருந்தாலும்
மற்றவர்களின் கோபத்துக்கு நாம்
காரணம் என்று நினைக்கவே முடியாது.
விட்டுவிட வேண்டியதுதான்.