Blog Archive

Saturday, April 29, 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  சமீபத்தில் கிடைத்த வாட்ஸாப் செய்தி. 
 நீ என்ன சொல்கிறாயோ, அதுவே உன்னைத் தேடி வந்து அடைகிறது.
 தினமும்  காலையில் எழுந்து கண்ணாடி முன் நிற்கும்போது
நான் நன்றாக இருக்கிறேன். எனக்குக் குறை ஏதும் கிடையாது.
ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றும்,
எல்லோரையும் நேசிக்கிறேன்,, எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள்
உலகம்   முழுவதும் நன்மைகள் நடக்கின்றன.
என்று இது போல பாசிடிவ் நினைவலைகளை நம்மைச் சுற்றிப் பரப்ப வேண்டும்.
இதுதான் அந்த செய்தி. ஏற்கனவே ரெய்க்கி கற்ற போது இந்த ஐ ஆம்.
கொள்கை கற்றது மறந்துவிட்ட நிலையில்
இது உற்சாகம் கொடுப்பதாய் இருந்தது.

எதிர்மறை எண்ணங்களைத்தவிர்த்தாலே  பாதி வாழ்க்கை நிமிர்ந்துவிடும்.
ஆனால் முதலில் மந்தில் உதிப்பதென்னவோ, இப்படி ஆகிறதே
  விடிவே கிடையாதா. இன்னும் எத்தனை நாள் இப்படி
என்கிற எண்ணங்களே. 
நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்குதுன்னு யாரோ 
எப்பவோ சொன்னது நினைவுக்கு வருகிறது.
எத்தனை உண்மை அதில்.

நடப்பவை இருக்கட்டும் நல்லவற்றை நினைப்பதில் தவறு இல்லையே.
நடந்த நல்லது அல்லாதவைகளை நினைத்து வருந்தி
அதிலேயே உழல்வதில் என்ன லாபம் இருக்க முடியும்.

எல்லாம் இருக்கட்டும் நீ எப்படி என்கிறீர்களா.
இதோ முயன்று கொண்டிருக்கிறேன்.
 பிறருக்குப் புத்திமதி சொல்வது வெகு சுலபம்
இல்லையா.

5 comments:

Angel said...

நல்ல பகிர்வு அம்மா

ஸ்ரீராம். said...

எண்ணம் போல வாழ்வு! நல்ல வார்த்தைகள் நல்ல எண்ணங்கள் பாஸிட்டிவ் அலைகளை உண்டாக்கும் என்பது உண்மைதான். உணர்ந்திருக்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

இன்றைய சூழலில் மிக மிக
அவசியமானப் பதிவு
சுருக்கமாக எனினும்
மிக மிக நேர்த்தியாக

வாழ்த்துக்களுடன்...

நெல்லைத் தமிழன் said...

எண்ணம்போல் வாழ்வு என்று படித்திருக்கிறேன். கடை பிடிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது. நேர்மறைச் சிந்தனைகள், நேர்மறை விளைவுகளை ஆகர்ஷிக்கிறது என்று சொல்கிறார்கள். நல்ல பதிவு.

Geetha Sambasivam said...

எனக்கு ஏனோ இந்த வண்ணத்தில் படிக்கிறது சிரமமாக இருந்தது.