Blog Archive

Saturday, March 25, 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
ஜானு ராகவன்.........பகுதி 3.
+++++++++++++++++++++++++++++++++++++
வண்டியைச் சீனுவின் வீட்டுக்குத் திருப்பினான் ராகவன்.
அந்த அதிகாலை வேளையிலும் ஒரே கலகலப்பு.
அதிகம் வாய்திறந்து பேசாத தன் காரியதரிசியின் வீடு எப்பொழுதுமே அமைதியாகப்
பார்த்திருக்கும் ராகவனுக்கு வியப்பாக இருந்தது.

கார் சத்தம் கேட்டு வெளியே வந்த சீனுவைப் பார்த்து இன்னும் ஆச்சரியம்.
அழகான மயில்கண் வேஷ்டி,சந்தனக்கலர் பட்டு சட்டை, வேட்டியைப் பிடித்து நிற்கும் 6 வயது செல்ல மகள்  நித்துக்குட்டி. அதுவும் பட்டுப் பாவாடை.
ஒன்றும் புரியாமல் நிற்கும் ராகவனை வாங்க சார் என்று வரவேற்றார் சீனுவோட தந்தை.
கரெக்டா  வாழ்த்த வந்துவிட்டீர்களே. இன்னிக்கு அவர்களுக்கு கல்யாணமாகி 10 வருடங்கள் ஆகிறது சார்.
நீங்களும் வாழ்த்துங்கள் என்று உற்சாகமாக உள்ளே
அழைத்து வந்தார்.
ராகவன் தயங்கினான்.
ஏன் இந்த மாதிரி விஷயங்களில் தனக்கு சுவை இல்லாமல் போகிறது.
ஒரு இயந்திர வாழ்க்கை அடிமையாகத் தான் மாறியது எப்போது
என்று வருந்தினான்.
கைகளில் இருந்த  சாக்கலேட் பெட்டி நினைவுக்கு வந்தது.
வண்டியிலிருந்து எடுத்து வந்து குழந்தை கையில் கொடுத்தான்.

சார் ஏதாவது முக்கிய விஷயமா என்று கவலையுடன் விசாரித்த சீனுவைப் பார்த்து முதுகில் தட்டிக் கொடுத்தான்.
பக்கத்துப் பிள்ளையார் கோவிலுக்கு வந்தேன் அப்படியே..  You carry on. Nothing that important
என்றபடி விரைந்துவந்து  வண்டியை மீனம்பாக்கம் செலுத்தினான்.
 அவன் உள்ளே விரையவும் மார்க் தம்பதியர் வெளியே வரவும், அங்கிள் ராக்ஸ்,
என்று அவன் குழந்தைகள், லென்னியும் க்ரிஸ்ஸும் அவனை ஓடி வந்து அணைக்கவும் சரியாக
இருந்தது.
   மார்க்கை ஏறெடுத்துப் பார்த்த ராகவன் whats wrong you look under weather என்று அணைத்துக் கொண்டான்.
 oh its something he ate .Rags. Lets go to the hotel. this heat is killing .என்றாள் மோனிகா.
 அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த பெரிய வண்டியில்
அவர்களையும் பொருட்களையும் அமர்த்தித் தன் வண்டியில்
 பின் தொடந்தான் ராகவன்.இதென்னடா புதுக்கவலை.

விடுதி வந்ததும் மார்க், உடை மாற்றி படுக்கையில் சரிந்தான்.
அவன்பக்கம் உட்கார்ந்த மோனிகா ,ராக்ஸ் எங்கள் ப்ரொக்ராம்  இன்று வேண்டாம்.
 என்றபடி பெட்டியைத் திறந்தாள்.
இது உன் ஜானுவுக்கு என்று டூரிஸ்ட் சாக்கலெட் பெட்டியும்,
இதோ இந்த மியூசிக்கல் வீடும்.
ம்ம் வீட்டின் கதவைத் திற என்று சிரித்தாள்.
அழகான பெண் பிம்பமும் அவள் துணையும்
ஏடெல்வைஸ் என்ற பழையபடப் பாடலைப்  பாடியபடி வெளியே வந்தார்கள்.
ராகவனின்  ஆச்சரியம் அடங்கவில்லை.
 I know she loves Sound of Music and she is an incurable romantic. thats why I got it for her Birthday
she is such a sweet soul. Rags you are a lucky man.





3 comments:

ஸ்ரீராம். said...

தொடர்பில்லாமல் சிறு பகுதியாக இருக்கிறதே...

Thenammai Lakshmanan said...

தொடர் கதையாம்மா ! அருமையா இருக்கு !

Geetha Sambasivam said...

இதை ஏற்கெனவே படிச்சேனோ? எங்கே?